விக்கிரமசிங்கபுரம்
விக்கிரமசிங்கபுரம் அல்லது வி. கே. புரம் (ஆங்கிலம்:Vikramasingapuram), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதலாம் நிலை நகராட்சி ஆகும்.[3] இந்த ஊர் சிங்கை, பாபநாசம் எனும் சிறப்புப் பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இது அம்பாசமுத்திரம் வட்டத்தில் அமைந்துள்ளது. திருநெல்வேலியிலிருந்து 46 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. இந்த இடம் "பொதிகை மலை" என்று அழைக்கப்படும் மேற்கு தொடர்ச்சி மலையின் தெற்கு முனையில் உள்ளது. மேலும் இது தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள அகஸ்தியர் நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ளது. புவியியல்இவ்வூரின் அமைவிடம் 8°40′N 77°20′E / 8.67°N 77.33°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 200 மீட்டர் (656 அடி) உயரத்தில் இருக்கின்றது. மக்கள் வகைப்பாடுஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 48,101 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். விக்கிரமசிங்கபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. விக்கிரமசிங்கபுரம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். தொழில்இந்த நகரம் பச்சை நெல் வயல்களால் சூழப்பட்டுள்ளது. 1940க்கு முன்னர் இந்த பகுதியில் விவசாயமே முதன்மை வணிகமாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பெரும்பான்மையான மக்கள் மதுரா கோட்ஸில் பணிபுரிந்தனர், இது பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு பஞ்சாலை ஆகும். கோயில்கள்
பள்ளிகள்
கல்லூரிகள்
சிறப்புகள்
ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia