விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்)

 கொள்கை தொழினுட்பம் அறிவிப்புகள் புதிய கருத்துக்கள் ஒத்தாசைப் பக்கம் 
புதிய கருத்துக்கள் எனும் ஆலமரத்தடிக் கிளையின் கீழ் புதிய கருத்துக்கள், ஆலோசனைகள் பற்றி உரையாடலாம்.
தயவுசெய்து, புதிதாகத் தொகுக்கும்முன் பின்வருவனவற்றைக் கருத்திற் கொள்ளுங்கள்:
« பழைய உரையாடல்கள்


பெண் பங்களிப்பாளர்கள்

சமீகக் காலமாகப் பெண் பங்களிப்பாளர்களின் பங்களிப்புகள் குறைவாக உள்ளதாகக் கணிக்கிறேன். குறிப்பாகக் கொள்கை முடிவுகள், உரையாடல் போன்ற இடங்களில் பங்கேற்புகள் குறைவு. பல்வேறு சமூகக் காரணிகளால் இந்த நிலை ஏற்பட்டாலும் விக்கி அளவில் ஆர்வமுள்ளவர்களை ஊக்கப்படுத்த என்ன செய்யலாம் என்று யோசிக்கிறோம். புதிய பயனர்களுக்குப் பயிற்சி அளிப்பது ஒருபுறம் என்றால் ஏற்கனவே பங்களிப்பவர்களை ஊக்கப்படுத்துவது மேலே பலனளிக்கும் என நினைக்கிறேன். புதிய பெண் பயனர்களோ ஏற்கனவே பங்களிக்கும் பெண் பயனர்களோ ஏதேனும் உதவி தேவையென்றாலோ அல்லது சிக்கல்களைச் சுட்டிகாட்டவிரும்பினாலோ அறியத்தரலாம். மடலில் தொடர்பு கொள்ள விரும்பினாலும் என்னையோ சிஐஎஸின் நிதேஷ் கில் அவர்களையோ தொடர்பு கொள்ளலாம். பொதுவான யோசனைகளையும் முன்வைக்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 08:12, 27 பெப்பிரவரி 2024 (UTC)

வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் பயிலரங்கில், பயிற்சி பெற இருப்பவர்களில் 50% பெண் பேராசிரியர்கள் இருக்குமாறு ஒரு கோரிக்கையை கல்லூரி ஒருங்கிணைப்பாளரிடம் வைத்துள்ளோம். இது குறித்து பின்னர் இற்றை செய்கிறேன். ஏற்கனவே பங்களிக்கும் பெண் பயனர்களை மார்ச்சு மாத இணையவழிக் கூட்டத்தில் கலந்துகொண்டு தமது கருத்துகளை வைக்குமாறு கேட்டுக்கொள்ளலாம். ஒரிரு பெண் பயனர்கள் திறன்பேசி வழியாக கட்டுரை எழுதுவதாக கணிக்கிறேன். இவர்களுக்கு மடிக்கணினி பெற்றுத்தரும் வழி இருக்கிறதா என்பதனையும் கவனத்தில் கொள்ளலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:40, 27 பெப்பிரவரி 2024 (UTC)

மடிக்கணினியில் தொகுப்புகள் செய்வது எளிதாக இருக்கிறது. ஆனால், திறன்பேசியில் தொகுப்புகள் செய்வது சிரமமான காரியமாக உள்ளது. நிறைய பெண் பயனர்கள் தங்களிடம் மடிக்கணினி இல்லை என்பதைத் தெரிவித்துள்ளார்கள். இது மட்டும் காரணமல்ல. ஆர்வத்துடன் பங்களிக்கும் பெண் பயனர்களைக் கண்டறிந்து அவர்களின் உண்மையான தேவை மடிக்கணினியாக இருக்கும் நேர்வில் அவற்றை நன்கொடையாளர்களிடமிருந்தோ சிஐஎஸ் மூலம் ஏற்பாடு செய்து பயன்படுத்தப்பட்ட மடிக்கணினிகளை பெற்று வழங்குவதன் மூலமாகவோ சரி செய்ய முயற்சிக்கலாம். பெண் பங்களிப்பாளர்களை ஊக்குவிக்கும் விதமாக செய்தித்தாள்களில் அவர்களின் பங்களிப்பு குறித்த செய்திகள் வெளிவருவதற்கு முன்னுரிமை தரலாம். --மகாலிங்கம் இரெத்தினவேலு 16:34, 27 பெப்பிரவரி 2024 (UTC)-

பரப்புரைகளை ஆவணப்படுத்துதல்

தமிழ் விக்கிப்பீடியா குறித்த அறிமுக நிகழ்வுகள் அல்லது பயிற்சிப் பட்டறைகள் பெரும்பாலும் திட்டப் பக்கங்களின் வாயிலாக நடத்தப்படுகின்றன. சில நேரங்களில் ஒருவரோ அல்லது இருவரோ சென்று அறிமுகத்தைத் தருகிறோம். இவ்வாறான சிறு நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்படுவதில்லை. அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்யும் பொருட்டு, இந்தப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது: விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா அறிமுக நிகழ்வுகள் (2021 முதல்). மாற்றுக் கருத்துக்கள், பரிந்துரைகள் இருப்பின் உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:06, 9 மார்ச்சு 2024 (UTC)

👍 விருப்பம் --சிவகோசரன் (பேச்சு) 14:14, 10 மார்ச்சு 2024 (UTC)

மற்றும் (and)

மற்றும்’ என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது. ஏன்? (முகநூல் காணொளியில் தகவல் உள்ளது.) இணைச்சொல் இலக்கண விதியையும் அறிதல் வேண்டும். தானியங்கி தமிழாக்கம் செய்பவர்கள் இந்த 'மற்றும்' என்பதன் பயனை அறிய மறந்து, திருத்தாத மொழிபெயர்ப்பை வெளியிடுகின்றனர். ~AntanO4task (பேச்சு) 16:06, 9 மார்ச்சு 2024 (UTC)

பயனுள்ள தகவல், நன்றி.
ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 17:03, 21 மார்ச்சு 2024 (UTC)

கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல்

2017 ஆம் ஆண்டில் பள்ளி ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட சுமார் 10,000 கட்டுரைகள், தொடர்ச்சியாக சரிபார்க்கப்பட்டு வந்தன. இன்றைய நாளில் சுமார் 360 கட்டுரைகள் மட்டும் மீதமுள்ளன. இவற்றை இவ்வாண்டின் சூலை மாதத்தில் சரிபார்த்து முடிக்க இருக்கிறோம்.

2009 ஆம் ஆண்டில் கூகுள் தமிழாக்கக் கருவி மூலமாக உருவாக்கப்பட்ட சுமார் 1,200 கட்டுரைகள், வெவ்வேறு காலகட்டங்களில் செம்மைப்படுத்தப்பட்டு வந்தன. இன்றைய நாளில் சுமார் 886 கட்டுரைகள் மீதமுள்ளன. இந்தக் கட்டுரைகளை செம்மைப்படுத்தி முடித்துவிட்டால், '15 ஆண்டு காலமாக தேங்கிக்கிடத்தல்' எனும் நிலை முடிவுக்கு வரும். பல முக்கியக் கட்டுரைகள் இவ்வகையில் அடங்கியிருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

2022, 2023 ஆகிய ஆண்டுகளில் விக்கி மாரத்தானில் முக்கியத்துவம், சிறப்பு மாதம், சிறப்புக் காலாண்டு என அறிவித்து இயக்கியபோதும்...147 கட்டுரைகளை மட்டுமே செம்மைப்படுத்த இயன்றது. 886 கட்டுரைகளை அடுத்த ஆண்டிற்குள்ளாக செம்மைப்படுத்தி முடிப்பதற்கு பயனர்களின் பரிந்துரைகளை வரவேற்கிறேன். உங்களின் கருத்துக்கள் / பரிந்துரைகளை விக்கிப்பீடியா பேச்சு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல்/2024 எனும் பக்கத்தில் தெரிவிக்கலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:20, 12 மார்ச்சு 2024 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா தொடர்பான தொடர்-தொகுப்பு நிகழ்வு

நடப்பு ஆண்டில் தொடர்-தொகுப்பு நிகழ்வு ஒன்றினை நடத்துவதற்கான திட்டப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்மொழிவை விக்கிப்பீடியா பேச்சு:தொடர்-தொகுப்பு 2024 எனும் உரையாடல் பக்கத்தில் இட்டுள்ளேன். பயனர்கள் தமது கருத்துக்கள் / பரிந்துரைகளை அதே உரையாடல் பக்கத்தில் இடலாம். அவற்றின் அடிப்படையில் தொடர்ந்து உரையாடி, திட்டப்பணி வரைவை இறுதி செய்ய ஏதுவாக இருக்கும்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:14, 16 மார்ச்சு 2024 (UTC)

பயனர்கள் தமது ஆதரவு அல்லது எதிர்ப்பினை இந்த 'ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்)' பகுதியில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:18, 17 மார்ச்சு 2024 (UTC)

 ஆதரவு -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 05:33, 18 மார்ச்சு 2024 (UTC)
 ஆதரவு --சத்திரத்தான் (பேச்சு) 05:43, 18 மார்ச்சு 2024 (UTC)
 ஆதரவு--கி.மூர்த்தி (பேச்சு) 16:17, 18 மார்ச்சு 2024 (UTC)
 ஆதரவு--சிவகோசரன் (பேச்சு) 15:14, 19 மார்ச்சு 2024 (UTC)
 ஆதரவு --சா. அருணாசலம் (பேச்சு) 15:23, 19 மார்ச்சு 2024 (UTC)
 ஆதரவு --மகாலிங்கம் இரெத்தினவேலு 15:30, 19 மார்ச்சு 2024 (UTC)
 ஆதரவு--Balu1967 (பேச்சு) 15:53, 19 மார்ச்சு 2024 (UTC)
 ஆதரவு--ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 16:58, 21 மார்ச்சு 2024 (UTC)

நிகழ்வை நடத்துவதற்கான நாட்கள் குறித்து பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. பயனர்கள் தமது பரிந்துரைகளை இந்தப் பகுதியில் இடுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:36, 1 ஏப்பிரல் 2024 (UTC)

முதற்கட்ட திட்டமிடலுக்கான கூட்டம் நாளை (ஏப்ரல் 6) நடைபெறுகிறது. வாய்ப்புள்ளோர் கலந்துகொண்டு, திட்டமிடலுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:57, 5 ஏப்பிரல் 2024 (UTC)

நிகழ்வை நடத்துவதற்குத் தேவைப்படும் நிதிக்கான கோரிக்கை விண்ணப்பத்தை விக்கிமீடியா அறக்கட்டளையிடம் தாக்கல் செய்திருந்தோம். இந்த விண்ணப்பம் இப்போது மேல்-விக்கியில் பதிப்பிடப்பட்டுள்ளது. மேல்-விக்கிப் பக்கத்தின் இறுதியில் இருக்கும் Endorsements and Feedback எனும் பகுதியில் உள்ள Endorse விசைப்பட்டையைச் சொடுக்கி, உங்களின் ஆதரவு (அல்லது) எதிர்ப்பைத் தெரிவிக்கலாம். விசைப்பட்டையைச் சொடுக்கும்போது, உதவிக் குறிப்புகள் கிடைக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:57, 4 சூன் 2024 (UTC)Reply

தமிழ் விக்கிப்பீடியா தொடர்பான அறிமுகப் பட்டறைகள்

கலைக்களஞ்சியத்தின் கருத்துருவைப் புரிந்துகொண்டு, தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பவர்கள் இன்றைக்கு 20 முதல் 25 பேர் வரை இருப்பர். நீண்ட காலத்திற்கான வளர்ச்சிக்கு இந்த எண்ணிக்கை போதாது என்பதாக பரப்புரைகளில் ஈடுபட்டுவரும் தொடர்பங்களிப்பாளர்கள் கருதுகிறார்கள். அத்தோடு, இளம் வயதினரை அதிகளவில் பங்களிக்கச் செய்வதன் முக்கியத்துவமும் உணரப்பட்டுள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் கருத்திற்கு கொண்டு, விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறைகள் 2024 எனும் திட்டத்தை இங்கு முன்வைக்கின்றேன். திட்டத்திற்கான முன்மொழிவு விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறைகள் 2024 எனும் பக்கத்தில் இடப்பட்டுள்ளது. பயனர்கள் தமது கருத்துக்கள் / பரிந்துரைகளை அதே உரையாடல் பக்கத்தில் இடலாம்.

குறிப்பு: கல்வி நிலையத்தைப் பரிந்துரைப்பது, கல்வி நிலையத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு நிகழ்வை நடத்துவது ஆகியவற்றை எப்பயனரும் செய்யலாம் என்பது இத்திட்டத்தின் முக்கியக் கூறாகும்.

பயனர்கள் தமது ஆதரவு அல்லது எதிர்ப்பினை இந்த 'ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்)' பகுதியில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:05, 20 மார்ச்சு 2024 (UTC)

 ஆதரவு ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 15:54, 21 மார்ச்சு 2024 (UTC)
 ஆதரவு--சா. அருணாசலம் (பேச்சு) 03:48, 22 மார்ச்சு 2024 (UTC)
 ஆதரவு -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 05:57, 30 மார்ச்சு 2024 (UTC)

ஒரு நாள் தொடர்-தொகுப்பு நிகழ்வு: தமிழக ஆசிரியர்கள் எழுதிய கட்டுரைகளை செம்மைப்படுத்தும் பணி

தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு வணக்கம்.

இறுதிக் கட்டத்தில் இருக்கும் இந்தப் பணியை விரைந்து நிறைவு செய்வதற்கு, முன்மொழிவு ஒன்றை தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2024 எனும் உரையாடல் பக்கத்தில் இட்டுள்ளேன்.

பயனர்கள் தமது கருத்துக்கள் / பரிந்துரைகளை அதே உரையாடல் பக்கத்தில் இடலாம். அவற்றின் அடிப்படையில் தொடர்ந்து உரையாடி, திட்டப்பணி வரைவை இறுதி செய்ய ஏதுவாக இருக்கும்.

பயனர்கள் தமது ஆதரவு அல்லது எதிர்ப்பினை இந்த 'ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்)' பகுதியில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:45, 18 மே 2024 (UTC)Reply

 ஆதரவு-- சா. அருணாசலம் (உரையாடல்) 09:18, 19 மே 2024 (UTC)Reply
 ஆதரவு -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 09:24, 19 மே 2024 (UTC)Reply
 ஆதரவு--கு. அருளரசன் (பேச்சு) 06:23, 21 மே 2024 (UTC)Reply
 ஆதரவு--கி.மூர்த்தி (பேச்சு) 07:29, 21 மே 2024 (UTC)Reply
 ஆதரவு--மகாலிங்கம் இரெத்தினவேலு 09:27, 21 மே 2024 (UTC)Reply
 ஆதரவு--பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 09:29, 21 மே 2024 (UTC)Reply

நிகழ்வு நடைபெறுவது உறுதியாகி உள்ளது. தமிழ்நாட்டில் வாழும் பயனர்கள், கலந்துகொள்வதற்கான தமது விருப்பத்தை இங்கு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:06, 9 சூன் 2024 (UTC)Reply

முடிவுகளை எடுத்தல்

தன்னார்வப் பணிகளின் வாயிலாக இயங்கக்கூடிய கலைக்களஞ்சியத்தின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் இன்னொரு விசயம் குறித்து இங்கு தெரிவிக்கிறேன்.

தொகுத்தலில் நமக்கு ஏற்படும் ஐயங்களை உரையாடல் பக்கத்தில் பொதுவாக கேட்கும்போது மற்ற பயனர்களின் பரிந்துரைகள், ஆலோசனைகள் கிடைப்பதில்லை. ஏதேனும் ஒரு குறிப்பிட்டப் பயனரை அழைத்துக் கேட்கலாம்; பதில் கிடைக்கும். இருந்தாலும் அவர்களை தொந்தரவு செய்வது போன்று தோன்றுகிறது.

பயனர்கள் பல்வேறு நோக்கத்தில் இயங்கும் அறிவுத்தளத்தில் இது இயல்பானதொரு விசயமே. எனினும் எனது கருத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

அதிக எண்ணிக்கையில் பயனர்கள் பங்களிக்கத் தொடங்கும்போது, இந்நிலையில் முன்னேற்றத்தைக் காண இயலும் என நம்புகிறேன்! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:17, 7 சூலை 2024 (UTC)Reply

👍 விருப்பம்-- சா. அருணாசலம் (உரையாடல்) 01:02, 8 சூலை 2024 (UTC)Reply
👍 விருப்பம் பயனர்கள் தங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு அவர்களுக்கு விருப்பமான முறையில் நிகழ்படமாகவோ படிமமாகவோ ஒலிக்கோப்புகளாகவோ கற்றுக்கொடுத்தால் பிற பயனர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும். ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 12:26, 15 ஆகத்து 2024 (UTC)Reply

விக்கித்தரவு 12 ஆம் பிறந்தநாள்

வணக்கம், விக்கித்தரவின் 12 ஆம் பிறந்தநாள் செப்டம்பர்- நவம்பர் 2024 இல் நடக்க உள்ளது. இந்த நிகழ்வின்போது, விக்கித்தரவு பிறந்த நாளினை விக்கிப்பயனர்கள் ஒன்று கூடிக் கொண்டாடலாம், விக்கித்தரவில் தாங்கள் அறிந்துகொண்டதை மற்றவர்களுக்குக் கூறலாம், புதிய பயனர்களுக்கு விக்கித்தரவு குறித்து அறிமுகம் செய்யலாம், பயிற்சிப் பட்டறை, தொடர் தொகுப்பு ஆகியவற்றை மேற்கொள்ளலாம். விக்கித்தரவு குறித்தான பயிற்சி ஏதேனும் தேவை எனில் இணைய வழியில் அல்லது நேரில் (தமிழ்நாட்டில்) பயிற்சி வகுப்பு நடத்தலாம். விருப்பம் இருந்தால் அறியத் தாருங்கள். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 17:09, 17 ஆகத்து 2024 (UTC)Reply

👍 விருப்பம். உலகளவில் எடுக்கப்படும் முன்னெடுப்புகளில் நாமும் இணைந்துகொள்வது நற்பலன்களைத் தரும். விக்கிப்பீடியா திட்டத்தோடு நெருங்கிய தொடர்புள்ள விக்கித்தரவிலும் திட்டங்களை இயக்குவது, தொலைநோக்குப் பார்வையில் அவசியமானது ஆகும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:39, 18 ஆகத்து 2024 (UTC)Reply
👍 விருப்பம் - இது இனி வரும் காலத்தின் தேவை என்பதை நீச்சல்காரன் அடிக்கடி சொல்வார். இன்னும் நுணுக்கமாக விக்கித்தரவில் பணியாற்றுவது குறித்து நாம் பயிற்சி பெறுவதும் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதும் அவசியம். --மகாலிங்கம் இரெத்தினவேலு 13:46, 18 ஆகத்து 2024 (UTC)Reply
👍 விருப்பம் பொதுவாக தொகுப்புகளை மேற்கொள்பவர்கள், விக்கித் தரவில் உருப்படிகளை இணைப்பதை தவிர அதிகம் பங்களிப்பதில்லை. எனவே தரவுத் தொடர்பாக நிகழ்வினை ஒருங்கிணைத்தால் பயிற்சிக்கு கூடுதல் நேரம் செலவிடலாம். --சத்திரத்தான் (பேச்சு) 14:23, 18 ஆகத்து 2024 (UTC)Reply

சிறப்பு மாதம்:கட்டுரைகளில் மேற்கோள்கள் சேர்த்தல்

மேற்கோள்கள் இல்லாத கட்டுரைகளில் மேற்கோள்கள் சேர்க்கும் பணி செப்டம்பர் 2024 மாதம் முழுக்க நடைபெறும். திட்டப் பக்கம்: விக்கிப்பீடியா:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்/2024.

ஆர்வமுடையோர் தமது பங்களிப்பினைத் தரலாம். ஐயங்கள் இருப்பின் திட்டப் பக்கத்தின் உரையாடல் பக்கத்தை பயன்படுத்தலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:02, 2 செப்டெம்பர் 2024 (UTC)Reply

சான்றுகள் இல்லாத கட்டுரைகளில் உரிய வார்ப்புருவினை இடுதல்

தானியக்கமாக மேற்கோள் சேர்த்தல் உள்ளிட்ட முன்னெடுப்புகளை எடுத்து, ஒரு சமூகமாக பணியாற்றி வருகிறோம்.

சான்று இல்லாத கட்டுரைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகின்றது. எனினும், 'சான்றில்லை' எனும் வார்ப்புரு இடப்படாத கட்டுரைகள் ஏராளமானவை உள்ளன. ஆகவே இக்கட்டுரைகளின் தலைப்பானது "சான்று எதுவும் தரப்படாத பக்கங்கள்" எனும் பகுப்பின் கீழ் அடங்கவில்லை.

தானியக்கமாக உரிய துப்புரவு வார்ப்புருக்களை இடுவது குறித்து கலந்துரையாடுவோம். இப்போதைக்கு, நமக்குத் தெரியவரும் கட்டுரைகளில் உரிய வார்ப்புருவினை இட்டு, தரவுத் திரட்டலுக்கு உதவுங்கள். எடுத்துக்காட்டு: ஜோன்ஸ் (திரைப்படம்) மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:58, 5 அக்டோபர் 2024 (UTC)Reply

மேற்கோளாக ஒரு இணையத்தளப் பக்கம் இணைக்கப்பட்ட காலத்தில், எவ்வித கட்டணமும் செலுத்தாமல் பொதுமக்கள் காணத்தக்கதாக அத்தளம் இருந்திருக்கும். அதன் பின்னர் சந்தாதாரர்கள் மட்டும் முழுமையாகக் காணும் வகையில் அத்தளம் மாற்றப்பட்டிருக்கும். இத்தகையக் கட்டுரைகளை இனங்கண்டு வகைப்படுத்த வேண்டும். தீர்வு காண்பதற்கு இச்செயல் முக்கியமானது ஆகும். இதற்காக பகுப்பு:முழுமையாகப் பார்க்க இயலாத மேற்கோளைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் எனும் பகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் திரைப்படங்கள் (தி இந்து ஆங்கில நாளிதழ்), துடுப்பாட்டம் (CricketArchive) தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்த இந்த முன்னெடுப்பு உதவும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:27, 6 அக்டோபர் 2024 (UTC)Reply

ஒன்றரை லட்சக் கட்டுரையையும் அலசி சான்றே இல்லாத கட்டுரைகளைத் தானியங்கியால் அடையாளம் காணமுடியும்(வார்ப்புரு இடல்). அவற்றிற்கு ஆங்கிலத்தில் மேற்கோளிலிருந்தால் இறக்குமதியும் செய்யமுடியும். விக்கிச் சமூக ஒப்புதல் இருந்தால் தானியங்கியை இயக்குகிறேன்.
போதுமான மாற்று மேற்கோள்கள் இருந்தால் இவற்றை நீக்கவோ மாற்றவோ செய்யலாம் ஆனால் பொதுவாக முழுமையாகச் செயலிழந்த உரலிகளைக்கூட மாற்று உரலி இல்லாவிட்டால் அவற்றை நீக்க வேண்டாமென நினைக்கிறேன். எதிர்காலத்தில் அவற்றின் காப்பக முகவரியைத் தேட உதவும். ஒரு மேற்கோள் சந்தாதாரர்களுக்கென மாற்றப்பட்டதால் அவற்றை மாற்ற வேண்டியதில்லை. அந்த அணுக்கமுள்ளவர்களால் சரிபார்த்துக் கொள்ளமுடியும். அவ்வாறு இறுக்கமாக மேற்கோள் கொள்கையிலிருந்தால் அச்சுப் புத்தங்களை மேற்கோளாகக் கொடுத்து வந்திருக்க முடியாது. -நீச்சல்காரன் (பேச்சு) 08:12, 6 அக்டோபர் 2024 (UTC)Reply
  • சான்றே இல்லாத கட்டுரைகளைத் தானியங்கியால் அடையாளம் காணுதல், வார்ப்புரு இடுதல். * ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து, மேற்கோளிலிருந்தால், இறக்குமதி செய்தல்.
இப்பணிகளைச் செய்வதற்கு ஆதரவினை அளிக்கிறேன். தானியக்கமாக அல்லாது, இப்பணிகளைச் செய்வது மிகுந்த சிரமமாக இருக்கும். இதற்காக பயனர்கள் செலவிடும் நேரத்தை புதியக் கட்டுரைகளை எழுதவும், கட்டுரைகளை மேம்படுத்தவும் பயன்படுத்தலாம்.--நந்தகுமார் (பேச்சு) 08:34, 6 அக்டோபர் 2024 (UTC)Reply
  • @Neechalkaran: தானியங்கியால் அடையாளம் கண்டு மேற்கோள்களையும் இடமுடியுமானால் அது நல்ல ஒரு திட்டம். மேற்கோள்கள் இல்லாத தமிழ்க் கட்டுரைகள் (ஆங்கில விக்கியில் இல்லாதவை) ஏராளமாக இருக்கும். அவற்றிற்கு வார்ப்புரு சேர்த்தால் பயனுள்ளதாக இருக்கும். எனது தொடக்ககாலக் கட்டுரைகள் பலவற்றை மேற்கோள்கள் இல்லாமல் எழுதியிருக்கிறேன்:(.--Kanags \உரையாடுக 11:20, 6 அக்டோபர் 2024 (UTC)Reply
@Kanags உங்கள் உரையின் இரண்டாவது சொற்றொடரை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. உரையினை திருத்தி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:25, 6 அக்டோபர் 2024 (UTC)Reply
திருத்தியிருக்கிறேன். மேலும் ஒரு குறிப்பு: நீச்சல்காரனின் தானியங்கியில் ஒரு சில திருத்தங்கள் தேவையாக இருக்கலாம். பார்க்க: ஸ்டாலின் (2006 திரைப்படம்), ஏற்கனவே Reflist வார்ப்புரு சேர்க்கப்பட்டிருக்க, மீண்டும் இன்னும் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிறது.--Kanags \உரையாடுக 11:35, 6 அக்டோபர் 2024 (UTC)Reply
@Kanags:, குறித்துக் கொண்டேன். நன்றி. அடுத்த இயக்கத்தில் இவை சரியாகக் கையாளப்படும். -நீச்சல்காரன் (பேச்சு) 16:35, 6 அக்டோபர் 2024 (UTC)Reply

@Neechalkaran: சான்று இல்லாத கட்டுரைகளை தானியங்கியால் அடையாளம் கண்டு, வார்ப்புரு இட முயற்சி செய்வதற்கு நன்றி! சந்தாதார்களுக்கென மாற்றப்பட்ட தளங்களின் உரலிகள் குறித்த உங்களின் கருத்தே எனது கருத்தும். இந்த உரலிகள் இடப்பட்டுள்ள கட்டுரைகளை அடையாளங் காண வேண்டும் என்பதுவே எனது கோரிக்கை. இதன் மூலமாக ஆயிரக்கணக்கான கட்டுரைகளில் காப்பக முகவரியை எதிர்காலத்தில் இட இயலும். (மனித ஆற்றலின் வாயிலாக அல்லது தானியங்கி வாயிலாக) எடுத்துக்காட்டு: மேனகா (1935 திரைப்படம்)

@Nan: தானியக்கமாக வார்ப்புரு சேர்த்தல் நன்று எனும் உங்களின் கருத்தை ஏற்கிறேன். இந்தச் செயலுக்கு தாமதம் ஏற்படும்போது, கண்களுக்குத் தெரியும் கட்டுரைகளில் உரிய வார்ப்புருவினை இடுமாறு பொதுவான வேண்டுகோள் வைத்தேன்.

தானியங்கி மூலமாக வார்ப்புரு இடுவதற்கு  ஆதரவு - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:33, 9 அக்டோபர் 2024 (UTC)Reply

இந்தத் தானியங்கித் திட்டத்திற்கு ஆதரவளிக்கிறேன்.  ஆதரவு --சிவகோசரன் (பேச்சு) 14:22, 12 அக்டோபர் 2024 (UTC)Reply

பார்க்க: ஆ.வி.-இலிருந்து மேற்கோள்கள் இறக்குமதியில் தவறு.--Kanags \உரையாடுக 09:39, 13 அக்டோபர் 2024 (UTC)Reply

Ping பயன்பாடு வேலை செய்கிறதா என்பதில் ஐயம் இருப்பதால், இந்த உரையாடல் பகுதியில் தெரிவிக்கிறேன்:-
சுமார் 18,000 கட்டுரைகள் அலசப்பட்டு, தானியங்கி வாயிலாக உரிய செயல்கள் செய்யப்பட்டுள்ளன. இவற்றை இயன்றளவு சரிபார்த்து, கருத்துக்களை தெரிவிக்குமாறு பயனர்களை கேட்டுக்கொள்கிறேன். விரிவான உரையாடலுக்கு, காண்க: இற்றை - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:35, 16 அக்டோபர் 2024 (UTC)Reply

புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள்

'புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள்' என்ற கட்டுரையில் உள்ள நாடுகளைக் கவனியுங்கள். புராதன இந்தியா என்ற நூலை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன (சொந்த ஆய்வு). எ.கா: நேபாளதேசம், காசுமீரதேசம் என்பவை ஏற்கெனவே உள்ள பகுதிகளைக் குறிக்கிறது. ஆகவே இங்குள்ளவற்றை வழிமாற்ற அல்லது நீக்க வேண்டியுள்ளன. கருத்துக்களைத் தெரிவியுங்கள். AntanO (பேச்சு) 16:59, 27 அக்டோபர் 2024 (UTC)Reply

பெயரிடல் மரபு

தமிழ் விக்கிப்பீடியாவில், சௌகான் என்ற பெயரை சவுகான் என்றும், சௌரவ் என்ற பெயரை சவுரவ் என்றும், சௌத்ரி என்ற பெயரை சவுத்ரி என்றும் பல கட்டுரைகளில் எழுதப்பட்டுள்ளது. சௌ என்ற எழுத்து முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. இப்படி எழுதுவது தவறானது. தமிழ் விக்கிப்பீடியாவில் பயன்படுத்தியுள்ளது போலவே சௌத்ரி என்பதை சவுத்ரி என்று தமிழ்ச் செய்தி ஊடகங்களிலும் பயன்படுத்தி வருகின்றனர். நாம் தமிழ் விக்கிப்பீடியாவில் இவை அனைத்தையும் சரியான பெயருக்கு வழிமாற்று இன்றி நகர்த்த வேண்டும்.-- சா. அருணாசலம் (உரையாடல்) 16:54, 30 அக்டோபர் 2024 (UTC)Reply

👍 விருப்பம் --சிவகோசரன் (பேச்சு) 13:55, 31 அக்டோபர் 2024 (UTC)Reply

முறிந்த வழிமாற்றிகள்

@Kanags:, @Selvasivagurunathan m:159 தலைப்புகள், முறிந்த வழிமாற்றிகளாக உள்ளன. இவை ஒரே சமயத்தில் எப்படி ஏற்பட்டன என்று தெரியவில்லை. இவை அனைத்தும் நீக்கப்படவேண்டுமா என்றும் தெரியவில்லை. தெரிவியுங்கள்.--நந்தகுமார் (பேச்சு) 17:35, 30 அக்டோபர் 2024 (UTC)Reply

@Nan வணக்கம். இந்தத் தலைப்புகளின் பட்டியலை எங்கு காண்பது என்பதனை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆராய்ந்து அறிவதற்கு உதவியாக இருக்கும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:51, 30 அக்டோபர் 2024 (UTC)Reply
@Selvasivagurunathan m: வணக்கம். [[1]] இங்கு பாருங்கள்.--நந்தகுமார் (பேச்சு) 19:06, 30 அக்டோபர் 2024 (UTC)Reply
@Nan பேச்சு:இந்திய இசுலாமிய எழுத்தாளர்கள் எனும் உரையாடலைக் கவனியுங்கள். அக்கட்டுரை நீக்கப்பட்டதால், இது நிகழ்ந்துள்ளது எனக் கருதுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:15, 30 அக்டோபர் 2024 (UTC)Reply
@Selvasivagurunathan m: இவை (முறிந்த வழிமாற்றிகள்) அனைத்தையும் நீக்கிவிடலாமா?. தெரிவியுங்கள்.--நந்தகுமார் (பேச்சு) 19:31, 30 அக்டோபர் 2024 (UTC)Reply
@Nan குறிப்பிடத்தக்கமை இல்லை என்பதாக 'பட்டியல் கட்டுரை' நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த 159 பக்கங்களை நீக்குதலே உகந்தது எனக் கருதுகிறேன். எனினும், @Kanags: அவர்களும் இதனை உறுதி செய்தார் எனில், நாம் செயல்படுத்திவிடலாம்! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:38, 30 அக்டோபர் 2024 (UTC)Reply
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 19:49, 30 அக்டோபர் 2024 (UTC)Reply
அவற்றை நீக்கலாம்.--Kanags \உரையாடுக 21:13, 30 அக்டோபர் 2024 (UTC)Reply
Y ஆயிற்று நந்தகுமார் (பேச்சு) 23:21, 30 அக்டோபர் 2024 (UTC)Reply
@Nan நேரம் செலவிட்டு செயலாற்றியமைக்கு நன்றிகள்! @சா அருணாசலம்: தங்களின் கவனத்திற்கு. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:45, 31 அக்டோபர் 2024 (UTC)Reply
👍 விருப்பம் -- சா. அருணாசலம் (உரையாடல்) 05:55, 31 அக்டோபர் 2024 (UTC)Reply

தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி

நவம்பர் 2024 மாதாந்திரக் கூட்டத்தில், கல்லூரி மாணவர்களுக்கு உள்ளகப் பயிற்சி (internship) வழங்கும் வாய்ப்புகள் குறித்தான உரையாடல் நடந்தது. விக்கித் திட்டங்கள் குறித்து மாணவர்கள் அறிவதற்கும், புதுப் பயனர்களை கொண்டுவருவதற்கும் இவ்வாறான பயிற்சித் திட்டங்கள் உதவும் என கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட நிகழ்வுகள் மீதும் உரையாடல் நடைபெற்றது. உள்ளகப் பயிற்சியை வழங்குவதற்கான கொள்கைகள், வழிமுறைகள், வழிகாட்டல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டப் பக்கத்தை உருவாக்கிட பரிந்துரைக்கப்பட்டது. இதைக் கருத்திற்கொண்டு விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி எனும் பக்கம் தற்போது துவக்கப்பட்டுள்ளது. திட்டம் குறித்து நல்ல புரிதல் உடையவர்கள், முந்தைய நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்தியவர்கள் இந்தப் பக்கத்தை வளர்த்தெடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். தேவைப்படும் உரையாடல்களை திட்ட உரையாடல் பக்கத்தில் செய்துகொள்வோம். நன்றி! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:05, 1 திசம்பர் 2024 (UTC)Reply

பகுப்பு:கூகுள்

இந்தப் பகுப்பில் அடங்கியுள்ள பல கட்டுரைகளின் தலைப்புகள் 'கூகிள்' என பிழையாக உள்ளன. இவற்றை 'கூகுள்' என நகர்த்தலாமா? (தேவைப்படும் இடங்களில் வழிமாற்றுடன் நகர்த்துதல்) - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:00, 21 திசம்பர் 2024 (UTC)Reply

மாற்றலாம், ஆனால் வழிமாற்றுடன் மாற்றுங்கள். அல்லது இணைப்புகள் சரி செய்யப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 22:04, 21 திசம்பர் 2024 (UTC)Reply
நன்றி; அவ்வாறே செய்கிறேன். கூகிள் குரோம் பக்கத்தை வழிமாற்றுடனே நகர்த்தியிருக்கிறேன் - ஏனெனில் 80 பக்கங்களில் இந்தப் பக்கம் உள்ளிணைப்பாக இருக்கும் காரணத்தினால். குறைவான பக்கங்களில் உள்ளிணைப்பாக இருப்பின் இணைப்பை சரிசெய்ய முற்படுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:18, 21 திசம்பர் 2024 (UTC)Reply
அனைத்துக் கட்டுரைகளையும் வழிமாற்றுடன் நகர்த்தப் பரிந்துரைக்கிறேன். -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 02:50, 22 திசம்பர் 2024 (UTC)Reply

விளக்கம் வேண்டுதல்

  • ஈரோடு வெங்கட்ட இராமசாமி என்ற பெயர் சுருக்கமாகக் குறிப்பிடப்படும் போது, ஈ. வெ. இரா (ஈ. வெ. ரா) என்றே பதிவிடப்படுகிறது. இறுதி சுருக்கெழுத்தான 'இரா' என்பது நீட்சி பெற்று இராமசாமி என்று கொள்ளும் போது, அந்த எழுத்தையும் முடிவில் புள்ளி பெற்ற சுருக்கெழுத்தாக 'இரா.' என்று குறிப்பிடப்பட வேண்டும் என்பது தமிழ் விக்கிப்பீடியாவில் சரிவரப் பயன்படுத்தப்படவில்லையே? இம்மாதிரியே ம. கோ. இராமச்சந்திரன் முதலிய பெயர்களும் அமையப் பெற்றுள்ளன. இதற்கான காரணங்கள் எவையேனும் உள்ளனவா? விளக்க வேண்டுகிறேன். நன்றி!

பொதுஉதவி (பேச்சு) 02:05, 25 திசம்பர் 2024 (UTC)Reply

விக்கிப்பீடியா பரப்புரை-திடீர் அழைப்பு

நேற்றைய தினம் (26.12.2024) திடீர் அழைப்பாக பேராசிரியர்களுக்காக நடைபெற்ற பயிற்சியில் உரையாற்ற 15 நிமிட கால அழைப்பில் அழைக்கப்பெற்றேன். இந்நிகழ்வானது நெதர்லாந்து சூரியத் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பபட்டது. இந்த காணொளியின் இணைப்பு https://www.youtube.com/watch?v=q97qXiEkw18 சத்திரத்தான் (பேச்சு) 11:38, 27 திசம்பர் 2024 (UTC)Reply

வாழ்த்துகள் சத்திரத்தான்.--கி.மூர்த்தி (பேச்சு) 11:45, 27 திசம்பர் 2024 (UTC)Reply
    • நெதர்லாந்து 'சூரியத்தமிழ்' தொலைக்காட்சி ஊடகம் மூலமாக "இணையத் தமிழ்" என்ற தலைப்பில் தமிழ்நாடு தமிழ்ச் சங்கம் ஏற்பாட்டில் 'ஆசிரியர் திறன் மேம்பாட்டு நிகழ்வு' ஒன்றின் வாயிலாக இணையம் வழியாகக் கலந்து கொண்டவர்களுக்கு சத்திரத்தான் அவர்கள் தமிழ் விக்கிப்பீடியா சம்பந்தமாக பகிர்ந்த கருத்துக்களுக்காக ([2]) அவரைப் பாராட்டுவோம்.

பொதுஉதவி (பேச்சு) 11:10, 30 திசம்பர் 2024 (UTC)Reply

வாழ்த்துகள் சத்திரத்தான்.--சிவகோசரன் (பேச்சு) 14:29, 30 திசம்பர் 2024 (UTC)Reply
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 16:06, 30 திசம்பர் 2024 (UTC)Reply
👍 விருப்பம் நிறைவான அறிமுகம். --கி.மூர்த்தி (பேச்சு) 16:22, 30 திசம்பர் 2024 (UTC)Reply

பத்தாயிரவர் வாழ்த்துக்கள்

தமிழ் விக்கிப்பீடியாவில் பத்தாயிரம் கட்டுரைகளைப் பதிவிட்டு, மேலும் பயணத்தைத் தொடரும் கி. மூர்த்தி அவர்களுக்கு, மனம் நிறைந்த பாராட்டுக்கள். பொதுஉதவி (பேச்சு) 02:51, 31 திசம்பர் 2024 (UTC)Reply

ஓர் ஒரு சொற் பயன்பாடு

நிலைமொழியில் ஓர்என்ற சொல் வருகிறதென்றால் வருமொழியில் உயிரெழுத்துகளில் துவங்கும் சொல் மட்டுமே வரவேண்டும். (எ. கா) ஓர் ஆயிரம், ஓர் இந்தியர், ஓர் ஊர், ஓர் எழுத்தாளர்.

நிலைமொழியில் ஒரு என்ற சொல் வருகிறதென்றால் வருமொழியில் உயிர்மெய் எழுத்துகளில் துவங்கும் சொல் மட்டுமே வரவேண்டும். (எ. கா) ஒரு பாடல், ஒரு நடிகர், ஒரு தமிழர். தமிழ் விக்கிப்பீடியாவில் இவ்விரு சொற்களை இவ்வாறே பயன்படுத்தலாம்.-- சா. அருணாசலம் (உரையாடல்) 13:36, 3 சனவரி 2025 (UTC)Reply

ஐந்து மொழிகளில் புதிய வீடியோக்கள்

Hi all, I recently completed a project, creating nearly 20 videos in five low-resource languages. These languages, Kusunda, Ho, Bonda, and Baleswari-Odia, have few resources and are covered less in Wikipedia. I want to share them with you. I would appreciate it if you could use them in relevant Malayalam Wikipedia articles. Thanks!

தமிழ் (இயந்திர மொழிபெயர்ப்பு மூலம் எழுதப்பட்டது): வணக்கம்! ஐந்து மொழிகளில் ~20 வீடியோக்களை உருவாக்கும் திட்டத்தை நான் வழிநடத்தினேன். குசுண்டா, ஹோ, போண்டா, வான்-குஜ்ஜாரி மற்றும் பாலேஸ்வரி-ஒடியா ஆகிய இந்த மொழிகள் சில ஆதாரங்களைக் கொண்டுள்ளன, மேலும் அவை விக்கிப்பீடியாவில் குறைவாகவே உள்ளடக்கப்பட்டுள்ளன. அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவற்றை பொருத்தமான தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் பயன்படுத்தினால் மகிழ்வேன். நன்றி!Psubhashish (பேச்சு) 00:28, 21 சனவரி 2025 (UTC)Reply

கருத்து

தமிழ் விக்கிப்பீடியாவில் ...

  • தொகுப்பு வரலாற்றைப் பார்
  • பேச்சுப் புத்தகத்தைப் பார்
  • கட்டுரையை உலாவியிற் பார்
  • வாசி
  • மூலத்தைத் தொகு
  • நகர்த்து
  • முன்தோற்றம் காட்டு
  • மாற்றங்களைக் காட்டு ...

... ... இம்மாதிரியான கட்டளைகளை

  • தொகுப்பு வரலாற்றைப் பார்க்க
  • பேச்சுப் புத்தகத்தைப் பார்க்க
  • கட்டுரையை உலாவியிற் பார்க்க
  • வாசிக்க
  • மூலத்தைத் தொகுக்க
  • நகர்த்துக
  • முன்தோற்றம் காட்டுக
  • மாற்றங்களைக் காட்டுக ...

என்று கட்டளைகளின் வார்த்தைகளை மாற்ற முயற்சிக்க வேண்டுகிறேன். நன்றி!-- பொதுஉதவி (பேச்சு) 13:06, 24 சனவரி 2025 (UTC)Reply

👍 விருப்பம். அவ்வாறுதான் முன்னர் இருந்தன, ஆனால் பின்னால் எவரையும் கேட்காமல் மாற்றப்பட்டு விட்டன.--Kanags \உரையாடுக 21:33, 24 சனவரி 2025 (UTC)Reply
மேற்கொண்டு உரையாடி முடிவெடுக்க, முந்தைய உரையாடல் உதவும்: ஆங்கில மாதங்களின் பெயரில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள். அத்தோடு, பகுப்பு:CS1 errors: dates எனும் பகுப்பில் கட்டுரைகளின் எண்ணிக்கை ஏன் திடீரென உயர்ந்தது என்பதனையும் அலச வேண்டும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:19, 25 சனவரி 2025 (UTC)Reply
👍 விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 03:23, 25 சனவரி 2025 (UTC)Reply
👍 விருப்பம்--Balu1967 (பேச்சு) 03:43, 25 சனவரி 2025 (UTC)Reply
பகுப்பு பேச்சு:CS1 errors: dates எனும் பக்கத்திலுள்ள உரையாடலையும் நாம் கவனிக்க வேண்டும். விக்கிப்பீடியா:இடைமுகப்பு மொழிபெயர்ப்பு/வேண்டுகோள்கள், இதற்கான உரையாடல் பக்கம் இவற்றின் வாயிலாக உரிய உரையாடல்களை நடத்தி, தேவைப்படும் திருத்தங்களை செய்யலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:22, 25 சனவரி 2025 (UTC)Reply
  • தமிங்கிலம் என்பது போல் 'தமிசுகிருதம்' என்ற சொல்லை நாம் பயன்படுத்தலாமா?

பொதுஉதவி (பேச்சு) 14:06, 21 பெப்பிரவரி 2025 (UTC)

குறைந்தபட்ச வாக்கியங்களின் எண்ணிக்கை குறித்து

வணக்கம், ஒரு கட்டுரையில் குறைந்தபட்சம் எவ்வளவு வாக்கியங்கள் இருக்க வேண்டும் என்பது குறித்து இங்கு உங்களது கருத்துக்களைத் தெரிவியுங்கள். கொள்கை முடிவு எடுக்க உதவியாக இருக்கும். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 14:05, 26 பெப்பிரவரி 2025 (UTC)

தமிழ்த் திரைப்படம் தொடர்பான கட்டுரைகளுக்கான வழிகாட்டல்கள்

தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழ்த் திரைப்படம் சார்ந்த கட்டுரைகள் சுமார் 6,000 உள்ளன. இந்தக் கட்டுரைகளை மேம்படுத்தும் நோக்கத்தில், விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் தமிழ்த் திரைப்படம் எனும் திட்டப் பக்கம் ஏற்கனவே உள்ளது. இந்நிலையில், விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் தமிழ்த் திரைப்படம்/வழிகாட்டல்கள் எனும் துணைப் பக்கத்தினை இன்று ஆரம்பித்துள்ளேன். ஆர்வமுள்ள பயனர்களை இந்த வழிகாட்டல் பக்கத்தை மேம்படுத்தி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். தேவைப்படும்போது, திட்டத்தின் உரையாடல் பக்கத்தில் உரையாடல் நடத்தலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:37, 8 மார்ச்சு 2025 (UTC)

துப்புரவுப் பணிகள்

வணக்கம், அண்மையில் பல கட்டுரைகள் உருவாக்கப்பட்டு வருவதால் தொடர் பங்களிப்பாளார்கள் துப்புரவுப் பணிகளில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 15:16, 21 மார்ச்சு 2025 (UTC)

👍 விருப்பம். செம்மைப்படுத்துதல்/ ஒழுங்கமைவு/ துப்புரவு ஆகிய பணிகளை தொடர்ந்து செய்து, தரத்தை நிலைநிறுத்துதல் என்பது ஒரு கட்டிடத்தை வலுப்படுத்தும் தூண் போன்றது ஆகும்! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:31, 10 ஏப்ரல் 2025 (UTC)Reply

கருத்து

வேற்றுமொழி (ஆங்கிலம்) கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து உருவாக்குவது போல், புதுப்பயனர்களுக்காக தமிழ்மொழியில் புதுக்கட்டுரைகளை வடிவமைக்க, புது வார்ப்புரு ஒன்றை உருவாக்க வாய்ப்பிருக்கிறதா?

உதாரணமாக, ஊர்கள் / நகரங்கள் பற்றிய கட்டுரைக்காக:

தகவற்பெட்டி, முன்னுரை, அமைவிடம், போக்குவரத்து (துணைத் தலைப்புகள்: தரைவழி, இருப்புப்பாதை, வான்வழி), கல்வி (துணைத் தலைப்புகள்: பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம்), வர்த்தகம், பொருளாதாரம், சமயம், மற்றும் பிற, குறிப்புகள் / மேற்கோள்கள், வெளியிணைப்புகள்

போன்றவற்றைக் குறிப்பிட்டு புது வார்ப்புரு.

இம்மாதிரியே கோயில் கட்டுரைகள், மற்றும் பலவற்றிற்காக.

பொதுஉதவி (பேச்சு) 10:37, 25 மார்ச்சு 2025 (UTC)

தங்களின் முயற்சிகளுக்கு நன்றி! விக்கிப்பீடியா:புதிய கட்டுரை எழுதுதல் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:33, 10 ஏப்ரல் 2025 (UTC)Reply

Your mentor - வசதி

வணக்கம், 2022 புதிய விக்கிப்பீடியா இடைமுகப்பில் பல புதிய வசதிகள் உள்ளன.

  • Your mentor எனும் வசதி, புதிய பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். துப்புரவுப் பணியில் ஆர்வம் உள்ளவர்கள் தங்களை mentor ஆக பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் புதுப் பயனர்கள் தங்களுக்கு எழும் ஐயங்களை தங்களது mentor களிடம் எளிமையாக கேட்கும் வசதி உள்ளது. துப்புரவுப் பணிகளைச் செய்து வருபவர்கள் இதில் பதிவு செய்துகொண்டு புதிய பயனர்களை இந்தப் பக்கத்தில் சேர்க்கலாம். இதன்மூலம் அவர்களுடைய பங்களிப்புகளை மட்டும் தனிக் கவனம் செலுத்த இயலுகிறது.

இன்னும் சில வசதிகள்

  • உங்களது பங்களிப்புகளின் தாக்கங்கள். (நீங்கள் தொகுத்த பக்கங்களுக்கு எவ்வளவு பக்கப் பார்வைகள் கிடைத்துள்ளது)
  • உங்களது தொடர்ச்சியான பங்களிப்புகள்.
  • நன்றி - பெற்றதும் தந்ததும்
  • உங்களுக்கு விருப்பமான துறைகளில் (விளையாட்டு, கலை...) புதிய கட்டுரைகளை உருவாக்குவதற்கான பரிந்துரைகளைப் பெறலாம்.
  • நமது சமூகங்கள் பரிந்துரைக்கும் கட்டுரைகளைத் துப்புரவு செய்யலாம். (உதாரணமாக: கூகுள் கட்டுரை/மருத்துவம்)
  • Easy, Medium, Hard வாரியாக ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஆனால் துப்புரவு தேவைப்படும் கட்டுரைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தொகுக்கலாம்.

முயற்சித்துப் பாருங்கள் சந்தேகங்கள் அல்லது ஏதேனும் மாற்றங்கள் தேவை எனில் குறிப்பிடுங்கள். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 16:03, 11 ஏப்ரல் 2025 (UTC)Reply

👍 விருப்பம் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:14, 11 ஏப்ரல் 2025 (UTC)Reply
பயனர் பக்கத்தில் புதிய வசதிகளுடன் முகப்புப் பக்கம் காட்டுவதும் Mentor Dashboardம் வேறு வேறு வசதிகள் தானே? Special:Homepage என்று தேடி வரும் வழிகாட்டல்களைப் பின்பற்றினால் நீங்கள் கூறும் புதிய வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் விவரங்களுக்கு, https://www.mediawiki.org/wiki/Help:Growth/Tools/Enable_the_Homepage . அண்மைய மாற்றங்களைக் கவனித்துச் சுற்றுக்காவல், துப்புரவு, புதுப்பயனர் வழிகாட்டலில் ஈடுபடும் அனைத்துப் பயனர்களும் இந்தப் புதிய முகப்பையும் Mentor Dashboardஐயும் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி. - இரவி (பேச்சு) 09:32, 12 ஏப்ரல் 2025 (UTC)Reply
//பயனர் பக்கத்தில் புதிய வசதிகளுடன் முகப்புப் பக்கம் காட்டுவதும் Mentor Dashboardம் வேறு வேறு வசதிகள் தானே?// ஆம். ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 12:37, 15 ஏப்ரல் 2025 (UTC)Reply

வேண்டுகோள்

'வார்ப்புரு:ஆச்சு' என்ற பக்கத் தலைப்பை 'வார்ப்புரு:ஆயிற்று' என்று திருத்தம் செய்ய வேண்டுகிறேன். பொதுஉதவி (பேச்சு) 06:22, 18 ஏப்ரல் 2025 (UTC)Reply

வெள்ளாளர்

தமிழ்நாட்டில் உள்ள வெள்ளாளர் சமூகத்தினரின் கட்டுரையில் சில கட்டுரைகளில், அவர்களின் உட்பிரிவுகளில் சிலர் வெள்ளாளர் என்றும் சிலர் வேளாளர் என்றும் கட்டுரை உள்ளது(உ+தா:வெள்ளாளர் கட்டுரைகள்:(சோழிய வெள்ளாளர், துளுவ வெள்ளாளர்), வேளாளர் கட்டுரைகள்:(பாண்டிய வேளாளர், ஆரிய வேளாளர்).. இதில் இவர்களுக்கு எது தான் சரியான பெயர்?? --கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 07:13, 20 ஏப்ரல் 2025 (UTC)Reply

ல. ராஜ்குமார் பக்கத்திற்கு உதவி

வணக்கம், நான் ல. ராஜ்குமார் பற்றிய டிராஃப்டை (பயனர்:Kesava murari/Draft) AfC-ல் சமர்ப்பித்துள்ளேன். மதிப்பாய்வுக்கு உதவவும். நன்றி! Kesava murari (பேச்சு) 10:23, 25 ஏப்ரல் 2025 (UTC)Reply

தேனியில் பயிற்சி?

வணக்கம், ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் யாரேனும் விக்கிப்பீடியா குறித்தான பயிற்சி வழங்கி வருகிறீர்களா? அண்மையில் பல பயனர் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 06:46, 15 மே 2025 (UTC)Reply

இன்று அக்கல்லூரியில் ஐந்து நாள் திறன்மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றுவருகிறது. அதில் இன்று விக்கிப்பீடியா அமர்வினைப் பயனர்:Theni.M.Subramani எடுத்துள்ளார். அதன் காரணமாகப் பயனர் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. -நீச்சல்காரன் (பேச்சு) 13:23, 15 மே 2025 (UTC)Reply
தேனித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், தேனி மாவட்டம், உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் தமிழ்த்துறை இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு ‘கணினி மற்றும் இணையத் தமிழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சி’ 12-5-2025 ஆம் நாளில் தொடங்கி ஐந்து நாட்கள் நடத்தப் பெற்று வருகிறது. இதில் நான்காம் நாளில் (15-5-2025) விக்கிப்பீடியா குறித்த பயிற்சி என்னால் வழங்கப் பெற்றது. இதில் மாணவர்கள் பயனர் கணக்கு உருவாக்கவும், பயனர் பக்கத்தில் அவர்களைப் பற்றி குறிப்புகளைப் பதிவிடவும் பயிற்சியளிக்கப்பட்டது. இப்பயிற்சியைத் தொடர்ந்து, வணிக முத்திரை மற்றும் முகமது மீரான் ராவுத்தர் எனும் இரு கட்டுரைகள் கல்லூரி மாணவர் மற்றும் பேராசிரியரால் உருவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 01:21, 16 மே 2025 (UTC)Reply
மகிழ்ச்சி.-- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 15:33, 16 மே 2025 (UTC)Reply

Indic MediaWiki Developers User Group இன் தொழில்நுட்ப ஆதரவு

வணக்கம் தமிழ் விக்கிமீடியர்கள்,

நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்! 😊

நான் Indic MediaWiki Developers User Group (IMDUG) சார்பாக தொடர்பு கொள்கிறேன். எங்கள் தொடர்ச்சியான Community Task Force முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் 2025 வரை) தமிழ் சமூகத்துடன் இணைந்து, நீங்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப சவால்களை புரிந்து கொண்டு, அவற்றை தீர்க்க உதவ விரும்புகிறோம்.

எங்களை எதற்காக அணுகலாம்?

நாங்கள் கீழ்காணும் விஷயங்களில் உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறோம்:

  • தொழில்நுட்ப பிழைகள் அல்லது தமிழ் விக்கிப்பீடியா மற்றும் தொடர்புடைய விக்கிமீடியா திட்டங்களில் உள்ள பிழைகள்.
  • பண்புகள் மேம்பாடுகள், கருவிகள் அல்லது உங்களின் தொகுப்பு அல்லது கண்காணிப்பு பணிகளை மேம்படுத்த உதவும் கருவிகள்.
  • டெம்ப்ளேட் அல்லது இடைமுகப் பிரச்சினைகள்.
  • மற்ற எந்தவொரு தொழில்நுட்ப ஆதரவு அல்லது மேம்பாடுகள்—பெரியதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி.

உதாரணமாக:

  • சரியாக செயல்படாத கருவிகள்.
  • பிரிக்கப்பட்ட பக்கங்கள் அல்லது இணைப்புகள்.
  • CSS அல்லது காட்சி சிக்கல்கள்.

=== இது ஏன் முக்கியம்?===

சிறிய தொழில்நுட்ப பிரச்சினைகள் அல்லது குறைவான பண்புகள், பல பங்களிப்பாளர்களை பாதிக்கும்போதும், பெரும்பாலும் அறிக்கையிடப்படுவதில்லை. இந்த அணுகலின் மூலம், அந்த இடைவெளியை நிரப்புவதற்காக:

  • பிரச்சினைகளை ஆவணப்படுத்தி, அவற்றுக்கு காட்சிப்படுத்தல் வழங்குகிறோம்.
  • அவை சரியான தொழில்நுட்ப சேனல்களுக்கு (எ.கா., Phabricator, டெவலப்பர்கள், பராமரிப்பாளர்கள்) செல்ல உறுதி செய்கிறோம்.
  • உங்கள் தொகுப்புப் பயணத்தை மேம்படுத்துவதற்கான தீர்வுகளை செயல்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம்.

எங்கள் நோக்கம் உங்கள் விக்கியில் தினசரி தொகுப்பு அனுபவத்தை மேம்படுத்துவது மற்றும் உள்ளூர் சமூகங்கள் மற்றும் டெவலப்பர் சூழலுக்கிடையிலான ஆழமான ஒத்துழைப்பை ஊக்குவிப்பது.

உங்கள் கருத்துகளை எவ்வாறு பகிரலாம்

நீங்கள் அல்லது உங்கள் சமூக உறுப்பினர்கள் எந்தவொரு தொழில்நுட்ப கோரிக்கைகள் அல்லது பரிந்துரைகள் இருந்தால், நீங்கள்:

உங்கள் கருத்துகளைப் பெற்றவுடன், நாங்கள்:

  • அவற்றை தெளிவாக ஆவணப்படுத்துவோம்.
  • தொடர்ச்சியான புதுப்பிப்புகளை பகிர்வோம்.
  • தேவையான இடங்களில், அவற்றை Phabricator அல்லது விக்கியில் கண்காணிப்பு பக்கங்கள் மூலம் மேம்படுத்துவோம்.

உங்கள் கருத்துகள் மிகவும் மதிப்புமிக்கவை, மேலும் உங்கள் கருத்துகள் தமிழ் விக்கிமீடியா திட்டங்களுக்கு மேலும் உள்ளடக்கமான மற்றும் பதிலளிக்கும் தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்க உதவும்.

உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்!

மெச்சங்கள்,

ஜெ. சாஹு

Indic MediaWiki Developers User Group (IMDUG) சார்பாக Jnanaranjan sahu (பேச்சு) 16:34, 4 சூன் 2025 (UTC)Reply

@Jnanaranjan sahu Thanks for reaching out. I have mentioned some issues at mw:Talk:Indic MediaWiki Developers User Group. Hope the issues will be resolved soon. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 17:25, 4 சூன் 2025 (UTC)Reply
Thank you for reporting the issue and other tech issues. I will personally work on the tool and regarding other issues we will analyze provide feedback or fixes on them. @Balajijagadesh Jnanaranjan sahu (பேச்சு) 11:51, 5 சூன் 2025 (UTC)Reply

அறிவியல் திருவிழாவுடன் அறிவியல் உள்ளடக்க மேம்பாட்டுத் திட்டம்

வணக்கம், ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புத்தகத் திருவிழா போல திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 2026 ஜனவரியில் மாபெரும் அறிவியல் திருவிழா நடத்தத் திட்டமிட்டுள்ளனர். விக்கித்திட்டங்களில் அறிவியல் தொடர்பான உள்ளடக்கங்களை மேம்படுத்த சிறந்த வாய்ப்பாகக் கருதி நான்(தொழில்நுட்பம்), கி.மூர்த்தி(இயற்பியல் அறிவியல்), சத்திரத்தான்(உயிர் அறிவியல்) ஆகியோர் ஒரு ஆறு மாதத் திட்டத்தினைத் திண்டுக்கலில் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம். அடிப்படையில் ஐந்து நேரடிப் பயிலரங்கள், பல இணையவழிப் பயிலரங்குகள், பல தொடர்தொகுப்புகள், ஒரு மாநாட்டு அரங்கம், இரண்டு அறிவியல் ஒளிப்பட நடை மற்றும் சில திட்டங்களுடன் திண்டுக்கல் மாவட்டப் பயனர்களை அதிகரிக்கவும், திண்டுக்கல் மாவட்ட அறிவியல் தொடர்பான தகவல்களை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். இது திண்டுக்கல்லை மையமாக வைத்து எடுக்கப்பட்டாலும் அறிவியல் ஒரு பொதுத்தலைப்பு. யாவரும் பங்கெடுக்கலாம், விக்கித்திட்டங்களுக்கும் புதிய வேகத்தை அளிக்குமென நினைக்கிறேன். முந்தைய அனுபவங்களுடன் விரிவான திட்டமிடலுக்குப் பிறகு திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளோம். அறக்கட்டளையின் விரைவு நிதிநல்கைக்கு விண்ணப்பிக்க முயல்கிறோம். ஒப்புதல் பெறும் பட்சத்தில் ஆர்வமுள்ள அனைவரும் இதில் இணைந்து கொள்ளலாம். திண்டுக்கல்லைச் சேர்ந்த பயனர்கள் கள ஒருங்கிணைப்பில் இணைந்து கொள்ள அழைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 11:27, 29 சூன் 2025 (UTC)Reply

@Neechalkaran தகவலுக்கு நன்றி! தொடர் பங்களிப்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் திட்டமிடல் இருப்பின், நீண்டகாலத்திற்கு தமிழ் விக்கிப்பீடியா பயனடையும் என்பது எனது கருத்தாகும். திட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:06, 29 சூன் 2025 (UTC)Reply
முயற்சிக்கு வாழ்த்துகள். நல்கை விண்ணப்பிக்க குறுகிய காலமே இருந்ததால் நேரடியாக Meta தளத்திலேயே திட்டத் தகவலைப் பகிர்ந்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன். எனினும், தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் சார்பாக யார், எந்த நல்கைக்கு விண்ணப்பித்தாலும் முன்கூட்டியே இங்கு தமிழ் விக்கிப்பீடியாவிலேயே உரையாடி Metaவுக்கு நகர்வது வரவேற்பிற்குரிய நடைமுறையாக இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவிலும் ஒரு திட்டப்பக்கத்தைத் தொடங்கி கூடுதல் விவரங்கள், பங்கேற்பாளர்களைச் சேர்க்க முனைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நல்கை விண்ணப்பத்தில் விருதுகள் / பரிசுகள் என்று 50,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது எவ்வாறு செயற்படுத்தப்படும் என்றும் அறிய விரும்புகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 17:08, 3 சூலை 2025 (UTC)Reply
விக்கிப்பீடியா:அறிவியல் உள்ளடக்க மேம்பாட்டுத் திட்டம் பக்கத்தை உருவாக்கியுள்ளேன். பேச்சுப்பக்கத்தில் உரையாடுவோம். -நீச்சல்காரன் (பேச்சு) 18:49, 5 சூலை 2025 (UTC)Reply

அறிஞர்கள் அவையம் - விக்கிப்பீடியா குறித்த கருத்துகள் வேண்டல்

இன்றையத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தமிழ் மொழி மற்றும் அதன் சிறப்புகளை அனைத்துத் துறைகளிலும் உலக அளவில் கொண்டு செல்லும் வகையில், வல்லுநர்களின் கருத்துகளைப் பெற்று, அதனைத் திட்டங்களாக நிறைவேற்ற உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலம் அறிஞர்கள் அவையம் எனும் திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பெற்று செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் வாயிலாக, 1. இலக்கியவியல், 2. இலக்கணவியல், 3. அகராதியியல், 4. திருக்குறள், 5. மொழியியல், 6. மானிடவியல் - பண்பாட்டியல், 7. தொல்லியல் - நாணயவியல் - குறியீட்டியல், 8. சமூகவியல் - வரலாற்றியல், 9. நாட்டுப்புறவியல், 10. சுவடியியல்-கல்வெட்டியல்-பதிப்பியல், 11. ஒப்பிலக்கியவியல் - திறனாய்வியல் - ஆய்வியல் அணுகுமுறைகள், 12. பயன்பாட்டுத் தமிழியல் எனும் 12 பிரிவுகளின் கீழ் வல்லுநர்கள் கூட்டங்களை நடத்தி, வல்லுநர்களின் கருத்துகள் பெறுவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை அகராதியியல், இலக்கியவியல் குறித்த வல்லுநர்கள் கூட்டம் நடத்தப் பெற்றிருக்கிறது. இம்மாதம் (சூலை0 இலக்கணவியல் குறித்த வல்லுநர்கள் கூட்டம் வருகிற சூலை 10 அன்று நடைபெறவிருக்கிறது. வருகிற ஆகஸ்ட் மாதத்தில் ‘பயன்பாட்டுத் தமிழியல்’ எனும் தலைப்பில் கணினி, இணையம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அறிவியல் தலைப்புகளிலான வல்லுநர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த வல்லுநர் கூட்டத்தில் ஒருவராக நான் பங்கேற்க இருக்கிறேன். இக்கூட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா மற்றும் விக்கிப்பீடியா சகோதரத் திட்டங்கள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். தமிழ் விக்கிப்பீடியா மற்றும் விக்கிப்பீடியா சகோதரத் திட்டங்களில் இனி என்ன செய்யலாம்? எதனைச் செய்யலாம்? எப்படிச் செய்யலாம்? என்பதுடன் அதனைச் செயல்படுத்திட தமிழ்நாடு அரசிடமிருந்து எவ்வகையான ஒத்துழைப்பினைக் கோரலாம் என்பது குறித்த கருத்துகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.

கூட்டத்தில் பரிந்துரைக்க வேண்டிய கருத்துகளை எழுத்து வடிவில் முன்பே பரிந்துரைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதால், தங்களுடைய கருத்துகளை சூலை 18 ஆம் நாளுக்கு முன்பாக, இங்கு பதிவு செய்திட வேண்டுகிறேன்.

--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 02:07, 6 சூலை 2025 (UTC)Reply

தமிழ் விக்கிப்பீடியா 22 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்

தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு வணக்கம். இவ்வாண்டின் செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 22-ஆவது பிறந்தநாள் அமைகிறது. 22 ஆண்டுகள் நிறைவுபெறுவதைக் கொண்டாடும் வகையில் சில நிகழ்வுகளை முன்னெடுக்க பரிந்துரைத்துள்ளேன். விவரங்களுக்கு, காண்க: தமிழ் விக்கிப்பீடியா 22 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்.

பயனர்கள் தமது கருத்துகளை விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா 22 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம் எனும் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கூடுதலாக வேறு நிகழ்வுகள் நடத்தும் திட்டம் இருப்பின் திட்டப் பக்கத்தில் குறிப்பிடலாம். நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:32, 6 சூலை 2025 (UTC)Reply

கருத்து

  • முன்னாள் பல்லவ மன்னர்கள் முதலிய ஆட்சியாளர்களை, தமிழ் விக்கிப்பீடியாவில் 'அவன்', 'இவன்' என்று பொருள்படும்படி கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. மரியாதைச் சொற்களைப் பயன்படுத்தலாமே?

பொதுஉதவி (பேச்சு) 09:29, 19 சூலை 2025 (UTC)Reply

அவர், இவர் என்ற மரியாதைச் சொற்களைப் பயன்படுத்தி அவற்றைத் திருத்திவிடலாம் கு. அருளரசன் (பேச்சு) 09:36, 19 சூலை 2025 (UTC)Reply
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya