போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், ஆவடி, சென்னை
![]() போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், (சி.வி.ஆர்.டி.இ) ஆவடி, சென்னை (Combat Vehicles Research and Development Establishment (CVRDE)), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் (டி.ஆர்.டி.ஒ) (Defence Research and Development Organisation (DRDO) இயங்கும் ஒரு ஆய்வகமாகும். இது இந்தியாவில் சென்னையை அடுத்த ஆவடியில் அமைந்துள்ளது. இந்த முதன்மை ஆய்வகம் கவச போர் ஊர்திகள் (Armoured fighting vehicles) மற்றும் தகரிகளின் வளர்மானத்தில் ஈடுபட்டுள்ளது. வரலாறுஇந்திய விடுதலைக்குப் பின்பு, பாகிஸ்தானில் சக்லாலா என்ற இடத்தில் அமைந்திருந்த பொறிமுறை போக்குவரத்து நிறுவனத்தின் முதன்மை ஆய்வாளர் பணிமனை(Chief Inspectorate of Mechanical Transport Establishment (MTE) மகாராட்டிர மாநிலத்தில் உள்ள அஹமதுநகருக்கு இடம் பெயர்ந்தது. இது ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், அகமதுநகர் (Vehicle Research & Development Establishment (VRDE), Ahmednagar) என்று பெயர் மாற்றப்பட்டது. சென்னை ஆவடியில் 1965 ஆம் ஆண்டு விசயந்தா (Vijayanta MBT) தகரியினை உற்பத்தி செய்வதற்காக கனரக போரூர்தித் தொழிற்சாலை (Heavy Vehicles Factory (H.V.F) தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆய்வு மற்றும் வளர்ச்சிக்காக ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் ஒரு பிரிகை (detachment), அகமதுநகரிலிருந்து பிரிந்து ஆவடியில் தொடங்கப்பட்டது. ஆவடியில் இயங்கிய இந்தப் பிரிகை 1976 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் முழுமையடைந்த ஒரு டி ஆர். டி. ஒ ஆய்வமாக வளர்ச்சி பெற்று போரூர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (Combat Vehicles Research and Development Establishment) என்று பெயர் மாற்றம் பெற்றது. கவச போரூர்திகளை வடிவமைக்கும் பொறுப்பும் பெற்றது.[1] ஆற்றிவரும் பணிகள்பாதையிடு போரூர்திகள் (tracked combat vehicles) மற்றும் சிறப்புப் பாதையிடு ஊர்திகளையும் (specialized tracked vehicles) வடிவமைத்து முன் மாதிரிகளை (prototypes) உருவாக்கும் பணியினை சி.வி.ஆர்.டி.இ பெற்றது. சி.வி.ஆர்.டி.இ குறிப்பிட்ட வானூர்தி துணையமைப்புகளான வானூர்தி பொறி (எஞ்சின்) மற்றும் நீர்மவியல் பொறிகளையும் (hydraulic systems) வடிவமைத்துள்ளது. மற்ற டி.ஆர்.டி.ஒ ஆய்வகங்களைப் போல படைத்துறை சார்ந்த ஆயுதங்கள் வடிவமைப்பு மட்டுமல்லாமல் படைத்துறை சாராத தொழில் நுட்பங்களையும் சமுதாயம் பயனுறும் வகையில் மேம்படுத்தியுள்ளது. இந்த ஆய்வகத்தின் அன்மைய திட்டம் ஆளில்லா பாதையிடு நிலவூர்திகளை (Unmanned Ground Vehicles of the tracked category). வடிவமைப்பதாகும் [2] ஆய்வுத் திட்டங்கள் மற்றும் வளர்மான பொருட்கள்சி.வி.ஆர்.டி.இ ஆய்வகத்தின் முதன்மையான பணி அர்ஜுன் என்ற பெயரில் முதன்மைக் தகரிகளை உருவாக்குவதாகும். இந்தியப் தரைப்படைத்துறை 248 அர்ஜுன் தகரிகளுக்கு வழங்கீட்டு ஆணை (supply order) பிறப்பித்துள்ளனர். இந்த நிறுவனம் உருவாக்கிய சில ஊர்திகளிவை:
கவச போரூர்த்திகளுடன் தொடர்புடைய பல தொழில்நுட்பங்களில் சி.இ.வி.ஆர்.டி.இ பங்காற்றி வருகிறது. இந்த ஆய்வகத்தில் கவச போரூர்திகளுக்கான தன்னியக்கச் செலுத்தம் (Automatic transmissions for Armored Fighting Vehicles) பற்றி ஒரு தனி துறை நிறுவி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தன்னியக்கச் செலுத்தம் 1500, 800, 150 குதிரைத்திறன் (horsepower) அளவுகளில் வடிவமைக்கப் பட்டுள்ளன.[3] இதனோடு தொடர்புடைய துணையமைப்புகளான:
போன்ற பலவற்றையும் வடிவமைத்துள்ளனர்.
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்பு
|
Portal di Ensiklopedia Dunia