மரபணு மாற்றுப் பயிர் (Genetically modified (GM) crops) என்பவை மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் மூலம் உருவாக்கப்பட்ட பயிர்வகைகள். மரபணு மாற்றப்பட்ட உயிரினங்களின் (ஆக்சியகற்றப்பட்ட ரைபோ கரு அமிலம்) டி.என்.ஏவில்மரபணு பொறியியல் மூலம் குறிப்பிட்ட மாற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் முக்கியமான நோக்கம், குறிப்பிட்ட ஒரு இனப் பயிரில் இயற்கையாக இல்லாத ஒரு புதிய இயல்பை அந்தப் பயிரில் புகுத்துதல் ஆகும். இது வழமையாகக் கடைபிடிக்கப்படும் அவர்களது மூதாதைகளிடமிருந்து தேர்ந்து வளர்க்கப்படுவது (விலங்கு வளர்ப்பு அல்லது பயிர் வளர்ப்பு) போலன்று. இவற்றில் உணவுப் பயிர்களும், உணவல்லாத வேறு உற்பத்திப் பொருட்களுக்கான பயிர்களும் (மருந்துப் பயிர், உயிரி எரிபொருள் பயிர்) அடங்கும். இவ்வகைப் பயிர்கள் 1990களிலிருந்து சந்தைக்கு வர ஆரம்பித்தன. குறிப்பாக சோயா அவரை, தக்காளி, விதை அற்ற முந்திரி, பருத்தி விதை எண்ணெய் என்று மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் உற்பத்திகள் சந்தைக்கு வர ஆரம்பித்தன. இந்த மரபணு மாற்றத்திற்குக் காரணங்களாக பூச்சி எதிர்ப்பு, நோய் எதிர்ப்பு, ஊட்டச்சத்து அதிகரிப்பு, விளைச்சல் அதிகரிப்பு, வறட்சி மற்றும் உப்புத் தன்மையைத் தாங்கிய நிலையிலும் பயிர் வளர்தல் போன்றவை கூறப்படுகின்றன. தோல் தடிமனான, சதைப்பற்றான தக்காளி கிடைக்க, அதில் உருளைக்கிழங்கின் மரபணுக்களை கலந்திருக்கின்றனர்(சான்று தேவை).
பின்னர் விலங்குகளிலும் இம்முறை கையாளப்பட்டது. எடுத்துக்காட்டாக, 2006ஆம் ஆண்டு பன்றி ஒன்றிலிருந்து மோதிரப்புழு (அல்லது வட்டப்புழு) மரபணு கொண்டு ஒமேகா -3 கொழுப்பு அமிலம் சுரக்கச் செய்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது[1][2][3]
மரபணு மாற்றப்பட்ட பயிர்களிலிருந்து பெறப்படும் உணவானது, வழமையான முறையினால் பெறப்படும் உணவிலிருந்து மாறுபட்டு மனிதருக்குத் அதிக உடல்நலத் தீங்கு விளைவுகள் எதனையும் தருவதில்லை என்று அறிவியல் கருத்தொற்றுமை இருக்கின்றபோதிலும்[4][5][6][7][8], இவ்வகைப் பயிர்களால் விவசாயிகளுக்குச் சில சூழலியல், பொருளியல் நன்மைகளும் கிடைக்கும் என்று கூறப்படுகின்றபோதிலும், இத் தொழில்நுட்பத்தின் அளவுக்கதிகமான பயன்பாடானது நன்மைகளை மீறித் தீமைகளையே தரும் எனக் கூறப்படுகின்றது[9].
மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் குறித்த பல விமரிசனங்கள் எழுந்தவண்ணமே உள்ளன. இவற்றினால் எழும் உடல்நிலை குறைகள் தொடர்பில் முழுவதும் அறியப்படாத நிலையில், இப்பயிர்களில் இருந்து பெறப்படும் உணவினால் கிடைக்கும் பாதுகாப்பற்ற தன்மை குறித்து எதிர்க் கருத்தாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்[10]. உலக மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு இத்தகைய பாதுகாப்பற்ற பயிர்ச்செய்கை அவசியம்தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இவற்றின் சூழலியல் மற்றும் பொருளியல் சார் கவலைகளும் வெளியிடப்படுகின்றன. இவ்வாறு மாற்றப்பட்ட விதைகள் மீது, தங்களின் ஆய்வினால் வளர்த்தமை கருதி, தனி வணிக நிறுவனங்கள் அறிவுசார் உரிமை கோரவும் வாய்ப்புள்ளதால் பொதுவில் கிடைத்து வந்த விதைகள் அழிபட்டு விவசாயிகள் ஒரு நிறுவனத்தையே எதிர்நோக்கியிருக்கும் வாய்ப்பும் பெருகும். மரபணு மாற்றமானது இந்தியாவை மலடாக்கும் சதி என்று தினமணி இதழில், ஆர்.எஸ்.நாராயணன் கூறியிருக்கின்றார்[11].
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள், அல்லது விலக்க்குகளிலிருந்து பெறப்படும் உணவு மரபணு மாற்று உணவு எனப்படுகின்றது.
எ.கா. பாசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் என்ற மண்ணில் வாழும் ஒரு பாக்டீரியாவில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு வகை படிகப் புரதமான, அகநச்சான (crystal protein endotoxin) Cry 1Ac மரபணுவைக் கத்தரித் தாவரத்தின் மரபணுத்தொகைக்குள் செலுத்தி உருவாக்கப்படும் கத்தரிப் பயிரிலிருந்து பெறப்படும் உணவு மரபணு மாற்று உணவு வகையைச் சேரும். .
மரபணு மாற்றுப் பயிர் குறித்தும், இம்முறையினால் பெறப்படும் உணவுகள் குறித்தும் பலவிதமான முரண்பாடான கருத்துக்கள் நிலவி வருகின்றன. பலர் இதையிட்டு சர்ச்சை செய்து வருகின்றனர். இந்தச் சர்ச்சையில் நுகர்வோர், உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்கள், இவற்றை ஒழுங்குபடுத்தும் அரசுத் துறைகள், அரசு சார்பற்ற அமைப்புக்கள், அறிவியலாளர்கள் என்று பலதரப்பட்ட மக்களும் பங்கெடுக்கின்றனர். சர்ச்சைக்குட்படும் முக்கியமான தலைப்புக்கள்:
இவ்வகைப் பயிரிலிருந்து பெறப்படும் உணவு வகைகள் அடையாளப்படுத்தப்பட (labeling) வேண்டுமா, இல்லையா?
இந்தத் தொழில்நுட்பப் பயன்பாட்டில் அரசு எடுக்க வேண்டிய ஒழுங்கு நடவடிக்கைகள்.
பீடைகளில் இந்தத் தொழில்நுட்பத்தினால், பீடைகொல்லிக்கான எதிர்ப்புத்தன்மை உருவாதல்.
இத் தொழில்நுட்பத்தால் விவசாயிகளிற்கு ஏற்படக்கூடிய தாக்கம்.
இந்தத் தொழினுட்பம் உலக மக்கள்தொகைக்கு உணவு வழங்கலில் ஆற்றக்கூடிய பங்கு.
மனித இனத்திற்கு மரபணு மாற்றுப் பயிரிலிருந்து பெறப்படும் உணவினால் விளையக்கூடிய தீங்கான விளைவுகள் எதுவும் இதுவரை அறிக்கையூடாக வெளியிடப்படவில்லை எனக் கூறப்படுகின்றது[7][10][13]. ஆனாலும் இந்தக் கூற்றிலுள்ள தெளிவற்ற தன்மையினால், பல நாடுகள் மரபணு மாற்றுப் பயிரிலிருந்து பெறப்படும் உற்பத்திப் பொருட்கள் சந்தையில் விற்பனைக்கு வரும்போது, அவை "மரபணு மாற்றுப் பயிர் உற்பத்தி" என அடையாளமிடப்பட வேண்டும் என்ற நிலையை எடுத்துள்ளன[14]. இதன்மூலம் நுகர்வோர் தாமே இந்த உணவைப் பயன்படுத்துவதா, இல்லையா என்ற முடிவை எடுக்க முடியும். இவ்வாறான அடையாளப்படுத்தல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்கும் 15 நாடுகள், ஜப்பான், அவுஸ்திரேலியா, பிரேசில், உருசியா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் உட்பட 64 நாடுகளில் நடைமுறையில் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. அதேவேளை ஐக்கிய அமெரிக்காவில், இதற்குரிய சட்டம் எதுவும் இல்லை என்றும் அறியப்படுகின்றது[14].
↑A decade of EU-funded GMO research (2001-2010)(PDF). Directorate-General for Research and Innovation. Biotechnologies, Agriculture, Food. European Union. 2010. doi:10.2777/97784. ISBN978-92-79-16344-9. "The main conclusion to be drawn from the efforts of more than 130 research projects, covering a period of more than 25 years of research, and involving more than 500 independent research groups, is that biotechnology, and in particular GMOs, are not per se more risky than e.g. conventional plant breeding technologies." (p. 16)
↑ 10.010.1NRC. (2004). Safety of Genetically Engineered Foods: Approaches to Assessing Unintended Health Effects. National Academies Press. Free full text
Helena Norberg-Hodge, "The Pressure to Modernize and Globalize", in The Case Against the Global Economy and for a Turn Toward the Local 45 (J. Mander & E. Goldsmith eds., 1996)
வந்தனா சிவா, A World View of Abundance, ORION, Summer 2000
Eric Schlosser, Fast Food Nation: The Dark Side of the All American Meal (2001)
Michael Pollan, The Futures of Food: The Industry Has Found a Way to Co-opt the Threat from Organics and ‘Slow Food.’ Remember the Meal in a Pill?, NY TIMES MAG., Sun., May 4, 2003, at sec. 6, p. 63
Matt Lee and Ted Lee, The Next Big Flavor: Searching For the Taste of Tomorrow, id. at 66
Danylo Hawaleshka with Brian Bethune and Sue Ferguson, Tainted Food, (Kraft to develop nanoparticles that can change food color, flavor, and nutrient value to suit a person’s health or palate)
Gary Ruskin, The Fast Food Trap: How Commercialism Creates Overweight Children, Mothering Mazagine, Nov./December 2003
Kate Zernike, Is Obesity the Responsibility of the Body Politic?, NY TIMES, Sun., November 9, 2003, at sec. 4, p. 3
Carl Hulse, Vote in House Bars Some Suits Citing Obesity, NY TIMES, Thurs., March 11, 2004, at sec. A., p. 1
Garcia, Deborah Koons (Director). 2004. The Future of Food. film.