அட்டவீரட்டானக் கோயில்கள்
அட்டவீரட்டானம் என்பது இறைவனின் வீரத் திருவிளையாடல்கள் இடம்பெற்ற எட்டுத் தலங்களைக் குறிப்பிடப் பயன்படும் சொல்லாடலாகும்.[1] சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர். பகைவர்களின் வீரத்தை அட்டு ஆன இடம் என்ற வகையிலும், தன் வீரத்தால் அட்டு ஆன இடம் என்ற வகையிலும் வீரட்டானம் என்னும் சொல் அமைந்தது. இவை எட்டுத் தலங்களாதலால் அட்ட வீரட்டானம் என்று அழைக்கப்படுகிறது.
வீரட்டானங்களின் பெருமைகளும்,அவற்றின் இருப்பிடமும்பிரமன், இயமன், அந்தகன், கயமுகன், தக்கன், சலந்தரன் மன்மதன், திரிபுர அசுரர்கள் ஆகிய எண்மரின் ஆணவத்தை அழித்த தலங்களாக, இவை எட்டும், தமிழ் மரபில் சொல்லப்படுகின்றன. திருக்கண்டியூர்![]() ஈசன், படைப்பின் முதல்வன் தானே என்று அகந்தையுற்றிருந்த பிரமனின் தலையைத் துண்டித்த திருத்தலம் இங்குள்ள திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் கோயில் ஆகும். தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருவையாறுக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது.இதன் வேறு பெயர் ஆதிவில்வாரண்யம் ஆகும்.
மூலவரின் பெயர்:பிரமசிர கண்டீஸ்வரர்.இந்த தலத்துக்கு ஸ்ரீகாலபைரவரை தரிசிக்க வேண்டுமென்ற வேட்கையோடு சென்று வழிபட்டால் மறுபிறவியில்லை; திருக்கோவலூர்உலகுயிரையெல்லாம் துன்புறுத்தி வந்த அந்தகன் எனும் அசுரனை, சக்கராயுதத்தால், ஈசன் அழித்த தலம் திருக்கோவலூர் வீரட்டானேசுவரர் கோவில் ஆகும். திருக்கோவிலூர் கோவல்நகர் வீரட்டம், தென்பெண்ணை நதிக்கரையோரத்தில் அமைந்திருக்கிறது. திரு அண்ணாமலைக்கு அருகில் உள்ளது. கருத்துறை அந்தகன் தன் போல் அசுரன்
மூலவரின் பெயர்:அந்தகாசுர சம்ஹார மூர்த்தி,மூலவளின் பெயர்:சிவானந்த வல்லி என்ற பெரிய நாயகி! திருவதிகைஈசன் முப்புரம் அழித்த திருத்தலம் திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் ஆகும். கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அமைந்திருக்கிறது.
மூலவர்:வீரட்டானேஸ்வரர் திருப்பறியலூர்![]() தக்கன் சிரங்கிள்ளி அவன் அகந்தை அடக்கிய தலம் திருப்பறியலூர் கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில் ஆகும். மாயவரம் என்ற மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் செல்லும் சாலையில் செம்பொன்னார் கோயில் என்ற ஊருக்கு வர வேண்டும். அங்கிருந்து பரசலூருக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று விசாரிக்க வேண்டும். திருப்பறியலூரின் உள்ளூர் பெயரே பரசலூர் ஆகும். மூலவரின் பெயர்: வீரட்டேஸ்வரர்; மூலவளின்பெயர்: இளங்கொம்பனையாள் திருவிற்குடி![]() சலந்தரன் எனும் அசுரனை அழித்த தலம் திருவிற்குடி வீரட்டானேசுவரர் கோயில். திருவாரூரிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் ஒரு யூ வடிவ சாலை வளைவு வரும்;அந்த வளைவைக் கடந்த உடனே விற்குடி என்ற சாலையோர வழிகாட்டி தெரியும்.அந்த வழிகாட்டியின் படி பயணித்தால் ஒரு சிறிய பாலம் தென்படும்;அந்த பாலத்தைக் கடந்ததும்,விற்குடி என்னும் கிராமம் வரும்;அந்த கிராமத்தின் மையத்தில் இந்த வீரட்டானம் அமைந்திருக்கிறது.
மூலவர்:ஸ்ரீஜலந்தராசுரவத மூர்த்தி திருவழுவூர்கயமுகாசுரனைக் கொன்டு அவன் யானைத் தோலைப் போர்த்த திருத்தலம், திருவழுவூர் வீரட்டானேசுவரர் கோயில் ஆகும். மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் எட்டாவது கி. மீ. தூரத்தில் வழுவூர் பேருந்து நிறுத்தம் அமைந்திருக்கிறது. இந்த நிறுத்தத்தில் இறங்கி, சுமார் ஒரு கி.மீ.தூரத்துக்கு உள்ளே பயணித்தால் மிகப்பிரம்மாண்டமான ஆலயத்தைக் காணலாம். சபரிமலையில் அமர்ந்திருக்கும் பந்தளராஜா பிறந்த ஊர் இதுதான். ஐயப்பன் பிறந்த ஸ்தலமே இந்த வழுவூர். திருக்குறுக்கை![]() காமதகனத் திருவிளையாடலை ஈசன் புரிந்த தலம், கொருக்கை வீரட்டேஸ்வரர் திருக்கோயில்.
மயிலாடுதுறை எனப்படும் மாயவரத்திலிருந்து சுமார் எட்டுகி.மீ.தூரம் பயணித்து,அங்கிருந்து மணல்மேடு செல்லும் சாலையில் சுமார் மூன்று கி.மீ.தூரம் சென்றால் உள்ளடங்கிய கிராமமான கொறுக்கைக்குள் அமைந்திருக்கிறது. மூலவர்: வீரட்டேஸ்வரர் மூலவள்: ஞானாம்பிகை திருக்கடவூர்மார்க்கண்டேயனுக்காக இயமனை அழித்த தலம், திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்.
இந்தக் கோவிலின் புராதனப்பெயர் வில்வாரண்யம். மூலவர்: அமிர்தகடேஸ்வரர் மூலவள்:அபிராமி
பிற தகவல்கள்இந்த எட்டுத் தலங்களையும் ஒரு தனிப்பாடலானது பின்வருமாறு குறிப்பிடுகின்றது.[2] பூமன் சிரங்கண்டி அந்தகன் கோவல் புரம்அதிகை மாமன் பறியல் சலந்தரன் விற்குடி மாவழுவூர் காமன் குறுக்கை யமன்கட வூர்இந்தக் காசினியில் தேமன்னு கொன்றையும் திங்களும் சூடிதன் சேவகமே அடிக்குறிப்புகள் |
Portal di Ensiklopedia Dunia