அகிலன் (நடிகர்)
அகிலன் (5 செப்டம்பர் 1995) என்பவர் தமிழ்நாட்டு மாதிரி நடிகர், குறும்பட நடிகர் மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார்.[1][2] ஆரம்ப வாழ்க்கைஅகிலன் 1995 செப்டம்பர் 5 ஆம் தேதி தமிழ்நாட்டில் சென்னையில் திமுகவில் அரசியல்வாதியாக இருக்கும் புஷ்பராஜுக்கு மகனாகப் பிறந்தார். சென்னையின் செயின்ட் மேரி பாய்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் இடைநிலைக் கல்வியை முடித்தார். சென்னை எஸ்.ஏ. பொறியியல் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், பின்னர் அகிலன் சென்னையில் உள்ள கூத்துப் பட்டறை என்ற நடிப்புப் பள்ளியில் நடிப்பு கலை பற்றி படித்தார். நடிப்புத்துறை2015 இல் ஜி. வி. பிரகாஷ் குமார் நடித்த திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இறைவி (திரைப்படம்) (2016), பியார் பிரேமா காதல் (2018) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சென்னையில் ஒரு மழைக்காலம், அடி பெண்ணே போன்ற சில குறும் படங்களிலும் நடித்துள்ளார். 2019இல் விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா என்ற தொடரில் அகிலன் என்ற கதாபாத்திரத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடிக்கின்றார். தொடர்கள்
திரைப்படம்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia