விக்கிப்பீடியா பேச்சு:தள அறிவிப்புஇது மிகச்சிறந்ததொரு திட்டம் சிறீகாந்த். இது பெரிய மாற்ற்த்தை ஏற்படுத்தும். --சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 15:13, 11 மே 2011 (UTC)
போன்றவை முக்கியத்துவம் குறைந்தவையே. இவ்வாறு முக்கியத்துவம் குறைந்த தகவல்களை இட்டால், விளம்பரங்களைக் கண்டும் காணாமல் விடுவது போல், இந்தத் தள அறிவிப்பையும் கவனிக்காமல் விடக்கூடும். சிம்மி வேல்சு படம் இட்ட நன்கொடை வேண்டல்கள் நல்ல வரவேற்பைப் பெறுவது போல், தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களின் படங்களுடன் கூடிய பங்களிப்பு வேண்டல்களை வெளியிடலாம். எடுத்துக்காட்டுக்கு: "மயூரநாதன், இலங்கையைச் சேர்ந்த ஒரு கட்டிடக் கலைஞர். தனது ஓய்வு நேரத்தில் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுகிறார். நீங்களும் எழுதலாமே?" "செங்கைப் பொதுவன், ஒரு மூத்த தமிழ்ப் புலவர். தமிழ் இலக்கியம் குறித்த கட்டுரைகளைத் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?" சூர்யப்பிரகாசு, ஒரு பொறியியல் கல்லூரி மாணவர். தமிழார்வம் மிகுந்த இவர், தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுகிறார். நீங்களும் எழுதலாமே?" இதில், நீங்களும் எழுதலாமே? என்பது ஒரு அறிமுகப்பக்கத்துக்கு எடுத்துச் செல்லும். ஒவ்வொரு பங்களிப்பாளருக்கும் தனித்தனிப் பக்கங்கள் கூட வைக்கலாம். இதில் அவர்கள் எப்படி பங்களிக்கிறார்கள், ஏன் பங்களிக்க முனைகிறார்கள், இதனால் அவர்கள் பெற்ற நன்மை என்ன என்பதை வலியுறுத்தலாம். அனைத்து விளம்பரங்களிலுமே ஒரு மனிதக்கூறு (human element) தேவைப்படுகிறது. இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவை மற்றும் ஒரு தளமாகப் பார்க்காமல் அதன் பின்னணியில் உள்ள உழைப்பை உணர்ந்து இன்னும் பலரும் பங்களிக்க முன்வரலாம் என்று நினைக்கிறேன். இதில் உள்ள ஒரே தயக்கம் என்னவென்றால், விக்கிப்பீடியர்களை விளம்பரப்படுத்துவதாக விமர்சனம் வரக்கூடாது. சிம்மியின் படத்துக்கும் இவ்வாறு விமர்சனம் வந்தது. பிறகு சூ கார்டனர் உள்ளிட்ட பிறரது படங்கள் இடம்பெற்ற விளம்பரங்களும் வந்தன என்று நினைக்கிறேன். --இரவி 18:37, 11 மே 2011 (UTC)
--சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 05:44, 14 மே 2011 (UTC) புதிய தள அறிவிப்புகள்ஆலமரத்தடியிலிருந்து சிறீக்காந்தும் நானும் சில புதிய தள அறிவிப்புகளை முயன்று வருகிறோம். புகுபதியாத பயனர்களுக்கான அறிவிப்புகளை மீடியாவிக்கி:Anonnotice பக்கத்தில் இடலாம். தற்போது, அவர்களை பயனர் கணக்கு உருவாக்கத் தூண்டும் அறிவிப்பை இட்டுள்ளோம். http://en.wikipedia.org/wiki/Wikipedia:Signup போன்ற ஒரு பக்கத்தைத் தமிழில் உருவாக்கினால், அதனை இந்த அறிவிப்பில் சேர்க்கலாம். எல்லா வாசகர்களும் உடனே பங்களிப்பாளர்கள் ஆவார்கள் என்று எதிர்ப்பார்க்க முடியாது. எனவே, தொகுப்பது குறித்த சாதகங்களை மட்டும் முன்னிறுத்துவதைத் தவிர்க்கலாம். புகுபதிந்த வாசகர்களுக்கு கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட பக்கங்கள் தெரியும் என்றும், மற்றவர்களுக்கு இடைமாற்றில் இருந்து சற்றே பழைய உள்ளடக்கம் வழங்கப்படும் என்றும் சில ஆண்டுகள் முன்பு படித்தேன். இந்த நிலை தொடருமானால், இதனை வலியுறுத்தி பயனர் கணக்கு உருவாக்கச் சொல்லலாம். மீடியாவிக்கி:Sitenotice பக்கத்தில் தற்போது சுழலும் இரட்டை அறிவிப்புகளை இட்டுள்ளோம். சில நிமிட இடைவெளிகளில் வெவ்வேறு பக்கங்களைப் பார்த்து இவை வேலை செய்கின்றனவா என்று தெரியப்படுத்துங்கள். இது நன்றாகச் செயல்படுமானால், விக்கிப்பீடியா பேச்சு:தள அறிவிப்பு பக்கத்தில் உள்ளபடி சில பங்களிப்பாளர்களை எடுத்துக்காட்டுகளாகத் தந்து புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்கும் செய்திகளை இட வேண்டும். மாணவர், இளையவர், மூத்தவர்கள், பெண்கள், பன்னாட்டவர்கள், பல துறையினர் என்று ஏற்கனவே உள்ள தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களின் பன்முகத்தன்மையை முன்வைத்து அதே போன்ற பின்புலம் உள்ள புதிய பங்களிப்பாளர்களைப் பெற முடிகிறதா எனப் பார்க்கலாம். இதற்கு, விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் இருந்து ஓரிரு வரி தனிப்பட்ட அறிமுகங்கள், சிறிய அளவிலான புகைப்படங்கள் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, தயவு செய்து, இந்தத் திட்டம் குறித்து ஏதேனும் மறுப்பு, மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும். என்ன வகையான வாசகங்களைப் பயன்படுத்தினால் கூடுதல் ஈர்ப்பு இருக்கும் என்றும் தெரியப்படுத்தவும். "நீங்களும் எழுதலாமே" என்பதை ஒரு இணைப்பாக வைத்து இலகுவான புதுப்பயனர் வழிகாட்டும் பக்கத்துக்கு இட்டுச் செல்ல வேண்டும். --இரவி 10:02, 4 சூலை 2011 (UTC)
நிறம் மாற்றலாம். சிம்மியின் நன்கொடை வேண்டல்கள் போல் அழகிய படிமங்களாகக் கூட உருவாக்கலாம். உதவி தேவை :) --இரவி 12:31, 4 சூலை 2011 (UTC) சூரியாவின் ஆலோசனைக்கு ஏற்ப மஞ்சக் காமாலை நிறம் மாற்றப்பட்டுள்ளது :) .messagebox.site-notice என்ற புதிய வகை உருவாக்கப்பட்டு #E0EEF7 நிறம் அளிக்கப்பட்டுள்ளது. மாற்று நிறங்களைப் பரிந்துரைத்தால் உரிய மாற்றங்களை mediawiki:common.cssல் மாற்றலாம். உதவிய சிறீக்காந்துக்கு நன்றி :) --இரவி 12:40, 8 சூலை 2011 (UTC)
ஓ! நான் உதவிப் பக்கங்களில் தேடிப் பார்த்த போது இந்தப் பக்கம் ஏற்கனவே இருப்பதைச் சரியாகக் கவனிக்கவில்லை. --இரவி 16:44, 4 சூலை 2011 (UTC)
அனைவரின் கருத்துகளுக்கும் நன்றி. இவற்றுக்கு ஏற்ப பல்வேறு நுட்ப ஆய்வுகளைச் செய்வதில் சிறீக்காந்த் ஈடுபட்டு வருகிறார். சோதிப்பதிலும் மீடியாவிக்கிப் பக்கங்களில் இடுவதிலும் நான் உதவி வருகிறேன். நேற்று, புகுபதியாத பயனர்களைப் புகுபதியச் சொல்லி இட்ட அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இன்று மட்டும் இது வரை 23 பேர் கணக்கு தொடங்கி உள்ளனர். இந்திய மாலை நேரத்தில் கூடுதல் கணக்குகள் உருவாகின்றன. இந்த வேளையில் தான் நிறைய பேர் உலவுகிறார்களோ? தட்டச்சு உதவி, எழுத்துரு உதவி முதலிய உதவி இணைப்புகள் அறிவிப்பு இத்தனை நாள் புகுபதியாதவர்களுக்குத் தென்படாமல் இருந்துள்ளது :( சிறீக்காந்த் சுட்டியபடி, அவற்றை இப்பொழுது சேர்த்துள்ளோம். இறுவட்டு உருவாக்கம், நிருவாகிகள் தேர்தல் போன்றவற்றில் நெடுநாள் பயனர்களே ஈடுபடுவர் என்பதால் இது போன்ற தகவல்களை விக்கிப்பீடியா பெயர்வெளியில் மட்டும் இட்டால் போதுமானதாக இருக்கும். மற்ற பக்கங்களில் பங்களிப்புகளை ஈர்க்கும் வெவ்வேறு செய்திகளை இட்டால் புதிய பயனர்களுக்கு உதவியாக இருக்கும். எனவே, பெயர்வெளிக்கு ஏற்ப வெவ்வேறு தகவல்களை இடுவது எப்படி என்று அறிய முயன்று வருகிறோம். புதிய பயனர்களுக்கு எத்தகைய அறிவிப்புகளை வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும்? "விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதி உள்ளீர்களா? இன்றே உங்கள் முதல் கட்டுரையைத் தொடங்குங்கள்" என்பது போல் ஒரு அறிவிப்பு இட்டு கட்டுரை உருவாக்கப் பெட்டியுடன், எளிய வழிகாட்டையும் அளிக்கலாம் என்று கருதுகிறோம். மற்ற பயனுள்ள அறிவிப்பு ஆலோசனைகளையும் வரவேற்கிறோம். --இரவி 16:37, 5 சூலை 2011 (UTC)
இத்திட்டம் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளது. சில மணிநேர / மணித்துளி நேரங்களுக்கு ஒரு முறை சுழலும் அறிவிப்புகள் வரும். புதிய அறிமுகங்களை விக்கிப்பீடியா:தள அறிவிப்பு/பங்களிப்பாளர் அறிமுகங்கள் பக்கத்தில் சேர்க்கலாம். புதியவர்கள் தங்கள் முதல் கட்டுரையை எழுதத் தூண்டும் வண்ணமாக விக்கிப்பீடியா:முதல் கட்டுரை பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், தேவையான தகவலைச் சேர்க்கலாம். அதே வேளை, இது எளிமையாகவும் புதியவர்களை மிரளச் செய்வதாகவும் இல்லாமல் இருக்க வேண்டும் --இரவி 12:40, 8 சூலை 2011 (UTC)
உதவி அறிவிப்புகள்புதிய பயனர்களுக்கு விக்கி விதிகள், உதவிப் பக்கங்கள் ஆகியவற்றை அறிவிக்க:
தள அறிவிப்புகளுக்கு ஓய்வுகடந்த சில மாதங்களாகவே தள அறிவிப்பில் தொடர்ந்து பங்களிப்பாளர் அறிமுகம், பங்களிப்புத் தூண்டல்கள், நன்கொடை வேண்டல், விக்கிமீடியா அறிவிப்பு, ஊடகப் போட்டி அறிவிப்பு என ஏதாவது ஒரு பதாகையை இட்டு வருகிறோம். எனவே, மார்ச்சு 1, 20102 முதல் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு இதற்கு ஓய்வு கொடுக்கலாம் என நினைக்கிறேன். எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு பதாகை இருந்தால் நாட்போக்கில் வாசகர்கள் அதைக் கண்டும் காணாமல் படிக்கும் நிலைக்கு ஆளாவர். இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த தள அறிவிப்பின் விளைவுகளைச் சரியாக அளப்பதற்கான நுட்பத்தையும் மேம்பட்ட அறிவிப்புகளுக்கான வாய்ப்புகளையும் ஆயலாம். தமிழ் விக்கிமீடியாவின் மற்ற திட்டங்களின் தள அறிவிப்புகளில் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவுக்கான பங்களிப்புத் தூண்டல்களை இடுவதற்கான ஒப்புதல்களைப் பெற்று வருகிறேன். எனவே, தள அறிவிப்பின் மூலமான புதுப் பங்களிப்பாளர் வரத்து ஓரளவு குறையாமல் பார்த்துக் கொள்ளலாம். நன்றி--இரவி 10:19, 21 பெப்ரவரி 2012 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia