அசுரகுரு
அசுரகுரு (Asuraguru) என்பது 2020ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும். ஜே. எஸ். பி பிலிம் ஸ்டுடியோஸ் என்ற பதாகையின் கீழ் ஜே. எஸ். பி. சதீஷ் தயாரித்த இப்படத்தை, ஏ. ராஜ்தீப் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கான உரையாடலை கபிலன் வைரமுத்து மற்றும் சந்துரு மாணிக்கவாசகம் ஆகியோர் எழுதியுள்ளனர். படத்தில் விக்ரம் பிரபு, மகிமா நம்பியார் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்க, சுப்பாராஜூ, யோகி பாபு, நாகினீது ஆகியோர் பிற பாத்திரங்களில் நடித்துள்ளனர்.[3] இந்த படம் 13 மார்ச் 2020 அன்று வெளியானது.[4] கதைச்சுருக்கம்தனியார் அஞ்சல் ஊழியராக தன்னைக் காட்டிக் கொள்ளும் சக்தி (விக்ரம் பிரபு) பெருமளவு பணத்தைக் கொள்ளையடிப்பவராக உள்ளார். இதை தொடர் கொள்ளையாக செய்துவருகிறார். இந்த கொள்ளைகளை கண்டறிய காவல் அதிகாரி மாணிவாசகம் தீவிரமாக செயல்படுகிறார். அதேபோல தனது அவாலா பணத்தைக் கொள்ளையடித்தவனை கண்டுபிடிக்க தனியார் துப்பறிவாளரான தியாவை (மகிமா நம்பியார்) நிழல் உலகத் தலைவரான ஜமாலுதீன் (நாகிநீடு) அணுகுகிறான். சக்தி எதற்காக இந்த கொள்ளைகளில் ஈடுபடுகிறான். அவனை கண்டுபிடிக்க முடிந்ததா என்பதே கதையின் பிற்பகுதி ஆகும்.[5][6] நடிகர்கள்
தயாரிப்புஇதற்கு முன் இயக்குநர் மோகன் ராஜாவிடம் பணியாற்றிய ஏ. ராஜ்தீப் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். விக்ரம் பிரபு தனது துப்பாக்கி முனை படப்பிடிப்பில் வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது இந்த படத்தில் ஒப்பந்தமிட்டார். இப்படத்தின் முதன்மைப் படப்பிடிப்பு 15 பிப்ரவரி 2018 துவங்கியது. படப்பிடிப்பானது முக்கியமாக சென்னை, உடுமலைப்பேட்டை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது.[7][8][9][10] இசைஇப்படதிற்கான இசையை கணேஷ் ராகவேந்திரா அமைத்தார். பாடல் வரிகளை கபிலன் வைரமுத்து, கணேஷ் ராகவேந்திரா ஆகியோர் எழுதினர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia