பாசுபாரிக் காடி
பாசுபாரிக் காடி (phosphoric acid) என்றும் ஆர்த்தோபாசுபாரிக் காடி (Orthophosphoric acid)என்றும் பாசுபாரிக் (V) காடி என்றும் அழைக்கப்படும் பாசுபரசு உள்ள ஒரு கரிமமற்ற காடி. இக்காடியில் மூன்று ஐதராக்சைல் (-OH) குழுக்கள் உள்ளன. பாசுபாரிக் காடி ஐதரச அணுக்களும் நான்கு ஆக்சிசன் அணுக்களும் ஒரு பாசுபரசு அணுவும் சேர்ந்த சேர்மங்களால் ஆனது. இதன் வேதியியல் வாய்பாடு H3PO4. மூன்று நீர் (H2O). மூலக்கூறுகளுடன் ஒரு பாசுபரசு பென்ட்டாக்சைடு (P2O5) மூலக்கூற்றை சேர்த்தால் இரண்டு பாசுபரசுக் காடி மூலக்கூறுகள் கிட்டும். ஆர்த்தோபாசுபாரிக் காடி மூலக்கூறுகள் பலவும் தன்னுடனே சேர்ந்து பல்வேறு வேதியியல் சேர்மங்களாகக்கூடும். இவையும் பாசுபாரிக் காடிகள் என்று கூறப்படுகின்றன. பாசுபாரிக் காடிகள் பெரும்பாலும் வேளாண்மைத் தொழிலில் உரம் செய்யப் பயன்படுகின்றது. இது தவிர இரும்புத் துருவை நீக்கவும், பூச்சிக் கொல்லிகளிலும், பல் மருத்துவத்திலும், சிலிக்கான் நுண்மின்சுற்றுகள் (தொகுசுற்றுகள்) உருவாக்குவதில் அலுமினியத்தை அரித்தெடுக்கவும், புளிப்பு சுவை தருவதால் சில கோலா குடிநீர்மங்களிலும் பயன்படுத்தபடுகின்றது. ஆர்த்தோபாசுபாரிக் காடி வேதியியல்நீர் கலக்கா (நீரற்ற) தூய பாசுபாரிக் காடி ஓர் வெண்மையான திண்மம். இது 42.35 °C வெப்பநிலையில் உருகி நிறமற்ற பிசுப்புமையான நீர்மமாக மாறுகின்றது இக் காடியின் ஆர்த்தோ என்னும் முன்னொட்டு பாலி பாசுபாரிக் காடிகள் என்று அழைக்கப்படும் மற்றவற்றில் இருந்து பிரித்துக் காட்டவே. ஆர்த்தோபாசுபாரிக் காடி நச்சுத்தனமையற்ற, கரிமமற்ற, வலிமைகுறைந்த (மென்மையான), மூன்று ஐதரச (முப்புரோட்டிக்) காடி. இது அறை வெப்ப, அழுத்த நிலைகளில் திண்மநிலையில் உள்ளது. ஆர்த்தோபாசுபாரிக் காடி முனைத்தன்மை கொண்ட மூலக்கூறு ஆகையால நீரில் எளிதில் கரையும். ஆர்த்தோ மற்றும் பிற பாசுபாரிக் காடிகளின் ஆக்சிசனாக்க நிலை +5; எல்லா ஆக்சிசன் அணுக்களின் ஆக்சிசனாக்கு நிலை -2, ஐதரசனின் நிலை +1. ஆர்த்தோபாசுபாரிக் காடி, மூன்று ஐதரசக்காடி என்பதால் மின்மமாக்கப்பட்ட ஐதரச அணுவை H+ மூன்று மடங்கு நீரில் பிரியச் செய்ய இயலும். இது நீர் மூலக்கூறுடன் இணைந்து கீழ்க்காணும் வேதியியல் வினைகளுக்கு உட்படும்.
|
Portal di Ensiklopedia Dunia