விக்கிப்பீடியா:பொதுவான மொழிபெயர்ப்பு கலந்துரையாடல்கள்தனி ஒரு கட்டுரை சாராத பொதுவான கலைச்சொல் மொழிபெயர்ப்பு கலந்துரையாடல்கள் இந்தப் பக்கத்தில் இடம் பெறும். உயிரியல் குறித்து பல விரிவான கட்டுரைகள் எழுதும் ஆர்வமிருக்கிறது. எனினும் இத்துறைக்கான சரியான கலைச்சொல் அகராதி இல்லாதது பெருந் தடையாக இருக்கிறது. பின் வரும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான நல்ல தமிழ் சொற்களுக்கான உங்கள் ஆலோசனைகளைத் தாருங்கள். நன்றி. chromosomeChromos = color , some = body ஒரு குரோமோசோம் பல மரபணுக்களை உள்ளடக்கியது என்பதால் மரபணுச் சரம் என அழைக்கலாம் என்பது என் கருத்து. அல்லது, ஆங்கிலச் சொல்லை அப்படியே தமிழ்ப்டுத்தி வண்ணமெய் என்று அழைக்கலாமா?
In the LIFCO english-tamil dictionary, chromosomes are called 'அணுக் கோல்கள்' --முரளி மோகன் 15:55, 9 ஆகஸ்ட் 2005 (UTC) நிறமூர்த்தம் என்ற சொல்லே இலங்கை பாடப்புத்தகங்களிலும் கல்வித்திட்டத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள உயிரியல் மாணவர்களுக்கு அந்த சொல்லே பரிச்சயமானது. --மு.மயூரன் 16:17, 12 அக்டோபர் 2005 (UTC) நான் பார்லி கட்டுரை மொழி மாற்றம் செய்யும் போது மரபுத்தாங்கி என்ற சொல்லை பயன் படுத்தினேன். மரபனுத்தாங்கி என்ற சொல் சரியாக இருக்குமா? ஆங்கில பெயர் சூட்டிய போது அவற்றின் உண்மையான செயல் அறியப்பட்டிருக்க வில்லை. எனவே, அதன் உருவத்தை வைத்து பெயர் சூட்டினர். தற்போது அதை அப்படியே நிர மூர்த்தம் என்று மொழி மாற்றம் செய்வது சரியல்ல என்பது எனது கருத்து. நன்றி. Pappadu Pappadu 04:57, 7 நவம்பர் 2005 (UTC) genomeகை ரேகை ஒருவனை அடையாளம் காட்டவல்லது போல Genomeம் ஒரு உயிரினத்தை அடையாளம் காட்டவல்லது என்பதால் மரபு ரேகை என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். அனைவரின் கருத்தையும் அறிய ஆவல்.
மரபு ரேகை என்பது genetic fingerprint என்று பொருளாகி விடுமல்லவா? மொத்த மரபுப்பொருள் அல்லது மரபுப் பொருளடக்கம் சரியாக இருக்குமா? நன்றி - Pappadu மரபுத்தகவற்ச்சுருள்/மரபுத்தகவற்ச்சரம் என்பது பொருந்துமா? ஏனென்றால் genome is nothing but a long stretch of the genetic material made of DNA.so I guess it might fit.எனவே இங்குள்ள நண்பர்களின் கருத்துக்காக காத்திருக்கிரேன்[User:அனபாயன்] eukaryoteமெய்க்கருத்திசுளினம்? -- Sundar \பேச்சு 6 ஜூலை 2005 04:38 (UTC)
prokaryoteமுற்கருத்திசுளினம் என்பது என் பரிந்துரை. மாற்றுக்கருத்து இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்--ரவி (பேச்சு) 09:29, 9 ஆகஸ்ட் 2005 (UTC) exonவெளிப்படுமரபுப்பொருள்? conveys the meaning of "expression", the reason Walter Gilbert termed them "exons"; adapted fm the suggestion for intron. how about வெளிபடு மரபணுக்கூறு? The word மரபணுப்பொருள் seems to indicate something like a gene rather than part of a gene to me! --Pappadu 21:19, 11 நவம்பர் 2005 (UTC) intronஇடைபடுமரபுப்பொருள்? -- Sundar \பேச்சு 6 ஜூலை 2005 09:30 (UTC) exon - செயல்படுமரபுப்பொருள்? புருனோ மஸ்கரனாஸ் 01:49, 21 ஜூலை 2008 (UTC)ி "இடைபடுமரபுச்சரம்",இதன் பொருள் intronனுக்கு இணையாக உள்ளது போல தோன்றுகிறது?[User:அனபாயன்] 19 நவம்பர் 2008 SundarSchemaவரை மாதிரி ?--ரவி (பேச்சு) 09:29, 9 ஆகஸ்ட் 2005 (UTC) Parse treeவிடை தெரிந்தால் வெண்பா கட்டுரையில் மாற்றவும் Metabolism? விடை தெரிந்தால் ஒளிச்சேர்க்கை கட்டுரையில் மாற்றவும்
Cellular respirationதிசுள் மூச்சு? விடை தெரிந்தால் ஒளிச்சேர்க்கை கட்டுரையில் மாற்றவும் சொல் பரிந்துரை உதவி வேண்டும்
நன்று செல்வா. என்னுடைய சில பரிந்துரைகள்.
இந்த எல்லை எனும் பொருளைப் பல கோணங்களில் தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட சொற்களால் வழங்கியுள்ளதைக் கண்டு புல்லரித்துப் போனேன். -- சுந்தர் \பேச்சு 06:07, 29 நவம்பர் 2013 (UTC) -- சுந்தர் \பேச்சு 06:07, 29 நவம்பர் 2013 (UTC) Alphabetic listவணக்கம், நாம் அனைவரும் (அல்லது பெரும்பாலோனோர்) ஒரு இணக்க முடிவுக்கு வந்ததும், ஒரு அகரவரிசை பட்டியல் தயாரித்தால் அனைவரும் ஒரே மாதிரியான அறிவியல் தமிழ் சொற்களை பயன் படுத்த ஏதுவாக இருக்கும். குறைந்தது நாம் மொழி பெயர்ப்பில் பயன் படுத்திய சொற்களை ஒரு பட்டியலிட்டால் மற்றவர்கள் அதை தொடர்ந்து கவனித்து வரலாம். நானே துவங்குகிறேன்.
இலத்திரனியல் சொற்குழப்பங்களும் தரப்படுத்தல் தேவையும்இலத்திரனியல் துறையில் பல ஆங்கில சொற்கள் வரலாறு காரணமாகவோ, அல்லது பாவிப்பு பரிச்சியம் காரணமாகவோ கணித விபரிப்புக்கு அல்லது பயன்பாட்டின் உண்மை அடிப்படைக்கு மாறக உபயோகிக்கப்படுவதுண்டு. உதாரணம், கரண்ட்டை (Current) மின்காந்த சத்தி ஓட்டம் என்ற பிழையான கருத்துநிலை உண்டு. மேலும், மின் திறனையும் (Power) மின்சத்தியையும் (Energy) ஒரே அர்த்தத்தில் பயன்படுத்துவோரும் உண்டு. தமிழ் விக்கிபீடியாவில் ஆரம்பத்தில் இருந்து சற்று கவனமாக இருந்தால் ஒரு சீரான, தரப்படுத்தப்பட்ட ஒரு சூழலை தோற்றுவிக்கலாம். ஆனால், இதற்கு தமிழில் ஏற்கனவே நன்கு பாவிப்பில் இருக்கு சொற்களை தவிர்ப்பது கூடாது. எனவே, சொற் தெரிவுக்கு பிற பயனர்களின் தங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்தால், அக் கருத்துக்களையும் உள்வாங்கி தரப்படுத்தலாம்.
--Natkeeran 00:42, 19 நவம்பர் 2005 (UTC) பொருள் விளக்கம் தேவை! பகுப்பாய்வு எதிர் பகுத்தாய்வு
Analysis and Categorization are two different acts, yet, often in Tamil same words are used. Also, Rationlization and Reasoning can have two different and even opposing meaning, yet Tamils often use it to mean Reasoning. What is the proper usage? --Natkeeran 18:15, 20 ஜனவரி 2006 (UTC) Suggest traslation for Deterministic Finite Automaton and Non-DFA--Natkeeran 23:42, 23 ஜனவரி 2006 (UTC) பௌதீகவியல் vs இயற்பியல்: For Recordsஇப்பக்கங்களை உருவாக்கி வரும் அன்பர்களே! பௌதீகவியல் என்பது கிட்டத்தட்ட ஒரு வழக்கிழந்த சொல். தமிழ்நாட்டின் தமிழ்வழிக் கல்வி-பள்ளிக்கூட பாடப்புத்தகங்களில் இது "இயற்பியல்" என்றே வழங்கப்படுகிறது. இந்த வழக்கோடு ஒத்துப்போக, அன்பர்கள் இச்சொல்லாட்சியை "இற்றைப்படுத்த" வேண்டுகிறேன்!
portalஅன்புடன் விக்கிபீடியர்களுக்கு, தமிழ் விக்கிபீடியாவில் portal என்ற பெயர்வெளிக்கான தமிழ் சொல்லாக நுழைவாயில் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது என அறிகிறேன். அய்யாவழி நுழைவாயிலில், நுழைவாயில்:அய்யாவழி என்றே இருக்கிறது. ஆனால் முகப்பில் சமுதாய வலைவாசல் என்றவாறான மொழி பெயர்ப்பு காணப்படுகிறது. என்னுடைய கருத்துப்படி வலைவாசல் என்பதே சதியானதும், பொருத்தமானதுமான சொல்லாகும். இதனையே நாம் பெயர்வெளிக்கும் பயன்படுத்தலாமே? --மு.மயூரன் 17:12, 11 ஏப்ரல் 2006 (UTC) பெரும்பாலான கலைச்சொல் அகராதிகளில் வலைவாசல் என்றுதான் உள்ளது. நுழைவாயில் என்பதும் பொருத்தமில்லாமல் இல்லை. மற்றப் பயனர்களும் இதுபற்றிய தங்கள் கருத்துக்களை முன்வைத்தால் நல்லது. Mayooranathan 17:34, 11 ஏப்ரல் 2006 (UTC)
வலைவாசல் பொருத்தமானதாகவே படுகின்றது. நுழைதல், வாசல் இரண்டும் ஒரே பொருளை நோக்குகின்றன. வலை கூடிய தகவலை தருகின்றது. --Natkeeran 17:53, 11 ஏப்ரல் 2006 (UTC)
தமிழக அரசின் கையேடுசென்னையில் வசிக்கும் அன்பர்கள் யாராவது தமிழக அரசின் அதிகாரபூர்வ கையேட்டை பெற்றால் பல சொற்களுக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளலாம் புருனோ மஸ்கரனாஸ் 17:33, 23 ஆகஸ்ட் 2006 (UTC) என்ன கையேடு என்பது குறித்த மேலதிகத் தகவலகளைத் தந்தால் பயனுள்ளதாக இருக்கும்--ரவி 23:23, 23 ஆகஸ்ட் 2006 (UTC) திரு தமிழ்குடிமகன் அவர்கள் தமிழ் அமைச்சராக இருந்த பொழுது ஒரு கையேட்டை வெளியிட்டார். தற்பொழுது அது இனையத்தில் உள்ளது. உதாரணம் [1] பெரும்பாலான ஆங்கில சொற்களுக்கு தமிழ் சொல் இங்கு உள்ளது. இதிலிருந்து நமது பணியை தொடங்கலாம் புருனோ மஸ்கரனாஸ் 17:15, 25 ஆகஸ்ட் 2006 (UTC) http://www.tamilvu.org/library/o33/html/o3300001.htm
சொல்லாக்கக் கேள்விகள்1. மீள்வரு தொடர்பு (Recurrence relation). மீண்டும் மீண்டும் வரும் தொடர்புக்கு மீள்வரு தொடர்பு என்று பெயர். இதை மீள்வருத்தொடர்பு என்று எழுதினால் அதே பொருள் வருமா? த் - தேவை இல்லை என்று நினைக்கிறேன். த் இட்டால் பொருள் சிதையலாம்--ரவி 09:45, 20 ஜூன் 2007 (UTC) 2. induction: உய்த்தறிதல் Deduction : பிரமாணித்தறிதல். இது சரியா? பிரமாணித்தல் - தமிழ் போலும் தெரியவில்லை. பொருளும் புரியவில்லை. வேறு சொல் முயலலாம்--ரவி 09:45, 20 ஜூன் 2007 (UTC) 3. A stick of unit length: ஓர் ஒருமை நீளமுள்ள கழி. இது எனக்கு சரியாகவே படவில்லை. இதற்கு மாற்று மொழிபெயர்ப்பு என்ன? பார்க்கவும் : கேடலான் எண்கள், மூன்றாவது உட்பிரிவு. ஓர் அலகு நீளமுள்ள கழி / குச்சி?--ரவி 09:45, 20 ஜூன் 2007 (UTC) --Profvk 09:12, 20 ஜூன் 2007 (UTC)
ரவி, நன்றி. மீள்வரு தொடர்பு, அலகு இரண்டும் சரி. நற்கீரன், Reduction என்பது பொதுநிலையிலிருந்து குறிப்பிட்ட (கீழ்) நிலைக்கு வருவது. Deduction என்பது, தருக்கரீதியாக, காரண காரியங்களுடன் ஒரு தேற்றத்தையோ அல்லது ஒர் உண்மையையோ அறுதிப்படுத்துவது அல்லது நிறுவுவது. இதற்கு இன்னும் தமிழ் எனக்குத்தெரியவில்லை. உய்த்தறிதலுக்கு ஒரு complement வேண்டும். --Profvk 10:49, 20 ஜூன் 2007 (UTC)
--Profvk 11:01, 25 ஜூன் 2007 (UTC) தனிப்பட்டது என்பது சரியாக உள்ளது. case by casecase என்ற ஆங்கிலச்சொல்லுக்கு பல தமிழ்ச்சொற்கள் உள்ளன. கணிதத்திலும் அறிவியலிலும் 'in this case', 'this case is impossible' 'in this special case' என்ற பிரயோகங்கள் தேவைப்படுகின்றன். case என்ற சொல்லுக்கு அகராதியைப் பார்த்தபோது எனக்குக் கிடைத்த சொற்கள்: அக்கீகத்து; அதிதேசம்; பட்சம்; வாது, வீடு. இவைகளில் 'பட்சம்' ஒன்றைத்தவிர இதர சொற்கள் எனக்கு சரியாகப்படவில்லை. 'பட்சம்' என்ற சொல்லும் 'case' என்ற பெயர்ச்சொல்லுக்கு இணையாகக் கணிதத்தில் பயன்படுமா என்று தோன்றவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, case by case என்ற பொருள் பொதிந்த சொல்லாட்சிக்குச் சரியான தமிழ்ச்சொல் கிடைக்கவில்லை. --Profvk 11:16, 20 ஜூன் 2007 (UTC) case என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஆங்கிலத்திலேயே பல பொருட்கள் உள்ளன. http://dictionary.reference.com/browse/case , மேலும் இத்தகு பல பொருள் கொண்ட ஒரு மொழிக்கு, தமிழில் ஒற்றைச் சொல் தேடுவது பொருந்தாது. இடத்திற்குத் தக்கவாறு பொருள் கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து. case by case என்பதை 'ஒவ்வொரு நிகழ்விலும்' என்று கொள்ளலாம். இது 'விஷயம்' என்கின்ற வடசொல்லுக்கு நிகரான வழக்கம் உடையது. விஷயம் என்பதை நிகழ்வு என்றோ, கருத்து என்றோ, பொருள் என்றோ இடத்திற்கேற்றவாறு பயன்படுத்துவது போல் case என்பதற்கும் இடத்திற்கேற்றவாறு பொருள் கொள்ளல் வேண்டும். தமிழ் இலக்கணத்தில் கேள்விகள்"உறுப்புக்கள்", "உறுப்புகள்": எது சரி? --Profvk 11:12, 25 ஜூன் 2007 (UTC) உறுப்புகள் என்பதே சரியென்று நினைக்கிறேன். ஓரெழுத்து மொழிகளுக்கு மட்டுமே பன்மையில் 'க்' வரும். சான்று : பூக்கள், ஈக்கள். விக்கிப்பீடியா கலைச்சொற்கள்விக்கிப்பீடியா உதவிபக்கங்கள் தமிழாக்கம் செய்யப்பட வேண்டும். வார்ப்புருவில் transclusion மற்றும் substitution இவற்றிற்கு புழங்கிவரும் சொற்கள் யாவை ?
--மணியன் 08:16, 25 ஆகஸ்ட் 2009 (UTC) SDOSolar Dynamics Observatory என்பதை தமிழில் எப்படி பெயரிடுவது? --குறும்பன் 01:56, 27 ஏப்ரல் 2010 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia