அடிடாஸ் டெல்ஸ்டார் 18
அடிடாஸ் டெல்ஸ்டார் 18 (Adidas Telstar 18) என்பது 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிக்கான அலுவலகரீதியான காற்பந்து ஆகும். இது பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு பங்காளியும் உலகக்கோப்பை காற்பந்து 1970 முதல் கால்பந்து வினியோகம் செய்யும் அடிடாஸ் நிறுவனம் மூலம் வடிவமைக்கப்பட்டது. இது முன்னைய அடிடாஸ் டெல்ஸ்டார் உதைபந்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.[1] டெல்ஸ்டார் 18 மாஸ்கோவில் நவம்பர் 9, 2017 அன்று, 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் பொற்பந்து வெற்றிபெற்ற[2][3] லியோனல் மெஸ்ஸியினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.[4] டெல்ஸ்டார் மிச்தாகுழு நிலை ஆட்டங்கள் நிறைவுற்றதும், ஆட்டமிழப்பு நிலை போட்டிகளில் புதிய பந்து பயன்படுத்தப்படும். இதற்கு டெல்ஸ்டார் மிச்தா என்ற பெயரிடப்பட்டுள்ளது. மிச்தா ("Мечта") என்பது உருசிய மொழியில் கனவு அல்லது குறிக்கோள் எனப் பொருள்படும்.[5] உசாத்துணை
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia