மாதாந்திர இணையக் கலந்துரையாடலில் கூறியபடி உள்ளகப்பயிற்சிக்கென தனியொரு கலைத்திட்டம் உருவாக்கினால் நன்றாக இருக்கும். எனவே விருப்பம் உடையவர்கள் தங்களது கருத்தினைத் தெரிவித்தால் கலைத்திட்டத்தினை இணைந்து உருவாக்க விருப்பம். -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 11:02, 5 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]
விருப்பம் --சத்திரத்தான் (பேச்சு) 12:02, 5 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]
விருப்பம் --பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 07:58, 18 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]
விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 09:12, 18 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சித் திட்டம் (அல்லது) தமிழ் விக்கிமீடியா உள்ளகப் பயிற்சித் திட்டம்.
உள்ளகப்பயிற்சி என இணைத்து எழுதலாமா என்பது குறித்தும் கருத்துகளை வேண்டுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:12, 5 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]
- பல திட்டங்களை உள்ளடக்கியதால் விக்கித்திட்டம் உள்ளகப்பயிற்சி என்று ஆரம்பிக்கப்பட்டது.
தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சித் திட்டம்- என்பதில் இரு முறை திட்டம் எனும் வார்த்தை வருவது சற்று நெருடலாக உள்ளது. எனக்கு, தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி, தமிழ் விக்கிமீடியா உள்ளகப் பயிற்சித் திட்டம் ஆகியன பொருத்தமாகப்படுகிறது. நன்றி --ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 12:38, 5 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]
- Tamil Wiki Internship Programme என ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பதால், தலைப்பின் இறுதியில் திட்டம் என வந்தால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். அத்தோடு, உள்ளகப் பயிற்சி தொடர்பான கொள்கை, நெறிமுறைகள், வழிகாட்டல்கள் இவற்றை உள்ளடக்கிய திட்டப் பக்கமாக இது அமைய இருப்பதால் திட்டம் எனும் சொல்லானது இறுதியில் வரவேண்டும் எனக் கருதுகிறேன்.
- தமிழ் விக்கி என்று மட்டும் குறிப்பிட்டால் இன்னொரு இணையத்தளத்தை சுட்டுவது போன்று உள்ளது. பல திட்டங்களை உள்ளடக்கியதால் விக்கித்திட்டம் என்பது ஏற்கத்தக்கது. விக்கிமீடியா என்பது பல்வேறு பெருந்திட்டங்களை உள்ளடக்கிய ஒரு உலகளாவிய இயக்கம். ஆகவே தமிழ் விக்கிமீடியா உள்ளகப் பயிற்சித் திட்டம் எனும் தலைப்பினை பரிந்துரை செய்கிறேன்.
- பலரும் ஏற்றுக்கொண்டால், உள்ளகப்பயிற்சி என ஒற்றைச் சொல்லாக பயன்படுத்தவும் பரிந்துரை செய்கிறேன். workshop என்பதனை பணிமனை என எழுதுவது போன்று. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:22, 5 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]
- தலைப்பில் விக்கிமீடியா எனும் போது விக்கிமீடியா அறக்கட்டளையின் தொடர்புடைய நிகழ்வோ என்ற பொருள் மயக்கம் ஏற்படுகிறது. எனவே பொதுவாக விக்கித்திட்டம் என வைத்தோம். நீங்கள் குறிப்பிடுவது போல தமிழ்.விக்கி திட்டமோ என்ற குழப்பம் சிலருக்கு வரலாம். ஆனால் அத்திட்டம் தொடங்குவதற்கு முன்னரே இப்பெயரை நாம் பயன்படுத்தி வந்துள்ளோம். தமிழ் விக்கி என்றால் அது தமிழ் விக்கிப்பீடியா தான். எனவே அத்திட்டத்திற்காக நமது பெயரை மாற்ற வேண்டாம். -நீச்சல்காரன் (பேச்சு) 11:13, 17 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]
கருத்து
மதிப்பிற்குரிய பயனர் குறிப்பிட்டபடி, தமிழ் விக்கிமீடியா உள்ளகப்பயிற்சித் திட்டம் என்பது மிகப் பொருத்தமானது.
'உள்ளகப் பயிற்சி' என்பதை ஆங்கிலத்தில் Internal training என்பதற்கும், 'உள்ளகப்பயிற்சி' என்பதனை Internship என்பதற்காகவும் நாம் குறிப்பிடுவதால், மேற்கூறியது மிகச் சரியே.
மேலும், இத்திட்டம் பழகுநர் சம்பந்தமாக இருப்பின், தமிழ் விக்கிமீடியா பழகுநர் உள்ளகப்பயிற்சித் திட்டம் என்றும் அழைக்கப்படலாமா? என்ற கருத்தினையும் கொள்ள வேண்டுகிறேன். நன்றி!
பொதுஉதவி (பேச்சு) 13:35, 8 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]
உள்ளகப் பயிற்சி என்பது இரு தரப்பிற்கும் பயனுள்ள பயிற்சி. விக்கித்திட்டங்களும் மேன்மை பெறும் மாணவர்களும் பயனடைவார்கள். கல்லூரியின் தேவைக்காக நாம் உள்ளகப் பயிற்சியை நடத்தாமல் விக்கித் திட்டங்களும் வளரும் வகையில் திட்டமிட வேண்டும்.
- ஒரு கல்லூரியின் ஒரு வகுப்பிலுள்ள மாணவர்கள் அனைவரும் விக்கித் திட்டங்களில் முழுமையாக ஈடுபட முடியாது. அவர்களின் விருப்பு வெறுப்புகள் மாறுகின்றன. எனவே அடிப்படை முனைப்புகளைச் செய்தால் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். குறைந்தது பயனர் பெயர் உருவாக்கி கையெழுத்திட்டவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம். பல கல்வி நிலைய மாணவர்களை இணைத்துச் செய்யும் போது ஆரோக்கியப் போட்டியைக் காண முடிகிறது. எனவே பல கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களை ஒரு பயிற்சித் தொகுப்பிற்குத் தேர்வு செய்யலாம்.
- கல்லூரி அல்லது மாணவர்கள் தரப்பில் எவ்விதக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என வலியுறுத்தி, நட்புவெளிக் கொள்கையை(Friendly space policy) அனைவரும் ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும்.
- இதன் பயிற்சியாளராக விக்கிப்பயனர்கள் மட்டுமல்லாமல் விக்கிக்கு வெளியே உள்ள படைப்பாக்கப் பொதுவுரிமப் புரிதல் கொண்ட பிற துறை வல்லுநர்களைப் பயிற்சிக்கு உட்படுத்தலாம். இது புத்தொளியை உள்ளே கொண்டுவரும்.
- விக்கிப்பீடியா மட்டுமல்லாமல் அனைத்துத் திட்டங்களையும் உள்ளடக்கிய பயிற்சியாக அமைய வேண்டும். எனவே அந்தந்தத் திட்டங்களின் ஆலமரத்தடியில் அறிவிப்புகளை இட்டு மேல் விக்கியில்(தமிழில்) இந்த முதன்மைத் திட்டப்பக்கம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
- விக்கிப் பயனர்கள் தங்களின் தன்னார்வத்தில் இதைச் செய்யும் போது தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டு எடுத்துச் செய்வார்கள் என்பது கடினமே. கடந்த இரண்டாண்டுகளில் சில மாணவர்கள் என்னிடம் கேட்டாலும் எனது தனிப்பட்ட வேலைப்பளுவால் திட்டமிட முடியவில்லை. அதே நேரத்தில் ஒரு பரப்புரைப் பயனர் குழு இருந்தால் அவர்கள் அதை ஒவ்வொரு ஆண்டும் முன்னெடுக்க முடியும். மாணவர்களால் உள்ளடக்கங்களில் இடையூறு ஏதேனும் நிகழ்ந்தாலும் பொறுப்பேற்க முடியும். நிதி மற்றும் அலுவல்பூர்வமாக இதைத் திட்டமிட முடியும். பயனர் குழுவை உருவக்க இயலுமா என்றும் பார்க்க வேண்டும். -நீச்சல்காரன் (பேச்சு) 11:01, 17 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]
- @Neechalkaran வணக்கம். உங்களின் பரிந்துரைகளைக் கண்டேன். தற்போதைய இற்றைகளை தெரிவிப்பதோடு, சில ஐயங்களை கேட்டுத் தெரிந்துகொள்ள விழைகிறேன்.
- மற்றத் திட்டங்களில் நாம் செயல்படுவதைப் போன்று இந்தத் திட்டத்தையும் விக்கித் திட்டங்கள் வளரும் வகையில் திட்டமிடுவோம். காண்க: கலைத்திட்டம்
- 2025 ஆண்டிற்குரிய திட்டம்: சம்பந்தப்பட்ட பேராசிரியர்களிடம் பேசி, விருப்பமுள்ள மாணவர்களை மட்டும் சேர்க்குமாறு கேட்கவிருக்கிறோம். பல கல்வி நிலைய மாணவர்களை இணைத்துச் செய்ய இயலுமா என்பதனையும் பார்க்கிறோம்.
- //கல்லூரி அல்லது மாணவர்கள் தரப்பில் எவ்விதக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என வலியுறுத்தி, நட்புவெளிக் கொள்கையை(Friendly space policy) அனைவரும் ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும்.// மாணவர்களிடமிருந்து கல்லூரி எவ்விதக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்பது புரிகிறது. "கல்லூரி அல்லது" என்று எழுதியிருக்கிறீர்கள். இது எதனைக் குறிக்கிறது?
- //பயிற்சியாளராக விக்கிக்கு வெளியே உள்ள படைப்பாக்கப் பொதுவுரிமப் புரிதல் கொண்ட பிற துறை வல்லுநர்களையும் உட்படுத்தலாம்.// இது குறித்து விரிவாக தெரிவித்தீர்கள் எனில், அடுத்தாண்டில் நடைமுறைப்படுத்துவது குறித்து திட்டமிடலாம்.
- மேல்-விக்கியில் திட்டப் பக்கங்களை இடுவது குறித்து: முதன்மைத் திட்டப்பக்கம் அத்தோடு, ஒவ்வொரு ஆண்டிற்குரிய திட்டப் பக்கமும் மேல்-விக்கியில் இருக்கவேண்டும் என பரிந்துரைக்கிறீர்களா?
- பரப்புரைப் பயனர் குழு குறித்து உங்களின் எண்ணங்களை விரிவாக தெரிவித்தால், இது குறித்து முன்னெடுக்க ஏதுவாக இருக்கும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:29, 19 சனவரி 2025 (UTC)[பதிலளி]
- விக்கித்திட்டங்களில் நாம் பயன்படுத்தும் கலைச்சொற்கள் அனைத்திற்குமான வரையறை, பயன்பாடுகள் போன்றவை கற்பிக்கப்பட வேண்டும். உதாரணங்கள் சில:
உதாரணங்கள் சில:
- விக்கிப்பீடியா
- மீடியாவிக்கி
- விக்கிமூலம்
- விக்சனரி
- விக்கித்தரவு
- விக்கிப்பயணம்
- விக்கிமேற்கோள்
- மேல்-விக்கி
- பொதுவகம்
- விக்கி நூல்கள்
- மணல் தொட்டி
- ஆலமரத்தடி
- அண்மைய மாற்றங்கள்
- மொழியிடை இணைப்புகள்
- மேலும் காண்க
- வெளி இணைப்புகள்
- ஆளுமைக்கட்டுப்பாடு
- புகுபதிகை
- விடுபதிகை
- கவனிப்புப் பட்டியல்
- பேச்சுப் பக்கம்
- பீட்டா
- விருப்பங்கள்
- இடைமுகம்
- விரைவுப் பகுப்பி
- குறிப்பிடத்தக்கமை
- நடுநிலையாக எழுதுதுல்
- பரப்புரை
- விக்கிமேனியா
- விக்கிமாரத்தான்
- முன்தோற்றம்
- விக்கி கருவிகள்
மேற்கண்டவாறு அனைத்து திட்டங்களிலும் பயன்பாட்டிலுள்ள கலைச்சொற்களை நாம் திரட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.--கி.மூர்த்தி (பேச்சு) 11:38, 17 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]
பொதுவாக, internship என்பது மாணவர்கள் வெளி நிறுவனங்களில் ஒன்று அல்லது இரண்டு மாதக் காலங்கள் பணியாற்றுவர். அப்போது நிறுவனங்கள் அவர்களுக்கு அளிக்கக்கூடிய பயிற்சி, ஒதுக்கக்கூடிய resource என்பது minimalஆகவே இருக்கும். நிறுவனத்தின் வழக்கமான பணிகளுக்கு இடையே மாணவர்கள் ஒன்றிணைந்து பணிச்சூழலுக்கு ஒரு அறிமுகத்தைப் பெற்றுக் கொள்வதாகவே internship அமையும்.
விக்கிமீடியா திட்டங்களைச்செய்வதற்கு என்று தனியே தொழிற்சாலை, நிறுவனக் கட்டடம் ஏதும் இல்லை என்பதால், உண்மையில் அவர்கள் இணையத்தில் திட்டங்களுக்குப் பங்களிக்கும் காலத்தையே internshipஆக கருத முடியும்.
தமிழ்நாட்டின் கல்விச்சூழல் நடைமுறைகளைப் பொருத்து, நாம் நேரடிப் பயிற்சி அளிக்க வேண்டியிருப்பதைப் புரிந்து கொள்கிறேன். அதை இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் என்று நீடிக்காமல் ஒரு நாள் அல்லது முடிந்தால் அரை நாள் என்று சுருக்கப் பார்க்கலாம். விக்கிப்பீடியா, விக்கிமூலம், விக்சனரி, விக்கித்தரவு என்று அனைத்துத் திட்டங்களுக்கும் அறிமுகத்தோடு இணைந்த பயிற்சி தர இந்தக் காலம் போதாது தான். ஆனால், விக்கிப்பீடியா என்கிற ஒரு திட்டத்திற்கு மட்டும் முறையான அறிமுகமும் பயிற்சியும் தர ஒரு நாள் காலம் போதும் என்று நினைக்கிறேன்.
நாம் இத்தகைய பயிற்சிகளுக்காகச் செலவழிக்கும் நேரம் என்பது அடுத்த சில மாதங்களில் மாணவர்கள் விக்கிக்குப் பங்களிக்கக்கூடிய scopeக்கு உட்பட்டு, அதற்கு proportionalஆக அமைவது நல்லது. ஏனெனில், இதே போன்று பல கல்லூரிகளும் நம்மை அணுகினால் அத்தனைக் கல்லூரிகளுக்கும் 5, 6 பேர் கிளம்பிப் போய் மூன்று நாள் நிகழ்ச்சி நடத்தும் அளவுக்கு நம்மிடையே பங்களிப்பாளர் எண்ணிக்கை இல்லை. அத்தகைய அணுகுமுறை பயன்மிக்கதாகவும் இருக்காது. எனவே, நேரடிப் பயிற்சியைச் சுருக்கமாக அமைத்துக் கொண்டு மாணவர்கள் விக்கிமீடியா திட்டங்களில் பங்களிக்கும்போது இணையவழி mentoring தேவையான அளவு தருவதே நல்ல அணுகுமுறையாக இருக்கலாம்.
நம்மை அழைக்கும் அத்தனைக் கல்லூரிகளுக்கும் ஈடுகொடுத்து நாம் உள்வாங்க வேண்டுமென்றால், அதற்கு ஏற்ப இத்திட்டத்தை எப்படி வடிவமைப்பது என்றும் நாம் சிந்திக்கலாம். குறிப்பாக, பயிற்சி அளிப்பதற்கான வளங்களை Video வடிவில் நாம் முன்கூட்டியே தயாரித்து வைத்துக் கொள்வது கணிசமான மாணவர்களுக்குக் குறுகிய நேரத்திலும் இணைய வழியிலும் பயிற்சியளிக்க உதவும். மாணவர்களின் கல்விப் பின்புலத்துக்கு ஏற்ப விக்கிப்பீடியா அல்லது அதற்குக் கூடுதலாக ஒரு திட்டத்தை மட்டும் அறிமுகப்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, கணினித்துறை அல்லது கணினியறிமுகம் உள்ள மாணவர்கள் என்றால் விக்கித்தரவைப் பற்றி எடுத்துரைப்பது பொருத்தமாக இருக்கும். தமிழ், ஆங்கிலம் போல் மொழியை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிப்பவர்களுக்கு விக்கிப்பீடியா அறிமுகம் மட்டும் போதும். விக்கிமூலம், விக்சனரி போன்ற திட்டங்கள் நமக்குத் தேவையானவை தாம் என்றாலும், மாணவர்களை அதில் பாடத்திட்ட அளவில் ஈடுபடுத்தும் அளவுக்கு அவற்றில் பெற்றுக் கொள்ளக்கூடிய திறன்கள் இல்லை என்று தோன்றுகிறது. குறிப்பாக, விக்கிமூலம் என்பது date entry போலவே பார்க்கப்படக்கூடிய ஒரு mechanical பணி தான்.
விக்கிப்பீடியாவை நாம் அறிமுகப்படுத்தும்போது, நம்முடைய நோக்கிலிருந்து அறிமுகப்படுத்தாமல், மாணவர்கள் இந்தப் பயிற்சி மூலம் பெறுக் கொள்ளக்கூடிய திறன்கள் யாவை என்கிற அடிப்படையில் அமைதல் நன்று.
எடுத்துக்காட்டுக்கு, 1. கட்டுரையாக்கத் திறன் 2. கட்டுரைகளுக்கு ஏற்ற உசாத்துணைகளைத் தேடி அறியும் திறன் 3. மொழிபெயர்ப்புத் திறன் 4. அவர்கள் பாடம் சார் உள்ளடக்க இடைவெளிகளைக் கண்டறிதல் 5. கூட்டுழைப்பு (Collaboration) போன்ற திறன்களை முன்வைக்கலாம். அவர்கள் இப்பயிற்சி மூலம் பெற்றுக் கொள்ளும் திறன்கள் அவர்கள் நாளை ஒரு எழுத்தூடகத்தில் வேலைக்குச் சேர்ந்தாலோ ஆய்வுக்கல்வி போன்ற உயர்படிப்புகளுக்குச் செல்லும் போதோ பயன்படக்கூடிய திறன்களாக அமைதல் நன்று. நன்றி. - இரவி (பேச்சு) 09:40, 26 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]
- ஆலமரத்தடியில் குறிப்பிட்டுள்ளவாறு, இந்த முதன்மைத் திட்டப் பக்கம் உருவாக்கப்பட்டது. 2020, 2021 ஆண்டுகளில் நடத்தப்பட்ட உள்ளகப்பயிற்சிகளின் கூறுகளைப் புரிந்துகொண்டு அதனடிப்படையில் வரைவு எழுதப்பட்டது. தமிழ் விக்கிப்பீடியாவிலும் சகோதரத் திட்டங்களிலும் பங்களிக்கும் பயனர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அனைவரின் எண்ணங்கள், கருத்துகள், பரிந்துரைகள் அடிப்படையில் இந்தத் திட்டப் பக்கத்திற்கு ஒரு வடிவம் (கொள்கைகள், வழிமுறைகள், வழிகாட்டல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது) தருவோம். அனைவருக்கும் நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:04, 26 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]