பயனர் பேச்சு:Seesivaவாருங்கள்!வாருங்கள், Seesiva, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்! உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள். தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்! நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும். பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
-shanmugam 06:04, 17 சனவரி 2012 (UTC) தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி வணக்கம், Seesiva! ![]() தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும். பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:
ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:56, 4 நவம்பர் 2013 (UTC) வருக வருக --Tshrinivasan (பேச்சு) 07:19, 5 நவம்பர் 2013 (UTC) விக்கியிடை இணைப்புகள்புதிதாக தொடங்கப்படும் கட்டுரைகள் ஏனைய விக்கி மொழிகளுடன் (கட்டுரைகள் இருந்தால்) தொடர்புபடுத்தப்பட வேண்டும். பார்க்க உதவி:விக்கியிடை இணைப்புகள். --Anton·٠•●♥Talk♥●•٠· 01:40, 9 நவம்பர் 2013 (UTC) தாய் மண்ணே வணக்கம் (நூல்)...தாய் மண்ணே வணக்கம் (நூல்) எனும் கட்டுரையில் கூடுதலாக தகவல்களைச் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:41, 9 நவம்பர் 2013 (UTC) கண்டிப்பாக செய்கிறேன் செவிமடுத்து விரிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி! கட்டுரைகள் முடிந்த அளவிற்கு தகவல்களைக் கொண்டிருந்தால், அதன் தரம் உயரும் என்பது உண்மை. இதனையே நாம் எப்போதும் வலியுறுத்துகிறோம். தங்களால் இயன்றால் பிற பயனர்கள் கட்டுரையை விரிவுபடுத்துகிறார்கள்; அல்லது இங்ஙனம் கோரிக்கை வைக்கிறார்கள். உங்களின் பங்களிப்பினை பெரிதும் எதிர்பார்க்கிறோம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:22, 10 நவம்பர் 2013 (UTC) வேணுகோபாலன்/புஷ்பா தங்கதுரை...இக்கட்டுரை புஷ்பா தங்கதுரை என நகர்த்தப்பட்டுள்ளது. ஸ்ரீ வேணுகோபாலன் எனத் தேடினாலும் புஷ்பா தங்கதுரை எனும் கட்டுரைக்கு வழிமாற்று வரும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:40, 11 நவம்பர் 2013 (UTC) தலைப்பில் குறியீடுகளை இடுவதில்லை. பரவலாக அறியப்படும் பெயரினை முக்கியத் தலைப்பாக வைத்துவிட்டு, மற்ற பெயர்களுக்கு வழிமாற்று தரலாம். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:44, 11 நவம்பர் 2013 (UTC) தங்களின் வழிகாட்டுதலுக்கு நன்றி. பின்வரும் காலங்களில் கண்டிப்பாக பின்பற்றுகிறேன். பதக்கங்கள்
மா. செல்வசிவகுருநாதன், தமிழ்க்குரிசில் இருவருக்கும் மிக்க நன்றி. தங்களின் வார்த்தைகள் என்னை ஊக்கப்படுத்துகின்றன.
ஒவ்வொரு வாரமும் உங்கள் பங்களிப்புகளின் நிலையை கவனிக்க இங்கு சொடுக்கவும். நந்தினிகந்தசாமி (பேச்சு) 09:06, 2 திசம்பர் 2013 (UTC)
ஓரலகுச் சோதனை...ஓரலகுச் சோதனை எனும் கட்டுரை ஏற்கனவே உள்ளது. அதனை விரிவுபடுத்த வேண்டுகிறேன். அலகு சோதனை என்பதிலிருந்து ஓரலகுச் சோதனைக்கு வழிமாற்று செய்துவிடலாம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:40, 12 நவம்பர் 2013 (UTC) விக்கியிடை இணைப்புகள்புதிதாக தொடங்கப்படும் கட்டுரைகள் ஏனைய விக்கி மொழிகளுடன் (கட்டுரைகள் இருந்தால்) தொடர்புபடுத்தப்பட வேண்டும். பார்க்க உதவி:விக்கியிடை இணைப்புகள். இது பற்றி விளங்காதுவிட்டால் குறிப்பிடுங்கள். --Anton·٠•●♥Talk♥●•٠· 12:11, 12 நவம்பர் 2013 (UTC) Anton இனி கண்டிப்பாக செய்கிறேன்.
அடைப்புக்குறிக்குள் ஆங்கில பதங்களையும் இடுகிறேன், தங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி சிவகார்த்திகேயன் (பேச்சு) 12:53, 12 நவம்பர் 2013 (UTC) படிமம்Gartner136.png படிமத்தை பதிவேற்றியுள்ளேன். நீங்களும் பதிவேற்றலாம். சின்னங்களை "கட்டுள்ள சின்னங்கள்" என்ற உரிமத்தின் கீழ் பயன்படுத்தலாம். விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும் - இது உங்களுக்கு உதவலாம். சிறப்பாக, முக்கிய கட்டுரைகளை உருவாக்குவதற்கு வாழ்த்துக்கள். --Anton·٠•●♥Talk♥●•٠· 10:40, 13 நவம்பர் 2013 (UTC) --மிக்க நன்றி சிவகார்த்திகேயன் (பேச்சு) 16:50, 13 நவம்பர் 2013 (UTC) நன்றிதங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி :).--நந்தினிகந்தசாமி (பேச்சு) 03:00, 19 நவம்பர் 2013 (UTC) தமிழ்ப் பதங்கள்கணினிக் குற்றங்கள் என்ற கட்டுரையில் தமிங்கிலம் காணப்படுகின்றனவே. சைபர் க்ரைம், ஸ்பேம் போன்றவற்றதை் தவிர்த்து தமிழில் எழுதலாமே? ஆங்கில சொற்களுக்கான தமிழ் பதங்கள் தெரியாவிட்டால், விக்சனரி அல்லது உதவிப்பக்கத்தை நாடுங்கள். சீராக கட்டுரைகளை உருவாக்குவதற்குப் பாராட்டுக்கள். --Anton·٠•●♥Talk♥●•٠· 13:38, 19 நவம்பர் 2013 (UTC)
உங்களின் கவனத்திற்கு...எரிதம் (மின்னஞ்சல்) என்பதிலிருந்து தகவல்களை எரித மின்னஞ்சல் என்பதில் சேருங்கள். உரிய வழிமாற்றினைத் தந்துவிடலாம். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)
வேண்டுகோள்வணக்கம். வில்பர் சற்குணராஜ் கட்டுரையில், \\வில்பர் சர்குணராஜ் ஒரு நிகழ்ச்சி கலைஞர் மதுரை, தமிழ்நாடு, இந்தியா.கிட்டத்தட்ட 3.1 மில்லியன் பார்வையாளர்களை கொண்ட இந்தியாவின் முதல் யூடுப் பரபரப்பு,[1] என்று அழைக்கப்படுகிறது.\\ இப்பகுதி தானியங்கி தமிழாக்கம் எனத் தோன்றுகிறது. தானியங்கி மொழிமாற்றம் விக்கியில் தடைசெய்யப்பட்டுள்ளதால் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:18, 22 நவம்பர் 2013 (UTC).
மக்கள் நீதிமன்றம் கட்டுரையில் தீர்த்து வைக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கைக்கு தரப்பட்ட மேற்கோள் இணைப்பில் நீங்கள் கட்டுரையில் தந்துள்ள எண் இல்லையென நினைக்கிறேன். ஒருமுறை சரிபார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:49, 26 நவம்பர் 2013 (UTC)
உங்கள் கவனத்திற்கு1. சிவா, விக்கியில் கட்டுரைகளில் குறிப்பிடப்படும் மனிதர்களின் (யாராக இருந்தாலும்) பெயர்களுக்குப் பின்னால் ’அவர்கள்’, ’அவர்களால்’ போன்ற மரியாதைச் சொற்கள் தவிர்க்கப்படுகின்றன. இந்த முறையைப் பின்பற்றும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:54, 28 நவம்பர் 2013 (UTC) 2. கட்டுரையின் தொடக்கத்தில் வரும் கட்டுரையின் தலைப்பானது தடித்த சொற்களில் தரப்படல் வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 16:05, 21 திசம்பர் 2013 (UTC) 3. தாங்கள் புதிதாக எழுதும் கட்டுரையில், ஊசாத்துணைகளை சேர்த்துவிடுங்கள்.அதாவது எந்த புத்தகம், எழுதியவர்,வார இதழ் என்றால் வெளியிடப்பட்ட தேதி இவற்றை சேர்க்கவும்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 04:09, 3 திசம்பர் 2013 (UTC)
iwt கருவிஇந்த உதவிப் பக்கத்தில் உள்ளது போன்று இக்கருவியை நிறுவிக் கொள்ளுங்கள். உங்கள் மணல்தொட்டியில் முதலில் சோதித்துப் பாருங்கள். உதாரணத்திற்கு பின்வரும் பந்தியை உங்கள் மணல்தொட்டியில் எழுதி உங்கள் தொகுப்புப் பெட்டியில் காணப்படும் பச்சைச் சுட்டி மேல் சொடுக்குங்கள்.--Kanags \உரையாடுக 13:10, 29 நவம்பர் 2013 (UTC)
வார்ப்புருநீங்கள் கேட்ட வார்ப்புரு இங்குள்ளது.--Kanags \உரையாடுக 11:43, 2 திசம்பர் 2013 (UTC)
உங்கள் கவனத்திற்கு
மாதம் 1000 தொகுப்புகள் மைல்கல்வணக்கம், Seesiva! ![]() நீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :) --இரவி (பேச்சு) 09:31, 3 திசம்பர் 2013 (UTC)
அப்புடிப்போடு போடு போடு போடு--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 07:06, 14 திசம்பர் 2013 (UTC) ஆய்வுகூடம்வார்ப்புரு:Infobox laboratory என்ற வார்ப்புருவை உருவாக்கியுள்ளேன். ஆங்கில விக்கியில் இருந்து எடுத்தது. இதில் label களை மட்டுமே தமிழாக்கம் செய்ய வேண்டும். சிலவற்றைத் தமிழில் எழுதியிருக்கிறேன். நீங்களும் மொழிபெயர்க்கலாம். தகுந்த கட்டுரைகளில் இச்சட்டத்தை இணைக்கலாம்.--Kanags \உரையாடுக 09:44, 5 திசம்பர் 2013 (UTC)
மகள்அதற்குள் தங்கள் மகளையும் ஒரு பயனர் கணக்கை உருவாக்க வைத்துவிட்டீர்களே.:). தங்கள் மகளும் கலக்க வாழ்த்துக்கள்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 14:08, 6 திசம்பர் 2013 (UTC) ஐயா தங்கள் மகளின் பயனர் கணக்கு எப்பெயரில் உள்ளது தயவுசெய்து குறிப்பிடவும்--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 07:05, 14 திசம்பர் 2013 (UTC) சொற்களுக்கிடையில் இடைவெளிபொதுவாக எம்மொழியிலும் இரு சொற்களுக்கிடையில் ஒரு இடைவெளி விட்டு எழுத வேண்டும். குறிப்பாகத் தலைப்புகளில் இது கட்டாயம் கவனிக்கப்பட வேண்டியது.--Kanags \உரையாடுக 09:42, 10 திசம்பர் 2013 (UTC)
உங்களுக்குத் தெரியுமா...? திட்டம்
படிமங்களைப் பயன்படுத்துவது குறித்து...வணக்கம்! படிமங்களைப் பயன்படுத்துதல் குறித்தான விசயங்களில் எனக்கு அவ்வளவாக அனுபவம் இல்லை. அன்டன் அல்லது ஜெயரத்னா இவர்களைக் கேட்டால், உங்களுக்கு உரிய வழிகாட்டல் கிடைக்கும். தாமதமான பதிலுரைக்கு மன்னிக்கவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:22, 15 திசம்பர் 2013 (UTC) வேண்டுகோள்யாராவது போலி உம்ரிக்கர் விருது பக்கத்தை நீக்குக. காரணம்: பாலி உம்ரிக்கர் என்ற புதிய பக்கம் உள்ளது. போலி உம்ரிக்கர் விருது , பாலி உம்ரிக்கர் விருது இரண்டுமே என்னால் தொடங்கப்பட்டது தான். எனவே யாராவது போலி உம்ரிக்கர் விருது பக்கத்தை நீக்குக - raghukraman கேள்விதமிழ்நாட்டுப் பொருளாதாரம், இதில் தமிழ்நாட்டின் பொருளாதாரம், பெட்டியை மாற்றுவது எப்படி? தொகு பக்கத்தில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் என்ற பெட்டி இல்லை. Raghukraman (பேச்சு) 13:28, 6 சனவரி 2014 (UTC) சிறப்பு, ஆலோசனைதங்கள் பங்களிப்புக்கள் கண்டு வியக்கிறேன். தொடர வாழ்த்துக்கள். சிவகார்த்திகேயன், நீங்கள் பயனர் வெளி பேச்சுப் பக்கத்திற்கு புதுப்பயனர் வார்ப்புரு இடத்தேவையில்லை. எ.கா பயனர் பேச்சு:maathavan/navbar. / குறியின் பின் வந்ததால் அதை பயனர் வெளி எனக் கூறுவார். அதற்கு இட தேவையில்லை. பயனர் பேச்சு:{{{பயனர் பெயர்}}} போன்றவற்றிற்கு இட்டாலே போதும். நன்றி --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 10:43, 30 திசம்பர் 2013 (UTC)
பதில்உங்கள் கேள்விக்கு என் பேச்சுப் பக்கத்தில் பதில் எழுதியுள்ளேன்.--நந்தகுமார் (பேச்சு) 19:47, 6 சனவரி 2014 (UTC) உங்களின் கவனத்திற்கு...வணக்கம்! மேற்க்கோள்கள் என எழுதாமல் மேற்கோள்கள் என எழுதுங்கள்! நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:44, 7 சனவரி 2014 (UTC) காண்க...மேற்கோள் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:46, 7 சனவரி 2014 (UTC)
வேண்டுகோள்...வணக்கம்! உங்களின் தொடர்பங்களிப்பிற்கு பாராட்டுகள்! உங்களின் கட்டுரைகளில் உரிய மேற்கோள்களை இணைத்து, தரமுயர்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:18, 10 பெப்ரவரி 2014 (UTC) வெளியிணைப்புகள் என்பது சரியான சொல்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:20, 10 பெப்ரவரி 2014 (UTC)
உங்கள் பார்வைக்குபேச்சு:கந்தசாமிக் கவிராயர் பார்க்கவும்.--Booradleyp1 (பேச்சு) 16:17, 17 பெப்ரவரி 2014 (UTC)
சந்தேகம்சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற முக்கிய வழக்குகள் என்ற கட்டுரையை தொடங்கியிருப்பதைக் கண்டேன். இவ்வாறான கட்டுரை ஆங்கில விக்கியிலோ, தமிழ் விக்கியிலோ எழுதப்பட்டுள்ளதா?. இவ்வழக்குகள் குறித்தான தனித்தனிக் கட்டுரைகள் விக்கியில் இடம்பெற்றிருக்கின்றன என நினைக்கிறேன். இவ்வாறான தொகுப்பு அவசியமானது என்று கருதுகின்றீர்களா என தெரிவிக்கவும், நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:07, 20 பெப்ரவரி 2014 (UTC)
முதற்பக்க அறிமுகம் வேண்டல்வணக்கம் சிவ கார்த்திகேயன். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/சிவ கார்த்திகேயன் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி.--இரவி (பேச்சு) 10:42, 7 மே 2014 (UTC)
விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு![]() வணக்கம் Seesiva!
--கண்டிப்பாக செய்கிறேன் இரவி . பயனர் உரையாடல் பக்கத்தில் தெரிவித்தால் போதுமா??? சிவகார்த்திகேயன் (பேச்சு) 09:59, 16 சனவரி 2015 (UTC)
முதற்பக்க அறிமுக வாழ்த்துகள்வணக்கம் சிவா. அடுத்த இரு வாரங்களுக்கு உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருவதில் மகிழ்கிறோம். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 06:47, 13 பெப்ரவரி 2015 (UTC)
வாழ்த்துக்கள். விக்கிப்பீடியாவே ஹேங் ஆகனும். அந்த அளவுக்கு தொகுக்க வாழ்த்துக்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 22:05, 6 மார்ச் 2015 (UTC) வேண்டுகோள்பேச்சு:மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில் -இங்கு உங்கள் கருத்தினைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 13:44, 20 பெப்ரவரி 2015 (UTC) பேச்சு:வினோத் மேத்தா பார்க்கவும்Booradleyp1 (பேச்சு) 16:34, 9 மார்ச் 2015 (UTC)
தானியங்கி வரவேற்புவணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:48, 7 மே 2015 (UTC) விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு![]() வணக்கம்! சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்! தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:44, 8 சூலை 2015 (UTC) உளங்கனிந்த நன்றி!![]() வணக்கம்! விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி! - ஒருங்கிணைப்புக் குழு --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:40, 25 சூலை 2015 (UTC) விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் ஒருங்கிணைப்பாளராக உதவ வேண்டுகிறேன்விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் ஒருங்கிணைப்பாளராக இணைந்து உதவ வேண்டுகிறேன். திட்டத்துக்கு ஏற்ற தலைப்புகளை இனங்காணல், அவற்றில் பங்களிக்குமாறு ஆர்வமுள்ள பங்களிப்பாளர்களைத் தூண்டுதல், விதிகளுக்கு ஏற்ப கட்டுரைகள் வடிக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கண்காணித்து முடிவுகளை அறிவித்தல் ஆகிய பணிகளில் உதவி தேவை. நன்றி.--இரவி (பேச்சு) 08:56, 25 அக்டோபர் 2015 (UTC)
உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்
நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவுதமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு தொடங்கியுள்ளது. பெயரைப் பதியவும் கூடுதல் விவரங்களுக்கும் இங்கு வாருங்கள். பெயரைப் பதிவு செய்ய இன்னும் ஒரு நாளே உள்ளது.--இரவி (பேச்சு) 13:11, 27 மார்ச் 2016 (UTC) விக்கிக்கோப்பைவிக்கிக்கோப்பையில் பங்குபற்றியமைக்கு மிக்க நன்றிகள். புள்ளிகளை கணக்கிடுவதற்காக நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை பயனர் நிலவரம் என்பதில் சேர்த்துவிட வேண்டுகிறோம் ஏற்கனவே சேர்ந்திருந்தால் இவ்வறிவிப்பை கவனிக்கத்தேவையில்லை.-- மாதவன் ( பேச்சு ) 07:42, 3 ஏப்ரல் 2016 (UTC) விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்![]() விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்! தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன. 3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக மேலதிக விபரங்களை இங்கே காணலாம். MediaWiki message delivery (பேச்சு) 16:13, 20 சூலை 2016 (UTC) விக்கிக்கோப்பை 2016விக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 00:46, 23 சூலை 2016 (UTC) விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு![]() வணக்கம்! சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்! சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.
இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :) தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி! -- இரவி விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம்![]() விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்! தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன. 3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக மேலதிக விபரங்களை இங்கே காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --MediaWiki message delivery (பேச்சு) 07:04, 31 சூலை 2016 (UTC) விக்கிக்கோப்பை 2017![]() வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள். போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!.. .
--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:35, 9 திசம்பர் 2016 (UTC) தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி.. போட்டி: போட்டிக்காலம் போட்டிக்காக
நீங்கள் இங்கு --ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:28, 16 மார்ச் 2017 (UTC) துப்புரவுப் பணியில் உதவி தேவைவணக்கம். இது பலருக்கும் பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும். சென்ற மாதம், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய விக்கிப்பீடியா பயிற்சிகள் நடைபெற்றன. இந்த மாதமும் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். பெருமளவில் வரும் புதுப்பயனர்களினால் புதிய கட்டுரைகளின் எண்ணிக்கையும் அண்மைய மாற்றங்களில் தொகுப்புகளும் கூடி வருகின்றன. இவர்களுக்கு வழிகாட்ட கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி.--இரவி (பேச்சு) 12:28, 7 சூன் 2017 (UTC) ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவைவணக்கம். ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நிகழ்வு நடக்கும் இடங்கள், மற்ற விவரங்களை விரைவில் இற்றைப்படுத்துவோம். நன்றி.--இரவி (பேச்சு) 12:50, 25 சூன் 2017 (UTC) கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்புஅன்புள்ள சிவ கார்த்திகேயன், உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல். 2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன். இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்: தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன். நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்: இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை. வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது. 2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது. அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது. இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று. ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும். இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும். வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தக்க பங்களிப்பு அளிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு சரியான வாய்ப்பு. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவில் மீண்டும் முனைப்பாக பங்களிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு நல்ல வாய்ப்பு. இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 15:46, 24 மார்ச் 2018 (UTC) வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள்வணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள பெயர் பதிவு செய்து ஆர்வம் காட்டியமைக்கு நன்றி. இது அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பொதுவாக விடுக்கப்படும் செய்தி. 2 மாதங்கள் போட்டி கடந்துள்ள நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 400+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த மே மாதமே போட்டிக்கான இறுதிக் காலம். இந்த இறுதிக் கட்டத்தில் உங்கள் மேலான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன். வழக்கமாக நடைபெறும் போட்டி என்றால், தற்போது முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாபியை விஞ்சி தமிழை வெற்றி அடைவதற்காக ஆதரவைக் கேட்பேன். ஆனால், இது ஒரு தொலைநோக்கு முயற்சி என்பதால், நம்முடைய பங்களிப்பு என்பது நாளை நம்மைப் போன்று இணையத்தில் வளரும் நிலையில் இருக்கும் இந்திய, ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க மொழிகளுக்கும் புதிய வழிமுறைகளின் கீழ் விக்கிப்பீடியாக்களை வளர்க்க உதவும். எனவே, நம்மைப் போல் பங்களிக்க இயலாத மற்ற அனைத்து மொழிகளுக்காகவும் சேர்த்து உங்கள் பங்களிப்பைக் கோருகிறேன். இது தான் இத்திட்டம் குறித்து நீங்கள் முதல் முறை அறிவதாக இருக்கலாம் என்பதால் சற்று சுருக்கமாகச் சொல்கிறேன். 2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு, சரியான திட்டத்தைத் தீட்டி, அதற்கான நிதியைப் பெற இயலும் எனில் ஒரே ஆண்டில் தமிழ் விக்கிமூலம் தளத்தில் மில்லியன் கணக்கிலான தமிழ் இலக்கிய, வரலாற்றுப் பக்கங்களை ஏற்றலாம். இல்லையேல், இப்போது உள்ளது போல் தன்னார்வலர்கள் மட்டுமே தான் பங்களிக்க வேண்டும் என்றால் 100 ஆண்டுகள் ஆனாலும் அவற்றைச் செயற்படுத்திட முடியாது. வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை. இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது. அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது. நாம் 50 பேர் ஒவ்வொரு நாளும் 2 கட்டுரைகள் எழுதினாலும் இந்த மாதம் மட்டும் 3000 கட்டுரைகள் சேர்க்கலாம். இன்று வரை நீங்கள் முதல் கட்டுரையைத் தொடங்கியிருக்காவிட்டால் இன்று ஒரு கட்டுரையைத் தொடங்க வேண்டுகிறேன். இது வரை ஓரிரு கட்டுரைகள் மட்டும் பங்களித்திருந்தால் இன்னும் சில கட்டுரைகள் கூடுதலாகத் தர வேண்டுகிறேன். 10000க்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் நீங்கள் கட்டுரைகளை எழுதலாம். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். நன்றி. தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்!வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன், மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உமாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும். ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள் தீவிரத்தைக் கூட்ட முனையலாம். போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --இரவி (பேச்சு) வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்புசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக ![]() மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன் வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்!![]() வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது. இந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, and கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, and Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம். இப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம். சென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும். இப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும். போட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம். இப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன். வாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 21:34, 10 நவம்பர் 2019 (UTC) 2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for votersGreetings, The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page. You can also verify your eligibility using the AccountEligiblity tool. MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC) Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters. விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) போட்டி ![]()
விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (5 செப்டம்பர் 2021)விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 ![]()
|
Portal di Ensiklopedia Dunia