சைமன் கே. கிங்
சைமன் கே. கிங் (Simon K. King) என்பவர் ஓர் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் சசியின் ஐந்து ஐந்து ஐந்து (2013) படத்தின் வழியாக அறிமுகமானார். மேலும் சத்யா திரைப்படத்தின் "யவ்வானா" என்ற பாடலுக்காகவும், கொலைகாரன் படத்தின் பின்னணி இசைக்காகவும் நன்கு அறியப்பட்டார். தொழில்சைமன் கே. கிங் மின் பொறியியலில் பட்டப்படிப்பை மேற்கொண்டபோது கீபோர்டு புரோகிராமராக தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் இவர் இசையமைத்தலில் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். அப்போதிருந்து இவர் விளம்பரங்களுக்கான இசையமைக்கத் தொடங்கினார். அப்போது இவர் பல்வேறு வணிகப் பொருட்களுக்காக 300 க்கும் மேற்பட்ட விளம்பர இசையமைப்புகளில் பணிபுரிந்தார். அதே நேரத்தில் இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரைப்படத் துறைகளில் பல இசை இயக்குநர்களுக்கு சுயாதின இசை தயாரிப்பாளராக பணியாற்றினார்.[1] இசைத்தொகுப்பு தரவுத்திரட்டு
குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia