மாலதி (தமிழ்ப் போராளி)
மாலதி (Malathi) என்ற இயக்கப் பெயரால் அறியப்படும் சகாயசீலி பேதுருப்பிள்ளை (4 சனவரி 1967 - 10 அக்டோபர் 1987) என்பவர் போரில் இறந்த விடுதலைப் புலிகளில் முதல் பெண் போராளி. எனவே முதல் பெண் ஈகியாக இவர் போற்றப்படுகிறார். இவரது நினைவு நாள் மகளிர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது. போர்க்களத்தில்1987ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் நாள், யாழ்ப்பாணத்திற்கு அருகில் கோப்பாயில் இந்திய அமைதிப்படைக்கு எதிரான படை நடவடிக்கையின் போது மகளிர் படைப்பிரிவினரை வழி நடத்திய மாலதி இருகால்களிலும் சூடு பட்டு, படுகாயமடைந்து, மிகுந்த இரத்தப்போக்கு ஏற்பட்டு, அசைய முடியாத நிலையில் சயனைட் அருந்தினார். இவரது சக போராளிகளான ஐனனியும் விஜியும் இவரை மீட்கச் சென்ற போது தன்னை விட்டு அவர்களை வெளியேறி விடும்படி கெஞ்சிக் கேட்டார். இருந்தாலும் இருவருமாக மாலதியைச் சுமந்து ஒரு பாதுகாப்பான இடத்தைச் சென்றடைந்த போது மாலதி இறந்து விட்டார்.[2] [3] மாலதி படையணிவிடுதலைப் புலிகள் மாலதியைக் கௌரவிக்கும் நோக்கில் தங்கள் படையணியில் ஒன்றுக்கு மாலதி படையணி எனப் பெயரிட்டனர். மேலும் கிளிநொச்சியில் இவருக்குகாக ஒரு நினைவுச்சின்னம் கட்டப்பட்டு 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் திறக்கப்பட்டது.[4][5][6][7][8][9][10][2][11][12][13][14][15][16] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia