விக்கிப்பீடியா பேச்சு:இன்றைய சிறப்புப் படம்இங்கிருந்த பரிந்துரைகளை விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பரிந்துரைகள் பக்கத்துக்கு நகர்த்தியுள்ளேன். இன்றைய சிறப்புப் படம் திட்டம் குறித்த கலந்துரையாடல்களுக்கு இப்பேச்சுப்பக்கத்தைப் பயன்படுத்தலாம்.--இரவி (பேச்சு) 05:40, 17 மே 2012 (UTC) சிறப்புப் படங்களுக்கான வரையறைகள்சிறப்புப் படங்களைத் தேர்ந்தெடுக்க சிறப்பான விதிகளை உருவாக்கினால் என்ன? பார்க்க விக்கி பொது.
பயனர் பேச்சுப் பக்கத்தில் சிறப்புப் பட அறிவிப்புகள்போன வாரமும் இந்த வாரமும் இடம்பெற்றுள்ள சிறப்புப் படங்கள் குறித்து நண்பர்களுக்குத் தெரிவித்த போது மிகவும் மகிழ்ந்தார்கள். உங்களுக்குத் தெரியுமா, முதற்பக்கக் கட்டுரைகள் ஆகியவற்றுக்குப் பயனர்களின் பேச்சுப் பக்கத்தில் அறிவிப்பு இடுவது போல் இதற்கும் செய்வது இன்னும் பல பயனர்களை ஊக்குவிக்கும்--இரவி (பேச்சு) 06:10, 27 ஆகத்து 2012 (UTC) இன்றைய சிறப்புப் படம் - பரிந்துரைகள்விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பரிந்துரைகள் இங்குள்ள பல படங்கள் விமரிசனத்துக்கு உள்ளாக வேண்டியிருப்பினும் சில படங்களுக்கு மாத்திரம் கருத்திட்டுள்ளேன். புதிய பயனர்களைக் கவர வேண்டியது முக்கியம் எனினும், தரமற்றவற்றை முதன்மைப்படுத்துவது ஓர் பிழையான அணுகுமுறை என்றே கருதுகின்றேன். மூன்று வரிக்குக் குறைந்த கட்டுரைகள் அழிக்கப்படுமாயின், ஒளிப்பட அடிப்படை விதிகளை மீறிய படங்கள் இடம்பெறுவது எவ்வளவு தூரம் பொருத்தமானது. --Anton (பேச்சு) 15:29, 15 செப்டெம்பர் 2012 (UTC) சிறப்பு படத்திற்கான தகுதிகள்விக்கி பொது கோப்பகத்தில் மட்டுமல்ல, அனைத்து விக்கிகளிலுமே சிறப்புப் படமாக முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்கான வரையரைகளை கொண்டுள்ளன. ஆனால் நமது விக்கியில் ஏற்கெனவே காட்சிபடுத்தப்பட்டவற்றிலும் சரி, தற்போது பரிந்துரை செய்யப்பட்டிருப்பவற்றிலும் சரி சிறப்புப் படத்திற்கான எந்த தகுதரத்தையும் கொண்டிராதவைகள் பல உள்ளன. அவற்றில் சில வெறும் குப்பைகளாகவே பார்க்க முடிகிறது. எனவே பரிந்துரை செய்வது ஒருபுறம் இருக்க, பரிந்துரைக்கப்படுபவை சிறப்புப் படத்திற்கான தகுதரம் கொண்டுள்ளதா என்பதை கருத்தில் கொண்டே ஒரு படத்தை முன்பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்கு முடிவெடுத்தல் வேண்டும்.--HK Arun (பேச்சு) 16:51, 22 நவம்பர் 2012 (UTC) ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்ட படங்களை சிறப்புப் படமாக முன்பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்கான தரப்படுத்தலை Anton போன்ற துறைசார் பயனர்களுக்கு வழங்குவதே சரியானது. அதேவேளை காட்சிப்படுத்த முடியாத படங்களாயின் நிராகரிப்பதற்கான காரணிகளை (ஏனைய விக்கிகள் போல்) தரப்படுத்துவோர் வழங்க வேண்டும். அதுவே ஒரு படம் சிறப்புப் படமாக இடம்பெற என்ன செய்யவேண்டும் என ஏனைய பயனர்கள் அறிந்துக்கொள்ளவும், நிழற்படத் துறை சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ளவும் உதவும். போட்டோசொப்பிற்கு இணையன கிம்ப் போன்ற மென்பொருள்கள் படங்களை எளிதாக மெருகேற்ற உதவும்.--HK Arun (பேச்சு) 18:12, 22 நவம்பர் 2012 (UTC) |
Portal di Ensiklopedia Dunia