மாமல்லபுரம் கடல் அருங்காட்சியகம்
மாமல்லபுரம் கடல் அருங்காட்சியகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரையில் 13.07 ஏக்கர் பரப்பளவில் 2013ம் ஆண்டு தமிழக மீன்வளத்துறையால் பொதுத்துறை, தனியார் மற்றும் அரசு பங்களிப்போடு உலகத் தரம் மிக்க கடல் சார் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நிறுவவிருக்கும் இந்த அருங்காட்சியகத்தில் உலகின் பல்வேறு அறிய மீன்வகைகள் மற்றும் கடல் உயிரினங்கள் காட்சிப்படுத்தப்படும். இது தவிர கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு கடல் வாழ் உயிரினங்களை அதன் வாழ்க்கைச் சூழலில் கண்டுகளிக்கும் வசதியும் இதில் செய்யப்படும் எனவும். இந்த சுரங்கப் பாதையில் செல்லும் போது, கடலின் மணற்திட்டில் நடக்கும் அனுபவத்தை பெறும் வகையில் வடிவமைக்கப்படும் எனவும் மீன்வளத்துறை தெரிவித்தது. மேலும் ரூ. 257.58 கோடி திட்ட மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் கூடிய இத்திட்டத்திற்கு, வடிவமைத்தல், முதலீடு, கட்டி முடித்தல், இயக்குதல் மற்றும் பரிமாற்றம் மற்றும் 33 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தப்பணிகள் முடிந்ததும் காட்சியகத்திற்காண செயல் திட்டப் பணிகள் துவங்கி மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. காட்சியகங்கள்சுமார் 13.07 ஏக்கர் பரப்பளவில் நிறுவவிருக்கும் கடல் அருங்காட்சியகத்தில் உலகத்தரம் மிக்க காட்சி அரங்குகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளனர்.
இது தவிர ஒளி நீரூற்று, இலவச மகிழுந்து பயணம், கலாச்சார உணவகங்கள், மீன் விளையாட்டுக்கள் போன்றவைகளும் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. வெளி இணைப்புகள்கடல் அருங்காட்சியகத்திற்காண ஒப்பந்த விளக்க விளம்பரம் பரணிடப்பட்டது 2016-08-06 at the வந்தவழி இயந்திரம் |
Portal di Ensiklopedia Dunia