மெத்தில் 4-அயோடோபென்சோயேட்டு
மெத்தில் 4-அயோடோபென்சோயேட்டு (Methyl 4-iodobenzoate) என்பது C8H7IO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மெத்தில் பாரா-அயோடோபென்சோயேட்டு என்ற பெயராலும் இந்த கரிமச் சேர்மம் அடையாளப்படுத்தப்படுகிறது. IC6H4COOCH3 என்ற கட்டமைப்பு வாய்ப்பாட்டாலும் மெத்தில் 4-அயோடோபென்சோயேட்டை அடையாளப்படுத்தலாம்.[3] 4-அயோடோபென்சாயிக் அமிலத்தின் மெத்தில் எசுத்தர் ஆகவும், அல்லது மெத்தில் பென்சோயேட்டின் அயோடினேற்றப்பட்ட வழிப்பெறுதியாகவும் பார்க்கப்படுகிறது. தயாரிப்புமெத்தில் 4-அயோடோபென்சோயேட்டை, மெத்தனாலுடன் 4-அயோடோபென்சாயிக் அமிலத்தைச் சேர்த்து பிசர் எசுத்தராக்கல் வினைக்கு உட்படுத்தி தயாரிக்கலாம்.[4] வினைகள்![]() மெத்தில் 4-அயோடோபென்சோயேட்டின் அரைல்-அயோடைடு செயல்பாட்டு இணைப்பு வினைகளுக்கு உட்படுகிறது. அதாவது மும்மெத்தில்சிலில் அசிட்டிலீனுடன் சமச்சீர் சோனோகாசிரா இணைப்பு வினையில் ஈடுபட்டு இருமெத்தில் 4,4'-(எத்தைன்-1,2-டையில்)டைபென்சோயேட்டை உருவாக்குகிறது.மும்மெத்தில்சிலில் அசிட்டிலீன் தளத்தில் அசிட்டிலீனாக இழக்கப்படுகிறது.[4][5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia