பாரதி கண்ணம்மா என்பது விஜய் தொலைக்காட்சியில் பெப்ரவரி 25, 2019 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் மலையாளம் மொழித் தொடரான 'கருத்தமுத்து' என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும்.[1][2]
இந்த தொடரில் பாரதியாக மேயாத மான் என்ற படத்தில் நடித்த அருண் பிரசாத் நடிக்கிறார். ரோஷினி ஹரிப்ரியன் / வினுஷா தேவி கண்ணம்மாவாகவும், நடிகை சுவீட்டி / அருள்ஜோதி ஆரோக்கியராஜ் அஞ்சலியாகவும் நடித்துள்ளனர். இந்த தொடரின் இறுதி அத்தியாயம்6 ஆகத்து 2023 அன்று ஒளிபரப்பப்பட்டு, 1,169 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடரின் இரண்டாம் பாகம் கண்ணம்மா 2 பேரில் 6 பிப்ரவரி 2023 முதல் 8 ஆகஸ்ட் 2023 வரை ஒளிபரப்பானது.
கதைச்சுருக்கம்
கண்ணம்மாவும் அஞ்சலியும் இருவரும் மாற்றாந்தாய் சகோதரிகள். கண்ணம்மா கருத்த நிறம் கொண்டவள். அஞ்சலி வெள்ளை நிறம் கொண்டவள்.
கண்ணம்மாவுக்கு நல்ல உள்ளம் கொண்ட பாரதி என்ற கணவன் அமைகிறான். அதன் பின் அவள் வாழ்க்கையும் பாரதி என்ற கணவனின் வாழ்க்கையும் எவ்வாறு பயணிக்கிறது இவர்களின் வாழ்வில் அஞ்சலி, வெண்பா ஆகியோரால் வரவிருக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து, இந்த கதை நகர்கின்றது.
இந்த தொடரின் பகுதிகள் ஹாட் ஸ்டார் என்ற இணைய மூலமாகவும் பார்க்க முடியும்.
சிறப்புத் தொடர்
இந்த தொடரின் கதைமாந்தர்கள் ஐந்து நாட்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் தோன்றும்படி கதை அமைக்கப்பட்டது. பாரதி, கண்ணம்மா, அகிலன், அஞ்சலி ஆகிய கதாப்பாத்திரங்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினருடன் இக்காட்சிகளில் இடம்பெற்றனர்.