காத்மாண்டு சமவெளியில் கிமு 900 முதலே மனிதக் குடியிருப்புகள் இருந்து வந்துள்ளன, இங்கு கிடைத்துள்ள தொல் பொருட்கள் கிறித்துவுக்கு முன் பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தவையாகும். இங்கு கிடைத்துள்ள மிகப்பழைய எழுத்துப் பதிவுகள் கிபி 185 ஐச் சேர்ந்தவையாகும். கௌதம புத்தர் தமது சீடருடன் கிமு 6வது நூற்றாண்டளவில் சில காலம் இங்கு வசித்ததாக கூறப்படுகிறது ஆனாலும் இதற்கு ஆதாரங்கள் இல்லை.
ஏப்ரல் - மே 2015 நிலநடுக்கத்தில் காத்மாண்டு நகரம் மிகவும் சேதமடைந்தது. எண்ணற்ற மனித உயிர்களை கொள்ளை கொண்டது. தொன்மை மிக்க கட்டிடங்களையும், வழிபாட்டுத் தலங்களும் சேதமடைந்தது.[3]