பைக்கோ ஐயர்
சித்தார்த் பைக்கோ ராகவன் ஐயர் (Siddharth Pico Raghavan Iyer) பிறப்பு: பெப்ரவரி 11, 1957 பைக்கோ ஐயர் என அறியப்படுகிறார். இவர் அமெரிக்க புதின எழுத்தாளர், கட்டுரையாளர் ஆவார். இவர் பண்பாடு பற்றிய எண்னற்ற நூல்களை (எழுத்துப் படைப்பு) படைத்துள்ளார். குறிப்பாக காட்மாண்டுவின் நிகழ்பட இரவு, துறவியும் பெண்ணும், பூரண ஆன்மா போன்றவைகள் ஆகும். டைம் இதழில் 1986 ஆம் ஆண்டிலிருந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். மேலும் த நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட பல பதிப்பகங்களில் தன்னுடைய படைப்புக்களை வெளியிட்டுள்ளார். ஆரம்பகால வாழ்க்கைபைக்கோ ஐயரின் இயற்பெயர் சித்தார்த் பைக்கோ ராகவன் ஐயர் ஆகும். இவர் ஆக்சுபோர்டு, இங்கிலாந்தில் பெப்ரவரி 11, 1957 இல் பிறந்தார்.இவருடைய பெற்றோர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் . இவருடைய தந்தை ராகவன் என். ஐயர் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் மெய்யியலாளர் மற்றும் அரசியல் தத்துவவாதி ஆவார்[1][3]. தாய் சமய அறிஞர் நந்தினி நானக் மேத்தா ஆவார்[1]. இவர் குசராத்து மாநிலத்தைச் சேர்ந்த மஹிபத்ரம் நில்காந் எனும் எழுத்தாளரரின் பேரன் ஆவார்.[4][5] இவரின் பெற்றோர்கள் இருவரும் பிறந்து வளர்ந்தது இந்தியாவில், பிறகு கல்வி பயில்வதற்காக இங்கிலாந்து சென்றனர்.[6] 1964 இல் பைக்கோவிற்கு ஏழு வயதாக இருக்கும் போது இவரின் தந்தை, கலிபோர்னியாவில் உள்ள மக்களாட்சி நிறுவனங்களின் கல்விக்குழுமத்தில் பணிபுரிந்துவந்தார். அதனால் தனது குடும்பத்துடன் கலிபோர்னியா சென்றார். சான்டா பார்பரா கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில் பைக்கோவின் தந்தை 1965 முதல் 1986 வரைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.[6][7][8] இலக்கியத்தில் தனது இரண்டாவது முதுகலைப்பட்டத்தினை ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றார். 2017 ஆம் ஆண்டில் மாரியோ பார்க்காசு யோசா மற்றும் பிளாசிடோ டோமிங்கோ ஆகியோருடன் இணைந்து சாப்மன் பல்கலைக்கழகத்தின் கௌரவ மருத்துவப் பட்டம் பெற்றார். தொழில் வாழ்க்கை1982 ஆம் ஆண்டில் டைம் (இதழ்) இல் பணியில் சேர்ந்தார். அதற்கு முன்பாக ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் எழுத்து மற்றும் இலக்கியத் துறையின் பேராசிரியராகப் பணி புரிந்தார். பல நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொண்டார். வட கொரியா முதல் ஈஸ்டர் தீவு வரையும், மேலும் பரகுவை முதல் எத்தியோப்பியா வரை பயணம் புரிந்தார். அந்தப் பயணங்களின் போது இரண்டு புதினம் (இலக்கியம்), புனைகதைகள் உட்பட எட்டு படைப்புகளை எழுதினார். குறிப்பாக 1988 ஆம் ஆண்டில் எழுதிய காட்மாண்டுவின் நிகழ்பட இரவு, 1991 இல் எழுதிய துறவியும் பெண்ணும், 2000 இல் பூரண ஆன்மா போன்றவைகள் அடங்கும். இதுமட்டுமல்லாது உலகம் முழுவதிலும் உள்ள பல பல்கலைக்கழகங்கள் மற்றும் இலக்கிய விழாக்களில் சொற்பொழிவாற்றினார். 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் டெட் (மாநாடுகளில்) உரை நிகழ்த்தினார். தனிப்பட்ட வாழ்க்கைபைக்கோ ஐயர் 1992 ஆம் ஆண்டு முதல் நரா, யப்பானில் வசித்தார்[9]. அங்கு தனது யப்பானிய மனைவி ஹிரோகோ டகுச்சியுடன் வாழ்ந்து வந்தார்.[2] நூல்கள்தெ ரெகவரி ஆஃப் இன்னசன்ஸ். (இலண்டன்: கான்கார்ட் க்ரோவ் பதிப்பகம், ஜூலை 1984. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88695-019-8) - அமெரிக்கக் காங்கிரசு நூலகத்திடம் இந்த நூலின் நகல் உள்ளது. 1988 ஆம் ஆண்டில் எழுதிய காட்மாண்டுவின் நிகழ்பட இரவு, சூலை, 1989 (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-679-72216-5) 1991 இல் எழுதிய துறவியும் பெண்னும், (ஆகஸ்டு 1991 / பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-679-40308-6;) 2000 இல் பூரண ஆன்மா போன்றவைகள் அடங்கும் சான்றுகள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia