வேலணை
வேலணை (Velanai) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள வேலணைத்தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். பெயர் வரலாறுவேலணை என அழைக்கப்பட என்ன காரணம் என்று தெளிவான பதிவுகள் இல்லாவிடினும் சில பொதுவான கருத்துக்கள் நிலவுகின்றது[1]. வேல் + அணை = வேலணை; "வேல் அணைந்த இடம்" என்றும் முருக வழிபாடு இந்தத் கிராம மக்களிடம் முதன்மை பெற்றிருந்தனால் “வேலன் இணைந்த இடம்” என்றும் பின்னாட்களில் மருவி வேலணை எனவும், பண்டை நாளில் வேலன் என்ற தலைவனின் பொறுப்பில் நிர்வகிக்கப்பட்டு வந்தமையினால் வேலணை எனப் பெயர் பெற்றது என்றும் சில பொதுவான கருத்துக்கள் நிலவுகின்றது.[1][2]. மேலும் கடம்பன் என்ற கடற்கொள்ளையனை அடக்குவதற்காக வேலன் என்ற சங்ககால தென்னாட்டு இளவரசன் வந்து தரையிறங்கிய இடம் வேலணை என்றும் “வெண்ணிலவுப் பெண்ணரசி” என்ற நாவலில் மீ.ப.சோமு குறிப்பிட்டுள்ளார்.[3] புவியியல் அமைவிடம்![]() யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குத் தென்மேற்காக உள்ள வேலணைத்தீவில் வடக்கில் சரவணைக்கும் கிழக்கில் மண்கும்பானுக்கும் இடைப்பட்ட ஏறத்தாழ 15சதுரகிமீ பரப்பளவு கொண்ட ஒரு பகுதியே வேலணைக் கிராமம். வானிலையும் காலநிலையும்வானிலையும் காலநிலையும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிலைகளுடன் ஒத்துக் காணப்படினும் இங்கு வெப்பநிலை சற்று உயர்வாகவும் சோளக வாடைக்காற்றின் தாக்கம் அதிகமாகவும் மழைவீழ்ச்சி, பனித்தாக்கம் சற்றுக் குறைவாகவும் உள்ளது. சராசரி வெப்பநிலை 31OC யாகவும் மார்கழி-தை மாதங்களில் 29-30OC யாகவும் இருக்கும். மேலும் இங்கு கடலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பகல் இரவு வெப்பநிலை வேறுபாடு மிகவும் குறைவாக இருக்கின்றது. புரட்டாதி பிற்பகுதியிலிருந்து மார்கழி வரை கூடிய மழைவீழ்ச்சி கிடைக்கின்றது. சராசரி மழைவீழ்ச்சி 35-50மிமி இடைப்பட்டதாகும். வரலாற்றுக் குறிப்புகள்வரலாற்று ரீதியாக வேலணைக் கிராமத்தின் குடிசன வளர்ச்சியினை நோக்கின் இந்தக் கிராமம் யாழ்ப்பாண இராச்சிய காலத்திலேயே முக்கியம் பெற்று விளங்கியது. போர்த்துக்கேயர் காலத்தில் இக்கிராமத்திற்கு அருகாமையில் அமைந்திருந்த ஊர்காவற்றுறை, கரம்பொன், நாரந்தனை போன்ற கிராமங்களில் வாழ்ந்த மக்கள் பலர் கத்தோலிக்க மதத்தினைத் தழுவ, வேலணை மக்கள் சைவ சமயத்தவர்களாக விளங்கினர். பின்னர் வந்த ஒல்லாந்தர் காலத்தில் இந்தக் கிராமத்தில் மாற்றங்கள் நிகழ்ந்ததாக வரலாறு இல்லை. பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் 1860-1875 காலப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டை தாக்கிய வாந்திபேதி நோயினால் வேலணைக் கிராமத்தில் பலரும் பாதிக்கப்பட்டு இருந்தனர். மேலும் தமிழர்கள் வழிபட்டுவரும் கோவில்களிலே மிகப் புராதனமானவற்றில் வேலணை கிழக்கில் உள்ள வேலணை, பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் கோவிலும் ஒன்று எனக் கருதப்படுகிறது. ஒல்லாந்தர் காலத்துப் பழமையான பத்திரங்களிலிருந்து தொகுக்கப்பட்டு ஆங்கிலேயரினால் சேமித்துவைத்திருக்கும் அரசாங்கக் கச்சேரிப் பதிவேடுகளிலே இந்தக் கோவில் பற்றிய குறிப்புகள் உள்ளது. மேலும் பண்டுதொட்டு இந்தக் கோவிலிலே மிருகபலி இடப்பட்டு வழிபடும் வழக்கம் இருந்தாக அரசாங்கக் கச்சேரிப் பதிவேடுகள் குறிப்பிடுகின்றன[2]. பொருளாதாரம்வேலணைக் கிராமத்தின் பொருளாதாரத்தில் விவசாயம், மீன்பிடி, பனைசார் தொழில் மற்றும் கைவினைத் தொழில்கள் பல நூற்றாண்டுகால முக்கியத்துவம் பெறுகின்றது. பலதுறைப் பொருளாதாரம் இருந்தும் இங்கு விவசாயம் முக்கியம் பெறுகின்றது. அண்மைய தசாப்தங்களில் புகையிலைப் பயிர்ச்செய்கை வேலணைக் கிராமத்தின் மொத்த உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றது. வேலணையில் புகழ் பூத்தவர்கள்
கோயில்கள்/தேவாலயங்கள்/பள்ளிவாசல்கள்![]() அவற்றுள் சில:[4]
துணை நூல்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia