விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பர் கோயில்
சிவந்தியப்பர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் விக்கிரமசிங்கபுரம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2] இக்கோயிலின் மூலவர் சிவந்தியப்பர் மற்றும் தாயார் வழியடிமைகொண்ட நாயகி ஆவர். தலவிருட்சம் வில்வமரம் ஆகும். தீர்த்தம் வாணதீர்த்தம் (பாணதீர்த்தம்) என்றழைக்கப்படுகிறது.[3] கடல் மட்டத்திலிருந்து சுமார் 128 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சிவந்தியப்பர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 8°42′53″N 77°23′15″E / 8.7148°N 77.3876°E ஆகும். சிவந்தியப்பர், வழியடிமைகொண்ட நாயகி, தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், துர்க்கை, கன்னிமூல விநாயகர், வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகநயினார், நடராசர், சூரியன், சந்திரன், விநாயகர், சிவசுப்பிரமணியன், மங்கையர்க்கரசி, அதிகார நந்தி, சப்த கன்னியர், அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், நவக்கிரகங்கள், பைரவர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia