வி. மோகினி கிரி
வி. மோகினி கிரி (V. Mohini Giri) ஓர் இந்திய சமூக சேவை ஊழியர் மற்றும் ஆர்வலர் ஆவார். இவர் புது தில்லியை சார்ந்த சமூக சேவை நிறுவனமான கில்ட் ஆஃப் சர்வீசில் தலைவராக உள்ளார். இவ்வமைப்பு 1979ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் நிதி பாதுகாப்பு ஆகியவற்றிற்கான பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பிற்காக இந்த அமைப்பு முக்கியத்துவம் அளிக்கிறது. 1972 ஆம் ஆண்டு இவர் புது தில்லியில் போர் விதவைகள் சங்கத்தை நிறுவினாா். அவர் தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவராகவும் (1995-1998) இருந்தாா்.[2] 2007 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது உயர்ந்த குடிமகன் கௌரவமான பத்ம பூஷன் விருது இவருக்கு வழங்கப்பட்டது. [3] ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணிஇலக்னோவில் அறிஞர் டாக்டர். வி. எசு. இராமுக்கு மகளாக இவர் பிறந்தார். இலக்னோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார், தில்லி பல்கலைக்கழகத்தின் பண்டைய இந்திய வரலாறு பாடத்தில் முதுகலை பட்டமும், ஜி.பீ. பண்ட்டு பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டமும் பெற்றாா். [4] இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியான வி.வி.கிரியின் மருமகளும் ஆவாா். [1] பணிகிரி ஒரு கல்வியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இலக்னோ பல்கலைக்கழகத்தில் பெண்கள் ஆய்வுத் துறையை நிறுவினார்[5] 1971 ஆம் ஆண்டில் இந்திய-பாக்கித்தான் போருக்கு பின்னர் 1972 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட யுத்த விதவைகள் சங்கத்தின் நிறுவனராகவும் தலைவலராகவும் இருந்துள்ளார்.[6] மேலும் 2000 ஆம் ஆண்டில் தெற்காசியாவில் அமைதிக்கான மகளிர் முன்முயற்சியின் நிறுவனர் அறங்காவலராகவும் இருந்தார்.[4] நியூயார்க் சார்ந்த சர்வதேச தொண்டு நிறுவனமான பசி திட்டம் குழு உறுப்பினர் பொறுப்பிலும் இவர் இருந்துள்ளார்.[7] மேற்கோள்கள்
நூற்பட்டியல்
|
Portal di Ensiklopedia Dunia