இறைவி (திரைப்படம்)
இறைவி 2016 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்திலும் சி. வி. குமாரின் தயாரிப்பிலும்[2] வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அஞ்சலி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.[3] கதைமூன்று ஆண்கள் மற்றும் பெண்கள் வாழ்க்கையை மையமாக கொண்ட திரைப்படம்: போராடும் மற்றும் குடிப்பழக்கம் உள்ள திரைப்பட இயக்குநர் அருள் (எஸ். ஜே. சூர்யா) மற்றும் அவரது மனைவி யாழினி (கமலினி முகர்ஜி); அருளின் சிறந்த நண்பர் மைக்கேல் (விஜய் சேதுபதி) மற்றும் அவரது மனைவி பொன்னி (அஞ்சலி); மற்றும் அருளின் தம்பி ஜெகன் (பாபி சிம்ஹா). பாத்திரங்கள்
பாடல்கள்மணி அமுதவன், முத்தமிழ், விவேக் ஆகியோரின் பாடல்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்ததோடு, அவரே பின்னணி இசையையும் வழங்கியுள்ளார். அனந்து, பிருந்தா, அந்தோனிதாசன், தீ, மீனாட்சி, சந்தோஷ் நாராயணன், எஸ். ஜே. சூரியா, ஆர். கே. சுந்தர் ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia