விக்கிப்பீடியா:சான்று சேர்க்கும் திட்டம்தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளின் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு,
இத்திட்டம் பற்றிய உங்களின் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். சந்தேகம் எழுந்தால் பிற பயனர்களிடம் உரையாடவும். சான்று சேர்க்கப்பட வேண்டிய கட்டுரைகள்சான்றுகள் குறித்து அ. கே. கேஎவ்வாறு சான்று சேர்ப்பது?
மேற்கோளை உள்ளிடுதொகுக்கும் பெட்டியில் உள்ள புத்தகம் போன்ற பொத்தானை (கீழுள்ள படிமத்தில் சிவப்பு நிற கட்டத்தில் குறிக்கப்பட்டுள்ளது) அழுத்தும் போது கீழுள்ள படிமத்தில் குறிக்கப்பட்டுள்ளதைப் போல புதிய பெட்டி வரும். மேற்கோளை அப்பெட்டியில் இட்டுவிட்டு உள்ளிடு பொத்தானை அழுத்தவும். ![]() புரூவ் இட்
முடிந்தது! வெற்றிகரமாக நீங்கள் புரூவ் இட் கருவியை உங்களுடைய பயனர் பக்கத்தோடு இணைத்துவிட்டீர்கள், நீங்கள் இனி இக்கருவையினை பயன்படுத்தத் தொடங்கலாம். ஏதேனும் ஒரு பக்கத்தில் நீங்கள் இப்போது தொகு பொத்தானை சொடுக்கவும். பிறகு ப்ரூவ் இட் கருவியில் உள்ள "மேற்கோள்கள்" அல்லது "ஒரு மேற்கோளைச் சேர்க்கவும்" பொத்தானை சொடுக்கினால் புரூவ் இட் கருவி பெரிதாக்கப்படும்.
எத்தகைய சான்று சேர்ப்பது?நம்பத்தகுந்த சான்றுகள் இணைக்கப்பட வேண்டும். வலைத்தளங்களின் இணைப்புகளை முடிந்தவரை தவிர்க்கவும். அவரவருடைய சொந்த தளத்திற்கோ, வலைத்தளங்களுக்கோ இணைப்பு கொடுப்பது விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கு புறம்பானது. செய்திகளை வழங்கும் த இந்து, தினமலர், தினத்தந்தி, தினகரன், மாலை மலர், தமிழ் முரசு, புதிய தலைமுறை போன்ற தளங்களை ஆதாரமாக தரலாம். நூல்களின் மூலங்களை ஆதாரமாக தரலாம். திரைப்படங்களுக்கு ஐஎம்டிபி தளத்தை ஆதாரமாக அளிக்கலாம், ஒரு சுவரொட்டி அல்லது திரைக்காட்சியை இணைக்கலாம். சான்று குறித்த மேலதிக தகவலுக்கு, விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் பக்கத்தினை பார்க்கவும். ஆங்கில விக்கியின் சான்றுகளை அப்படியே நகலெடுக்கலாமா?மொழிமாற்றுக்கட்டுரைகளுக்கு ஆங்கில விக்கியின் சான்றுகளை பயன்படுத்தலாம். ஏனைய கட்டுரைகளில் அவசியாக உள்ளபோது மட்டும் பயன்படுத்தவும். தமிழ் விக்கிப்பீடியர்கள் அனைவருக்கும் ஆங்கிலப்புலமை இருக்க வாய்ப்பிலை. ஆகையினால் குறைந்த அளவு பிற மொழி இணைப்புகளை இடவும். நான் எழுதிய நூல்களை ஆதாரமாக இணைக்கலாமா ?சொந்த கட்டுரைகளை விக்கிப்பீடியாவில் எவ்வாறு எழுத முடியாதோ அதே போல் உங்களுடைய நூல்களை நீங்களே உசாத்துணையாக தர இயலாது. என்னிடம் வேறு கேள்விகள் உள்ளன, யாரை கேட்பது?விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம் இங்கு கேட்கலாம். பிற பயனரின் பேச்சுப் பக்கத்திலும் கேட்கலாம். முன்னெடுப்பு |
Portal di Ensiklopedia Dunia