வேலிபருத்தி

Trellis-vine
In லிம்போபோ, South Africa
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
P. daemia
இருசொற் பெயரீடு
Pergularia daemia
(Forssk.) Chiov.
வேறு பெயர்கள்
  • P. daemia (Forssk.) Blatt. & McCann
  • P. extensa (Jacq.) N.E.Br.
  • Asclepias daemia Forssk.
  • Daemia extensa (Jacq.) R.Br. ex Schult.

வேலிபருத்தி என்பது அசகிலோபியாடோடியா குடும்பத்தை சார்ந்த ஏறுகொடி தாவரம் ஆகும்.[1] இத்தாவரத்தைக் கொண்டு பல நோய்களுக்கான களிம்புகள் பழங்காலம் முதல் தயாரிக்கப்பட்டு வருகின்றது.[1]

பெயர்கள்

வேலிப்பருத்திக்கு உத்தமமாகாணி, உத்தமக்கன்னிகை, அச்சாணி மூலி, உத்தமதாளி போன்ற வேறு பெயர்களாலும் உண்டு. இதன் காய் முற்றி வெடிக்கும்போது, உள்ளிருக்கும் இதன் ‘பஞ்சு சூழ் விதைகள்’ காற்றில் மிதந்து வேலியோரங்களில் விழுந்து கொடியாகப் படரும். இதன் காரணமாக இதற்கு ‘வேலிப்பருத்தி’ எனும் பெயர் ஏற்பட்டிருக்கிறது.

விளக்கம்

வேலிப்பருத்தியானது இதய வடிவ இலைகளைக் கொண்டுள்ளன. இந்த இலைகளைத் தொடும்போது மென்மையான உணர்வைக் கொடுக்கும். இதன் இலைக் காம்பைக் கிள்ளினால் பால் வெளியேறும். இதில் சிறு முட்களைக் கொண்ட காய்கள் உண்டு. இத்தாவரத்தில் டானின்கள் (Tannins), ஃப்ளேவனாய்ட்கள் (Flavanoids), புரதங்கள் போன்ற நலக்கூறுகள் உள்ளன.[2]

வரம்பு மற்றும் வாழ்விடம்

இது மலாய் தீபகற்பத்தில் இருந்து மியான்மர், இந்தியா, இலங்கை, பாக்கித்தான், ஆப்கானித்தான் வழியாக அராபியத் தீபகற்பம் மற்றும் எகிப்திலிருந்து நடு மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவரை பரவியுள்ளது.[3] இது பெரும்பாலும் சாலையோரங்களில், வனப்பகுதி அல்லது கடலோர வனப்பகுதிகளில் காணப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Bhaskar, V.H.; Balakrishnan, N. (Oct–Dec 2009). "Veliparuthi (Pergularia daemia (Forsk.) Chiov.) – As a phytomedicine: A review". International Journal of PharmTech Research 1 (4): 305-1313. பன்னாட்டுத் தர தொடர் எண்:0974-4304. http://sphinxsai.com/PTVOL4/pdf_vol4/PT=55%20%281305-1313%29.pdf. பார்த்த நாள்: 27 March 2013. 
  2. டாக்டர் வி.விக்ரம் குமார் (12 சனவரி 2019). "வாதம் போக்கும் உத்தாமணி". கட்டுரை. இந்து தமிழ். Retrieved 13 சனவரி 2019.
  3. "Pergularia daemia (Forssk.) Chiov". Flora of Pakistan. efloras.org. Retrieved 26 March 2013.
  4. Hyde, M.; et al. "Pergularia daemia (Forssk.) Chiov". Flora of Zimbabwe. Retrieved 15 March 2013.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya