வாசிங்டன் சுந்தர்
வாசிங்டன் சுந்தர் (Washington Sundar, பிறப்பு அக்டோபர் 5, 1999) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர் ஆவார். இடதுகை மட்டையாளரும், வலதுகை சுழற்பந்து வீச்சாளரும்[2][3] ஆன இவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்காக பன்முக துடுப்பாட்டக்காரராக விளையாடியுள்ளார் [4]. தனது முதல்தர துடுப்பாட்ட வாழ்க்கையை ரஞ்சிக்கோப்பைக்கான தமிழ்நாடு அணிக்காக 2016-17-ம் ஆண்டு அக்டோபர் 6, 2016-ல் துவங்கினார்.[5] இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக டிசம்பர் 13, 2017ஆம் ஆண்டில் தனது முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் விளையாடினார்.[6] மேலும் அதே அணிக்கு எதிராக டிசம்பர் 24, 2017 இல் முதல் பன்னாட்டு இருபது20 போட்டியில் விளையாடினார். அதன் பின்னர் 2017-ம் ஆண்டு 20-20 ஐபிஎல் அணியான ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு அணியில் ரவிச்சந்திரன் அசுவினுக்கு மாற்றாகத் தேர்வானார். விளையாடிய அணிகள்இந்தியத் துடுப்பாட்ட அணி, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு, சன் ரைசர்சு ஐதராபாத்து, குசராத்து டைட்டன்சு பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி. உள்ளூர் போட்டிகள்அக்டோபர் 6, 2016 [7] இல் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடத் துவங்கினார். இவர் தமிழ்நாடு அணிக்காக ரஞ்சிக் கோப்பை போட்டியில் விளையாடினார். ரவிச்சந்திரன் அசுவினிற்குப் பிறகு வலது கை சுழற்பந்து வீச்சாளராக தமிழகத்தில் இருந்து இரண்டாவது வீரராக இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு தேர்வானார். அக்டோபர், 2017 இல் தனது முதல் தர துடுப்பாட்டத்தில் முதல் நூறு ஓட்டங்களை அடித்தார். 2017 - 2018 ரஞ்சிக் கோப்பை [8] போட்டியில் திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் இவர் நூறு ஓட்டங்களை அடித்தார். 2016 ஆம் ஆண்டின் பத்தொன்பது வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியில் இந்திய அணிக்குத் தேர்வானார். சர்வதேச போட்டிகள்நவம்பர், 2017ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் விளையாடுவதற்கான இந்தியத் துடுப்பாட்ட அணியில் விளையாடுவதற்காக இவர் தேர்வு செய்யப்பட்டார்.[9] அதனைத் தொடர்ந்து இதே அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி அணியிலும் இவர் இடம்பெற்றார். கேதார் ஜாதவ் காயம் காரணமாக விலகியதால் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.[10] இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக டிசம்பர் 13, 2017ஆம் ஆண்டில் தனது முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் விளையாடினார்.[11] இவரின் முதன்முறையாக லகிரு திரிமான்னாவினை வீழ்த்தினார். மேலும் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக டிசம்பர் 24, 2017 இல் முதல் பன்னாட்டு இருபது20 போட்டியில் விளையாடினார்.[12] மிக இளவயதில் இந்திய அணிக்காகப் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியவர் எனும் சாதனையைப் படைத்தார். இவரின் முதல் போட்டியின் போது இவரின் வயது பதினெட்டு ஆண்டுகள் 80 நாள்களாக இருந்தது.[13] மார்ச் 2018 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி மற்றும் வங்காளதேச துடுப்பாட்ட அணிக்கு எதிரான 2018 நிதாகஸ் கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பு பெற்றார். பவர்பிளேயில் சிக்கனமாக பந்துவீசினார். ஓவர்களுக்கு 6 ஓட்டங்களுக்கும் குறைவாகவே விட்டுக் கொடுத்துள்ளார். ஓட்டங்கள் எதுவும் விட்டுக்கொடுக்காமல் 3 இலக்குகளைக் கைப்பற்றினார். மிக இளம்வயது வீரர் ஒருவரின் சாதனையாக இது கருதப்படுகிறது. இந்தத் தொடரின் தொடர் நாயகன் விருதைப் பெற்றார். உசாத்துணைகள்
|
Portal di Ensiklopedia Dunia