மகாமகக்குளக் கோயில்கள்

காசிவிஸ்வநாதர் கோயில் கோபுரத்திற்கு எதிரில் பிரம்மதீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர் மண்டபங்கள்

மகாமகக்குளக் கோயில்கள் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள மகாமகக்குளத்தைச் சுற்றி அமைந்துள்ள கோயில்களாகும்.

வரலாறு

மகாமகக்குள மண்டபங்கள் அனைத்தும் விஜயரகுநாத மன்னர் அளித்த சோடச மகாதானத்தின் வாயிலாகக் கட்டப்பட்டன. இப்பணியை முன்னின்று நடத்தியவர் அவருடைய மந்திரியான கோவிந்த தீட்சிதர் ஆவார். சோடசம் என்பது 16ஐக் குறிக்கும்.

16 கோயில்கள்

முகுந்தேஸ்வரர் மண்டப சிற்ப வேலைப்பாடு

இக்குளக்கரையில் 16 வகையான தானங்களை வலியுறுத்தும் வகையில் 16 கோயில்கள் (மண்டபங்கள்) காணப்படுகின்றன. ஒவ்வொரு கோயிலிலும் பிரம்மதீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தானேஸ்வரர், இடபேஸ்வரர், பாணேஸ்வரர், கோணேஸ்வரர், பக்திகேஸ்வரர், பைரவேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், வியாசகேஸ்வரர், உமாபகேஸ்வரர், நிருதீஸ்வரர், பிரம்மேஸ்வரர், கங்காதேஸ்வரர், முக்தேஸ்வரர், ஷேத்ரபாலேஸ்வரர் என மொத்தம் 16 வகையான சிவலிங்கங்கள் குளத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்படங்களில் காணப்படுகின்றன. [1] 16 மண்டபங்களில் மிகவும் பெரியது துலா புருட மண்டபம் ஆகும். இதில் இரகுநாதன் துலாத்தட்டு அமைத்து பொன் தானம் அளித்த காட்சியானது மண்டபத்தின் உட்புற விதானம் முழுவதும் சிற்பமாக இடம் பெற்றுள்ளது. மற்ற 15 மண்டபங்களிலும் அந்தந்தத் தானத்திற்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. [2] இந்த குளத்தின் நடுவே அமைந்துள்ள தீர்த்தக் கிணறுகள் புனிதத்தன்மை வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. முகுந்தேஸ்வரர் மண்டபத்தில் சிற்ப வேலைப்பாடுகள் அதிகமாக காணப்படுகின்றன.

திசைகள்

குளத்தைச் சுற்றிலும் கீழ்க்கண்ட திசையில் கோயில்களும், மண்டபங்களும் அமைந்துள்ளன. இவற்றில் எட்டுக் கோயில்கள் கிழக்கு மேற்காகவும், நான்கு கோயில்கள் தெற்கு வடக்காகவும், இரண்டு கோயில்கள் தென்மேற்கு வடகிழக்காகவும், வடகிழக்கு தென்மேற்கு, தென்கிழக்கு வடமேற்கு நோக்கி முறையே ஒன்றொன்றாகவும் அமைந்துள்ளன. தெற்கு நோக்கிய நிலையில் கோயில் அமைக்கப்படவில்லை. [3]

கோயில்கள் மண்டபங்கள்
தென்மேற்கு வடகிழக்கு
கிழக்கு மேற்கு
கிழக்கு மேற்கு
கிழக்கு மேற்கு
தெற்கு வடக்கு
வடகிழக்கு தென்மேற்கு
கிழக்கு மேற்கு
கிழக்கு மேற்கு
தென்கிழக்கு வடமேற்கு
தெற்கு வடக்கு
தெற்கு வடக்கு
தெற்கு வடக்கு
தென்மேற்கு வடகிழக்கு
கிழக்கு மேற்கு
கிழக்கு மேற்கு
கிழக்கு மேற்கு

சோடச மகாலிங்க சுவாமிகள்

குளத்தைச் சுற்றி அமைந்துள்ள கோயில்களில் உள்ள லிங்கங்களை ஒன்றாகச் சேர்த்து சோடசமகாலிங்க சுவாமிகள் என்பர். இவை காசி விஸ்வநாதர் கோயிலின் பராமரிப்பில் உள்ளன.

குடமுழுக்கு

இதன் திருப்பணிக்கான பாலாலயம் காசி விஸ்வநாதர்கோயில் வளாகத்தில் 11 பிப்ரவரி 2015இல் நடைபெற்றது. [4] குடமுழுக்கிற்கான ஆயத்தமாக பந்தக்கால் முகூர்த்தம் 18 நவம்பர் 2015இல் நடைபெற்றது. [5] இக்கோயில்களின் குடமுழுக்கு 29 நவம்பர் 2015இல் நடைபெற்றது. [6]

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

  1. மகாமகம் : குடந்தைக் கோயில்களில் திருப்பணி தொடக்கம், தினமணி, 12.2.2015
  2. குடவாயில் பாலசுப்பிரமணியன், சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1987, முதல் பதிப்பு, ப.260
  3. இராசு.பவுன்துரை, கும்பகோணம் மகாமகத்திருவிழா, தமிழ் மரபு மையம், தஞ்சாவூர், 1991
  4. "மகாமக குளக்கரையில் உள்ள 16 சோடசலிங்க கோயிலில் திருப்பணி துவக்கம், தினகரன், 12 பிப்ரவரி 2015". Archived from the original on 2016-03-04. Retrieved 2015-11-28.
  5. "சோடச மகாலிங்கசாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம், தினத்தந்தி, 19 நவம்பர் 2015". Archived from the original on 2016-03-05. Retrieved 2015-11-28.
  6. "நாகேஸ்வரர் சோடசலிங்கங்கள் உள்பட 6 கோயில்களில் கும்பாபிஷேகம், கும்பகோணம் விழா கோலாகலம், தினகரன், 30 நவம்பர் 2015". Archived from the original on 2019-03-03. Retrieved 2015-11-30.

மகாமகக்குளத்தைச் சுற்றியுள்ள சோடச (16) மண்டபங்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya