மலாலாய் மைவந்த்மலாலாய் மைவாந்த் இவர் ஓர் ஆப்கானிஸ்தானின் தேசிய நாட்டுப்புற வீராங்கனையாவார். இவர் 1880இல் நடந்த மைவாந்த் போரில் பிரித்தன் துருப்புக்களுக்கு எதிராக உள்ளூர் போராளிகளை அணிதிரட்டினார். இவர் அயூப்கான் என்பவருடன் இணைந்து போராடினார்.[1] 1880 சூலை 27 அன்று நடந்த இரண்டாவது ஆங்கிலோ-ஆப்கானியப் போரின்போது மைவாந்த் போரில் ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு பொறுப்பானவராக இருந்தார். இவர் ஆப்கானிஸ்தானின் "ஜோன் ஆப் ஆர்க்" [2] என்றும் ஆப்கானிஸ்தான் "மோலி பிட்சர்" [3] என்றும் அழைக்கப்படுகிறார். ஆப்கானிஸ்தானில் இவரது பெயரில் பல பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பிற நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவரது கதை ஆப்கான் பள்ளிகளின் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது. பாக்கித்தான் பெண்கள் உரிமை ஆர்வலர் மலாலா யூசப்சையி மற்றும் ஆப்கானிஸ்தான் ஆர்வலரும் அரசியல்வாதியுமான மலாலை ஜோயா ஆகியோருக்கு மைவாந்தின் மலாலை என்ற பெயரிடப்பட்டது. வாழ்க்கை வரலாறுமலாலாய் 1861 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானின் தெற்கு காந்தகார் மாகாணத்தில் மைவாந்திற்கு தென்மேற்கே 3 மைல் தொலைவில் உள்ள கிக் என்ற கிராமத்தில் பிறந்தார்.[4] 1880 களின் பிற்பகுதியில், ஆப்கானிஸ்தானுக்கும் பிரிட்டனுக்கும் இடையே போர் தொடங்கியது. 1840 களில் இரு அரசுகளுக்கிடையே கடைசி யுத்தம் நடந்தது. ஆங்கிலேயர்கள், தங்கள் இந்தியப் படைகளுடன் சேர்ந்து, இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு ஒரு பெரிய பயணத்தைத் தொடங்கினர். பிரித்தானியரின் முக்கிய காவல்படை மைந்தர் நகருக்கு மிக அருகில் உள்ள காந்தகாரில் நிலைகொண்டது. ஆப்கானிஸ்தானின் இராணுவத்தை ஆப்கானிஸ்தான் அமிர் ஷெர் அலிகானின் மகன் தளபதி அயூப் கான் வழிநடத்தினார். இடையர்களாக இருந்த மலாலையின் தந்தையும் அவரது வருங்கால கணவரும் 1880 சூலையில் பிரித்தானிய-இந்தியப் படைகள் மீது நடத்தப்பட்ட பெரிய தாக்குதலின்போது அயூப் கானின் இராணுவத்துடன் இணைந்தனர். பல ஆப்கானிய பெண்களைப் போலவே, காயமடைந்தவர்களுக்கும், தண்ணீர் மற்றும் உதிரி ஆயுதங்களையும் வழங்கும் பணியில் போர்க்களத்தில் மலாலாய் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். உள்ளூர் ஆதாரங்களின்படி, இது அவரது திருமண நாளாகவும் கருதப்பட்டது. ஆப்கானிய இராணுவத்தினர், அதிக எண்ணிக்கையில் இருந்தபோதிலும், மன உறுதியை இழக்கத் தொடங்கினர். போர்ச்சூழல் பிரித்தானியர்களுக்கு ஆதரவாக மாறுவதாகத் தோன்றியது. அப்போது மலாய் ஆப்கான் கொடியை ஏந்தி வீரர்கள் எழுச்சியுறும் விதத்தில் பேசி கூக்குரலிட்டாள். இது பல ஆப்கானிய போராளிகள் மற்றும் காஜிகளுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்தது. போர்களத்தில் கொடி ஏந்தியவர் கொல்லப்பட்டபோது, மலாலா முன்னோக்கி சென்று கொடியை உயர்த்திப் பிடித்தார். மலாலாய் ஆப்கான் கொடியை எடுத்து கூச்சலிட்டார்.[5] (சில பதிப்புகள் இவர் தனது முக்காட்டை கொடியாகப் பயன்படுத்தியதாகக் கூறுகின்றன.[6] பின்னர் லண்டாய் பாடினார் (ஆப்கான் பெண்கள் பாடும் ஒரு சிறிய நாட்டுப்பாடல்). மலாலாய் பிரித்தன் துருப்புக்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.[7] இருப்பினும், இவருடைய வார்த்தைகள் நாட்டு மக்களின் வெற்றியைத் தூண்டின. போருக்குப் பிறகு, மலாலாய் தனது முயற்சிகளுக்காக கௌரவிக்கப்பட்டு, இவரது சொந்த கிராமமான கிக் நகரில் அடக்கம் செய்யப்பட்டார். அயூப் கான் மலாலாய்க்கு ஒரு சிறப்பு மரியாதை அளித்தார். அங்கு அவரது கல்லறை இன்னும் காணப்படுகிறது. இவர் இறக்கும் போது வயது 18-19 க்கு இடையில் இருந்தார்.[6] அவள் தன் தந்தை மற்றும் வருங்கால கணவருடன் கரேஸ் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டாள். உள்ளூர்வாசிகள் இவளது கல்லறையை ஒரு சன்னதியாக கருதுகின்றனர்.[8] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia