மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர்
மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் (ஆங்கிலம்: President of the Court of Appeal of Malaysia; மலாய்: Presiden Mahkamah Rayuan Malaysia) என்பவர் மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர்; மற்றும் மலேசிய நீதித்துறை அமைப்பின் துணைத் தலைவரும் ஆவார். 24 சூன் 1994-இல் மலேசியாவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் (Court of Appeal of Malaysia) உருவாக்கப்பட்டதில் இருந்து இந்தப் பதவி பயன்பாட்டில் உள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் மலேசியாவின் இரண்டாவது உயர் நீதிமன்றமான மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் (Court of Appeal) தலைவராக உள்ளார். [[மலேசியாவின் நீதித்துறை|மலேசிய நீதித்துறை அமைப்பில் மலேசியத் தலைமை நீதிபதிக்குப் (Chief Justice of Malaysia) பிறகு இது இரண்டாவது மிக உயர்ந்த பதவியாகும். இந்த மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் பதவியைத் தொடர்ந்து மலாயா தலைமை நீதிபதி (Chief Justice of Malaya) மற்றும் சபா சரவாக் தலைமை நீதிபதி (Chief Judge of Sabah Sarawak) பதவிகள் அடுத்தநிலைப் பதவிகள் ஆகும் .[3] மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia