பேரியம் குளோரைடு புளோரைடு (Barium chloride fluoride) BaClF என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும்.[1][2]பேரியம்குளோரின், புளோரின் தனிமங்கள் சேர்ந்து இந்த சேர்மம் உருவாகிறது.[3] இயற்கையாகவே ஈய ஆலைடு கனிமமான மேட்லோகைட்டு குழுவில்[4] சாங்பீசானைட்டு என்ற கனிமமாக இது தோன்றுகிறது. சீனாவிலுள்ள பயான் ஓபோ என்ற கனிம மாவட்டத்தில் பேரியம் குளோரைடு புளோரைடு வெட்டி எடுக்கப்படுகிறது.[5]
தயாரிப்பு
பேரியம் குளோரைடு மற்றும் அம்மோனியம் புளோரைடு ஆகியவற்றை ஒரு கரைசலில் வீழ்படிவாக்கி படியவைப்பதன் மூலம் பேரியம் குளோரைடு புளோரைடு தயாரிக்கலாம்.
இயற்பியல் பண்புகள்
வெண்மை நிறப் படிகங்களாக பேரியம் குளோரைடு புளோரைடு உருவாகிறது.[6] BaClF இன் படிக அமைப்பு புளோரைடு வகை BaF வடிவத்தின் உருக்குலைந்த நாற்கோணகம் ஆகும்.[7]
பேரியம் குளோரைடு புளோரைடு தண்ணீரில் சிறிதளவு கரையும்.[8]