பேச்சு:பயங்கரவாதம்தீவிரவாதமா பயங்கரவாதமா?தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு வணக்கம். Terrorism, Extremism ஆகிய ஆங்கிலச் சொற்களுக்கு இணையான, பொருத்தமான தமிழ்ச் சொற்கள் குறித்து உதவி தேவைப்படுகிறது. Terrorism எனும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைக்கு இணையாக பயங்கரவாதம் எனும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளது. Extremism எனும் ஆங்கிலக் கட்டுரைக்கு இணையான கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லை. தீவிரவாதம் எனும் பக்கத்தைத் தேடினால்... அது பயங்கரவாதம் பக்கத்திற்கே இட்டுச் செல்கிறது. ஆனால் தீவிரவாதம் எனும் சொல்லை அடிப்படையாகக் கொண்டே பகுப்புகளின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. Terrorism என்பதனை பயங்கரவாதம் என்றும் Extremism என்பதனை தீவிரவாதம் என்றும் நான் கருதுகிறேன். பயங்கரம் என்பது வடமொழிச் சொல்லாக இல்லையெனில், terrorism என்பதனை பயங்கரவாதம் என்றே குறிப்பிடலாம் எனக் கருதுகிறேன். அவ்வாறெனில், பகுப்புகளின் பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட வேண்டும்! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:46, 1 மே 2025 (UTC) இரவி (பேச்சு) 14:41, 2 மே 2025 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia