அசிகா
அசிகா அல்லது அஸ்கா (Asika or Aska) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கஞ்சாம் மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இது ஒடிசாவின் சர்க்கரை நகரம் என்று அழைக்கப்படுகிறது. அசிகா கஞ்சம் மாவட்டத்தின் முக்கிய வணிக மற்றும் போக்குவரத்து மையமாக உள்ளது. நிலவியல்அஸ்கா 19°36′N 84°39′E / 19.6°N 84.65°E இல் அமைந்துள்ளது. [2] இது சராசரியாக 30 மீட்டர் (98 அடி). உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரில் பிரம்மபூரிலிருந்து 40 கிமீ தொலைவிலும், பஞ்நகரில் இருந்து 35 கிமீ தொலைவிலும், ருசிகுல்யா மற்றும் பதாநதி (பாரா நதி) ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. அஸ்கா சர்க்கரை ஆலைஆசியாவின் முதல் சர்க்கரை ஆலை இங்குள்ள அசிகா சர்க்கரை ஆலை ஆகும். இது 1824 இல் நிறுவப்பட்டது. அசிகா கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் 35000 குடும்பங்களுக்கு மேல் வேலை செய்யும் ஒரு பெரிய அளவிலான தொழில் நிறுவனம் ஆகும். இது மிஞ்சின் சாகேப் என்பவரால் பிரித்தானியர் காலத்தில் கட்டப்பட்ட இந்தியாவின் மிகப் பழமையான ஆலைகளில் ஒன்றாகும். தமிழ்நாட்டின் கடலூர் அருகே நெல்லிக்குப்பம் என்ற இடத்தில் உள்ள தொழிற்சாலையுடன், பாரி அண்ட் கோ நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்த இந்தத் தொழிற்சாலையால் அசிகா நகரம் சர்க்கரை நகரம் என்று அழைக்கப்படுகிறது. 1848 ஆம் ஆண்டு பாரி அண்ட் கோ மெட்ராசால் அசிகா சுகர் ஒர்க்ஸ் அண்ட் டிஸ்டில்லரி லிமிடெட் என்ற பெயரில் வெல்ல ஆலை தொடங்கப்பட்டது. இது சரியான மேற்பார்வையின்மை மற்றும் பிற போக்குவரத்து இடையூறுகளால் பெரும் இழப்பைச் சந்தித்தது. அதன்பிறகு, பினி அண்ட் கோ நிறுவனத்தின் கணக்கெழுத்தரான ஃபிரெட்ரிக் ஜோஷெப் விவியன் மிஞ்சின் தொழிற்சாலையை வாங்கினார். பின்னர் செர்மனியில் இருந்து பெறப்பட்ட புதிய சர்க்கரை ஆலை தொழில்நுட்பத்துடன் 1856 இல் தொழிற்சாலையை வடிவமைத்து மீளக் கட்டினார். பண்பாட்டுத் தாக்கம்அஸ்காவில் வெள்ளை சர்கரை ஆலை வரும் முன்னர் இந்தியத் துணைக்கண்டத்தில் பழுப்பு நிறத்திலிருந்த நாட்டுச் சர்கரையையே மக்கள் பயன்படுத்தி வந்தனர். அஸ்காவில் இருந்து வந்த வெள்ளை சர்கரையை முதன் முதலில் பார்த்த மக்கள் அஸ்கா சர்கரை என அதை அழைத்தனர். காலப்போக்கில் அஸ்கா என்பது வெள்ளை சர்கரை என்பதை குறிக்கும் சொல்லாக மாறியது. இன்றும் தமிழ்நாட்டின் சல பகுதிகளிலும், இந்திய மொழிகள் பலவற்றிலும் அஸ்கா என்பது வெள்ளை சர்கரையை குறிப்பிடும் சொல்லாக உள்ளது.[3] மக்கள்தொகையியல்2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, [4] அசிகாவின் மக்கள் தொகை 21,428 ( பெர்காம்பூர் மற்றும் இஞ்சிலிகட்டுக்குப் அடுத்து கஞ்சம் மாவட்டத்தில் மக்கள்தொகை அடிப்படையில் மூன்றாவது பெரிய நகரம்) ஆகும். இதன் மக்கள் தொகையில் ஆண்கள் 52% , பெண்கள் 48% உள்ளனர். அசிகாவின் சராசரி கல்வியறிவு விகிதம் 85.76% ஆகும். இது தேசிய சராசரியான 72.87% ஐ விட கூடுதலாகும். கல்வியறிவு பெற்றவர்களில் 56% ஆண்களும், 44% பெண்களும் உள்ளனர். மக்கள் தொகையில் 12% பேர் 6 வயதுக்குட்பட்டவர்கள். கோயில்கள்
காலநிலையும், பிராந்திய அமைப்பும்இங்கு அதிகபட்ச கோடை வெப்பநிலை 34 °C ஆகும்; குறைந்தபட்ச குளிர்கால வெப்பநிலை 23 °C ஆகும். சராசரி தினசரி வெப்பநிலை 33 °C முதல் 38 °C வரை மாறுபடும். மே மாதம் வெப்பமான மாதம்; திசம்பர் மிகவும் குளிரானது. சராசரி ஆண்டு மழை 1250 மிமீ ஆகும். மேலும் இப்பகுதியில் சூலை முதல் அக்டோபர் வரை பருவமழை காலமாகும். அப்போது அடைமழையைப் பெறுகிறது.
கல்விபள்ளிகள்
கல்லூரி
வங்கிகள்
போக்குவரத்துசாலைஅசிகா தேசிய நெடுஞ்சாலை 59 (இந்தியா) (காரியார் - பிரம்மபூர்) மற்றும் தேசிய நெடுஞ்சாலை 157 (இந்தியா) (புருனகடாக் - அசிகா) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகள் அசிகாவை ஒடிசாவின் பிற நகரங்களுடன் இணைக்கிறது. தொடருந்து
வானூர்தி
துறைமுகம்குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia