வேட்டைக்காரன் (1964 திரைப்படம்)
வேட்டைக்காரன் (Vettaikkaran (1964 film)) என்பது 1964 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] எம். எம். ஏ. சின்னப்பா தேவர் தயாரித்த இப்படத்தை எம். ஏ. திருமுகம் இயக்கினார். இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சாவித்திரி ஆகியோர் முதன்மை வேடங்களிலும், எம். ஆர். ராதா, எம். என். நம்பியார், எஸ். ஏ. அசோகன், தாய் நாகேஷ், எம். வி. ராஜம்மா, மனோரமா, பேபி ஷகிலா ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். வேட்டையாடுவதில் ஆர்வம் கொண்ட ஒரு தோட்ட வேட்டைக்காரனையும், தனது செல்வத்திற்காக ஆசைப்படும் ஒரு கொள்ளைக்காரனையும் சுற்றி இக்கதை சுழல்கிறது. வேட்டைக்காரன் 1964 சனவரி 14, பொங்கல் நாளன்று வெளியானது. இந்தத் திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது, திரையரங்குகளில் 25 வாரங்கள் ஓடியது. கதைபாபு (ம.கோ.ரா) ஒரு பணக்கார தோட்ட உரிமையாளர், அவர் தன் தாயுடன் (ராஜம்மா) வசித்துவருகிறார். அவர் ஒரு துணிச்சலான வேட்டைக்காரர். பாபு விலங்குகளைக் கொல்வதில் அவரது தாயிக்கு பிடிக்கவில்லை. பாபுவின் தோட்ட மேலாளரான மாயவன் (நம்பியார்) தீய என்னம் கொண்டவன். அவன் பாபுவின் செல்வத்தின் மீது ஆசைப்படுகிறான். பாபு வழக்கம் போல் காடுகளில் சுற்றித் திரியும் போது லதா என்ற பெண்ணை சந்திக்கிறார். இருவரும் பின்னர் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். பின்னர் லதாவுக்கு ராஜா என்னும் மகன் பிறக்கிறான். லதாவுக்கு காசநோய் இருப்பது கண்டறியப்படுகிறது. அவள் முழுமையாக குணமடையும் வரை தன் குழந்தையை வளர்க்க முடியாததால் அவள் மனம் வருந்துகிறாள். நோய்வாய்ப்பட்ட மனைவி மற்றும் குழந்தை என இருவரையும் கவனித்துக்கொண்டு வருகிறார். இதன் காரணமாக, ராஜா தன் தந்தையுடன் ஆழ்ந்த பாசப் பிணைப்பை வளர்த்துக் கொள்கிறான். ஆனால் தன் தாயுடன் ஒட்ட மறுக்கிறான். வேட்டையாடுவதில் தன் தந்தைக்கு உள்ள ஆர்வத்தைப் போல அவனும் ஆர்வம் கொள்கிறான். இதை லதா ஏற்கவில்லை. இதற்கிடையில், மாயவன் பாபுவின் சொத்துக்களையும், லதாவையும் அபகரிக்க திட்டமிடுகிறான். ராஜாவையும், லதாவையும் காட்டுக்குள் ஏமாற்றி கடத்திச் சென்று தோட்டத்தின் ஆவணங்களைக் கேட்டு மிரட்டுகிறான். மாயவனிடம் இருந்து தன் குடும்பத்தை பாபு எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதையாகும். நடிப்பு
தயாரிப்புவேட்டைக்காரன் படத்தை எம். ஏ. திருமுகம் இயக்கினார். தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தின் பதாகையின் கீழ் சாண்டோவ் எம். எம். ஏ. சின்னப்ப தேவர் தயாரித்தார்.[6] படப்பிடிப்புக்காக உண்மையான ஒரு சிறுத்தை கொண்டு வரப்பட்டது.[7] இசைஇந்தப் படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார். பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதினார்.[8][9] சச்சி ஸ்ரீ காந்தாவின் கூற்றுப்படி, "உன்னை அறிந்தால்" பாடலின் வரிகள், "உன்னை அறிந்தால் - நீ உன்னை அறிந்தால், உலகத்தில் போராடலாம்" பாடல் வரிகள் மூலம் "எம்.ஜி.ஆரின் சுயபுகழ் பாடலாக மாறியது, அவரது 'நல்ல பண்புகள்' வாழும் கடவுளுக்கு இணையாக்குகிறது" மற்றும் கண்ணதாசன் "ஆரம்ப வரிகளில் 'உன்னையே நீ அறிந்துகொள்' என்ற சாக்ரடிசின் ஞானத்தை இணைத்துள்ளார்" என்றார்.[10]
வெளியீடுவேட்டைக்காரன் படம் 1964 சனவரி 14, பொங்கல் நாளன்று வெளியானது.[1][11] படத்தை ராமச்சந்திரனின் எம்ஜிஆர் பிக்சர்ஸால் விநியோகித்தது.[12] படத்தை விளம்பரப்படுத்த, சென்னையின் சித்ரா திரையரங்கம் பார்வையாளர்களை வரவேற்க காடுபோன்ற செட் அமைத்தது. மேலும் நடந்த ஆலோசனைக்குப் பிறகு, அவர்கள் திரையரங்க வளாகத்திற்குள் கூண்டில் அடைக்கப்பட்ட ஒரு புலியையும் கொண்டு வந்து வைத்தனர்.[13][14] பொங்கல் வெளியீடான கர்ணனுடன் போட்டியை எதிர்கொண்ட போதிலும்,[15] படம் திரையரங்குகளில் 25 வாரங்கள் ஓடியது, வணிகரீதியாக வெற்றி பெற்றது.[5] இது தெலுங்கு மொழியில் இண்டி தொங்கா என்று பெயரில் 1964 செப்டம்பர் 4 அன்று வெளியானது.[16]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia