யூரியா பாசுபேட்டு
யூரியா பாசுபேட்டு (Urea phosphate) என்பது CH7N2O5P என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். யூரியாவும் பாசுபாரிக் அமிலமும் 1:1 என்ற விகிதத்தில் சேர்ந்து யூரியா பாசுபேட்டு உருவாகிறது. ஒர் உரமாக இது பயன்படுகிறது. 17-44-0 என்ற நைட்ரசன் பாசுபரசு பொட்டாசியம் வாய்ப்பாட்டைக் கொண்டிருக்கும் இது தண்ணீரில் கரையும். வலுவான அமிலக் கரைசலை உருவாக்கும். யூரியா பாசுபேட்டு உர விற்பனையாளர் பைகளில் கிடைக்கிறது. இவை பையகப்படுத்துகையில் யூபி என்ற தனிமுத்திரை இடப்பட்டு விற்கப்படுகின்றன. 15-5-15 மற்றும் 13-2-20 போன்ற நீரில் கரையக்கூடிய வாய்பாடுகளை உருவாக்க கால்சியம் நைட்ரேட்டு, மக்னீசியம் நைட்ரேட்டு மற்றும் பொட்டாசியம் நைட்ரேட்டு ஆகியவற்றைக் கொண்ட சேர்மங்களில் இது சில நேரங்களில் சேர்க்கப்படுகிறது. யூரியா பாசுபேட்டின் அமிலத்தன்மை Ca, Mg மற்றும் P ஆகியவை கரைசலில் இணைந்து இருக்க அனுமதிக்கிறது. குறைந்த அமிலத் தன்மை நிலைகளில், Ca-Mg பாசுபேட்டுகள் வீழ்படிவாக அடியில் இருக்கும். யூரியா பாசுபேட்டு பெரும்பாலும் குழாய் அமைப்புகளை சுத்தம் செய்ய சொட்டு நீர் பாசனத்தில் பயன்படுத்தப்படுகிறது. யூரியா பாசுபேட்டு படிக அமைப்பில் உள்ள பாசுபாரிக்கு அமிலம் மற்றும் யூரியா மூலக்கூறுகள் சிக்கலான ஐதரசன் பிணைப்பு வலையமைப்பை உருவாக்குகின்றன.[1] தண்ணீரில் கரைக்கும் போது இது சுதந்திரமாக பிரிகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia