பேர்ள் துறைமுகத் தாக்குதல்

பேல் துறைமுகத்தை ஜப்பானிய விமானங்கள் தாக்கியபோது

பேர்ள் துறைமுகத் தாக்குதல் (Pearl Harbor Attack) எனப்படும் தாக்குதல் 1941 ம் ஆண்டு டிசம்பர் 7 ல் ஹவாய்த் தீவில் இருந்த ஐக்கிய அமெரிக்க கப்பற் படை தளமான பேர்ள் துறைமுகம் மீது ஜப்பானியக் கப்பற்படைத் தாக்குதல் நடத்தியதைக் குறிக்கும். இந்த தாக்குதலுக்குப் பிறகே அமெரிக்க இராணுவம் அதிகாரப்பூர்வமாக இரண்டாம் உலகப்போரின் களத்தில் குதித்தது. இந்த தாக்குதலுக்கு ஜப்பானியர் இரண்டு பிரிவாக மொத்தம் 353 விமானங்களை பயன்படுத்தினர். இந்த தாக்குதலினால் அமெரிக்க கப்பற்படையின் நான்கு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. மேலும் 4 கப்பல்கள் பலத்த சேதத்துக்கு ஆளாகின. மேலும் 3 ஆயுதம் தாங்கி சிறு கப்பல்கள் (குருசர்ஸ்) மூழ்கின. 188 விமானங்கள் வீழ்த்தப்பட்டன. 2402 வீரர்களும் கொல்லப்பட்டனர். 1282 பேர் காயமடைந்தனர். ஜப்பானியர்களுக்கு இப்போரில் குறைந்த சேதமே ஏற்பட்டது. 29 விமானங்கள், 3 நீர்மூழ்கி கப்பல்கள் சேதமாயின. 69 ஜப்பானிய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் விளைவாக அமெரிக்கா ஜப்பான் மீது போர்ப் பிரகடன அறிவிப்பை வெளியிட்டது. இதை ஜப்பானிய தூதரகத்தின் மூலம் ஜப்பானுக்கு அமெரிக்கா அறிவித்தது.

மீண்டும் நல்லடக்கம்

யுஎஸ்எஸ் ஒக்லஹோமா என்று பெயரிடப்பட்டிருந்த அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் மீது நீருக்கு அடியிலிருந்து குண்டு வீசி ஜப்பான் நடத்தியத் தாக்குதலில் அந்தக் கப்பல் கவிழ்ந்ததால், இறந்த படைவீர்ர்களின் உடல் ஹவாயில் புதைக்கப்ட்டது. இப்போது அந்த உடல்களை அடையாளம் காண்பதற்கு மரபணு பரிசோதனை உட்பட பல வழிகள் அடையாளம் கண்டு, உடல்களை இராணுவ மரியாதையுடன் மீண்டும் நல்லடக்கம் செய்யப்படவுள்ளன.[1]

மேற்கோள்கள்

  1. பேர்ள் ஹார்பர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை அடையாளம் காண முயற்சி
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya