மங்குசுத்தான்
கடார முருகல் (மங்குசுத்தான் அல்லது மங்குஸ்தீன்- மலேசியத் தமிழ்) (தாவரவியல் பெயர்:Garcinia mangostana, ஆங்கிலம்:mangosteen), வெப்பவலயத்துக்குரிய என்றும் பசுமையான தாவரம் ஆகும். இது சுண்டாத் தீவு மற்றும் இந்தோனேசியாவின் மொலாக்கா பகுதியைத் தாயகமாகக் கொண்டது. இம்மரம் 7 முதல் 25 m (20–80 ft) உயரனானது. மங்குசுத்தான் பழம் (உள்ளோட்டுச் சதயம்) இனிப்பும் இலேசான புளிப்பும் கொண்டதாகவும் சாற்றுத்தன்மையும் சிறிதளவும் நார்த்தன்மையுமுள்ள பழமாகவும் காணப்படும் இது வெள்ளை நிறமுடையது. பழத்தின் சுற்றுக்கனியம் கருங்கபில நிறமானது. இது உண்ணப்படுவதில்லை.[1] பழத்தின் உள்ளாக இருவித்திலை வித்து காணப்படும்[2] இலங்கையில் மங்குசுத்தான்இலங்கையில் தாழ்நில ஈரவலயத்தைச் சேர்ந்த களுத்துறை, கம்பகா, கொழும்பு, காலி ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் கேகாலை, கண்டி மாவட்டங்களில் சில பகுதிகளிலும் மங்குசுத்தான் பயிரிடப்படுகிறது. பொதுவாக வீட்டுத்தோட்டப் பயிராகவே இது செய்கை பண்ணப்படுகிறது. சுற்றுக்கனியமும் உண்ணப்படும் உள்ளோட்டுச் சதயமும்கருக்கட்டப்படாத பூவிலிருந்தே காயுருவாகும். காய் இளம் பச்சை நிறமாகக் காணப்படும். மரத்தின் அங்குரத்தின் கீழ் காணப்பட்டால் வெள்ளை நிறத்தில் இருக்கும். அடுத்து வரும் இரண்டு மூன்று மாதங்களில் சுற்றுக்கனியம் கடும்கபில நிறத்துக்கு மாறும். உள்ளோட்டுச் சதயம் உண்ணப்படும் பகுதியாகத் திரிபடையும். 6-8 சதம மீட்டர் விட்ட அளவு கொண்டதாக பழம் மாறும் பருவம் பழுப்பதற்குத் தயாராகும் பருவமாகும். போசணை மற்றும் வேதியியல் கூறுகள்
மங்குசுத்தானில் உண்ணப்படும் பகுதியான உள்ளோட்டுச்சதயம் பிரதான போசனைக் கூறுகளைக் கொண்டிருக்கவில்லை.[3] ![]() மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia