லொயோலா இஞ்ஞாசியாரின் ஆன்ம பயிற்சிகள்![]() லொயோலா இஞ்ஞாசியாரின் ஆன்ம பயிற்சிகள் (இயற்றப்பட்ட காலம் 1522-1524) என்பது கிறுத்தவ தியான முயற்சி நூலாகும். இது நான்கு பாகங்களைக்கொண்டது. இத்தியானத்தினை செய்ய 28 முதல் 30 நாட்கள் ஆகும்.[1] இந்த நூல் இத்தியானங்களை செய்ய விழைவோருக்கு தம் வாழ்வில் இயேசு செய்ய விரும்புவதை கண்டறியவும் அவரோடு ஆழ்ந்த உறவு கொள்ளவும் உதவுவதாக நம்பப்படுகின்றது. இது கத்தோலிக்க பார்வையில் எழுதப்பட்டாளும் கத்தோலிக்கரல்லாதவரும் இதனை பயன்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளது. 1548இல் இந்நூலுக்கு திருத்தந்தை மூன்றாம் பவுல் ஒப்புதல் அளித்தார்.[2] இப்பயிற்சிகள் லொயோலா இஞ்ஞாசியார் மன்ரேசா என்னும் குகையில் செய்த தியானத்தின் விளைவாகும். தமிழில் இந்த நூல் 1927இல் சந்தியாகப்பர் என்னும் இயேசு சபை குருவால் மொழிபெயர்க்கப்பட்டு, திருச்சி தூய வளனார் தொழிற்கல்வி அச்சகத்தில் அச்சிடப்பட்டு 'மன்ரேசா: அர்ச். லொயோலா இஞ்ஞாசியார் எழுதிய ஞான முயற்சிகள் (தியானப் பிரசங்கங்கள்) என்னும் பெயரில் வெளியானது. இது 1962இல் மதுரை தே நொபிலி அச்சகப் பண்ணையில் மீள் பதிப்பு செய்யப்பட்டது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia