ரோர்செசுடசு ரெசுபிளண்டன்சு

ரோர்செசுடசு ரெசுபிளண்டன்சு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ராகோபோரிடே
பேரினம்:
ரோர்செசுடசு
இனம்:
ரோ. ரெசுபிளண்டன்சு
இருசொற் பெயரீடு
ரோர்செசுடசு ரெசுபிளண்டன்சு
பிஜூ மற்றும் பலர், 2010[2]

ரோர்செசுடசு ரெசுபிளண்டன்சு (Raorchestes resplendens) என்பது ராக்கோபோரிடே குடும்பத்தைச் சேர்ந்த, தென்னிந்திய சிகரமான ஆனைமுடியைச் சுற்றியுள்ள உயரமான பிராந்தியத்தில் காணப்படும், அருகிய நிலையில் உள்ள தவளைச் சிற்றினமாகும்.[3] இது மிகவும் நீளமான கால்களையும் ஏராளமான நுண் சுரப்பிகளையும் கொண்டுள்ளது. இச்சிற்றினம் இந்தியாவில் கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஆனைமுடி சிகரத்தில் (2695 மீ) கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் இது எரவிகுளம் தேசிய பூங்காவிலிருந்து மட்டுமே அறியப்படுகிறது.[2][4]

விளக்கம்

பொதுவாக ரோர்செசுடசு பேரினத் தவளைகளில் நடுத்தர அளவிலான தவளைகளாக இவை உள்ளன. ஆண் தவளையின் நீளம் 23 - 25 மிமீ வரையிலானது. பெண் தவளை 25-28 மிமீ வரை வளரும். இந்தச் சிற்றினத்தினை பிறச் சிற்றினங்களிலிருந்து பிரகாசமான சிவப்பு ஆரஞ்சு நிறத்தினாலும், கண்களுக்குப் பின்னால், தோள்பட்டை பக்கத்தில், குதத்திற்கு முன்புறத்தில், முன்கை, கீழ்க்காலெலும்பு பக்கத்தில், கணுக்கால், அடிக்கால் பின்புறத்தில் காணப்படும் பல சுரப்பிகளின் வீக்கத்தினால் வேறுபடுத்தி அறியலாம். மற்ற ரோர்செசுடசு தவளைகளை விட கரங்கள் மிகவும் குறுகியவை. கருவிழி சிவப்பு நிறத்தில் உள்ளது.[2]

பரவல்

இந்தியாவின் இரவிக்குளம் தேசியப் பூங்காவில் உள்ள ஆனைமுடி சிகரத்தில் மூன்று சதுர கிலோ மீட்ட பரப்பளவிற்குள் இந்த சிற்றினம் வாழ்கின்றது[2] என்று ஆரம்பத்தில் கருதப்பட்டது. ஆனால் இதே தேசியப் பூங்காவிலிருந்து சுமார் 20 கிமீ தொலைவில் மற்றொரு தளத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.[3][5] இந்த தவளை கடல் மட்டத்திலிருந்து 1896 முதல் 2695 மீட்டர் உயரத்தில், பெரும்பாலும் புல்வெளி வாழ்விடங்களில் காணப்படுகிறது.[3][6]

நடத்தை

ரோர்செசுடசு ரெசுபிளண்டன்சு மிகவும் குறுகிய கால்களைக் கொண்டுள்ளன. மேலும் இந்தச் சிற்றினம் ஊர்ந்து செல்லும் ஒருவகை நடத்தையால் வகைப்படுத்தப்படுகின்றன. இது தரையில் வசிக்கும் இனமாகும்.[2] இருப்பினும் பெரும்பாலான ரோர்செசுடசு தாவரங்களில் காணப்படுகின்றன.[7]

மேற்கோள்கள்

  1. IUCN SSC Amphibian Specialist Group. (2023). "Raorchestes resplendens". IUCN Red List of Threatened Species 2023: e.T189814A86897335. doi:10.2305/IUCN.UK.2023-1.RLTS.T189814A86897335.en. https://www.iucnredlist.org/species/189814/86897335. பார்த்த நாள்: 30 December 2023. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Biju S.D.; Y. Shouche; A. Dubois; S. K. Dutta; F. Bossuyt (2010). "A ground-dwelling rhacophorid frog from the highest mountain peak of the Western Ghats of India". Current Science 98 (8): 1119–1125. http://www.currentscience.ac.in/Downloads/article_id_098_08_1119_1126_0.pdf. 
  3. 3.0 3.1 3.2 Frost, Darrel R. (2016). "Raorchestes resplendens Biju, Shouche, Dubois, Dutta, and Bossuyt, 2010". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. Retrieved 25 August 2016.
  4. "New species of frog found in Eravikulam National Park". The Hindu. 5 May 2010. http://www.thehindu.com/news/article422619.ece. open access publication - free to read
  5. Joseph, Jobin; Jobin, K.M.; Nameer, P.O. (2012). "Additional record of Resplendent Bush Frog Raorchestes resplendens (Anura: Rhacophoridae) from the Western Ghats, India". Journal of Threatened Taxa 4 (11): 3082–3084. doi:10.11609/JoTT.o3214.3082-4. 
  6. Katia Goldberg; Jaime Menendez; Mia Reed (July 22, 2022). Ann T. Chang; Michelle S. Koo (eds.). "Raorchestes resplendens Biju, Shouche, Dubois, Dutta, and Bossuyt, 2010". AmphibiaWeb. University of California, Berkeley. Retrieved September 16, 2023.
  7. Biju, S. D.; Bossuyt, F. (2009). "Systematics and phylogeny of Philautus Gistel, 1848 (Anura, Rhacophoridae) in the Western Ghats of India, with descriptions of 12 new species". Zoological Journal of the Linnean Society 155 (2): 374–444. doi:10.1111/j.1096-3642.2008.00466.x. 

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Raorchestes resplendens
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya