திருவிளையாடல் புராணம்திருவிளையாடல் புராணம் என்பது சிவபெருமானது திருவிளையாடல்களைக் கூறும் பரஞ்சோதி முனிவர் எழுதிய நூல் ஆகும். சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து செய்த திருவிளையாடல்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.[1] ஆசிரியர் குறிப்புபரஞ்சோதி முனிவர் திருமறைக்காடு (வேதாரண்யம்) என்னும் ஊரில் மீனாட்சி சுந்தர தேசிகர் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர். மதுரையில் சத்குருவை ஏற்று சைவ சந்நியாசம் பெற்றார். மதுரை மீனாட்சியம்மை பராசக்தி பரஞ்சோதி முனிவரின் கனவில் தோன்றிச் சிவபெருமானின் திருவிளையாடல்களைப் பாடும் படி கூறியமையால் இந்நூலைப் பரஞ்சோதியார் இயற்றியதாக நம்பப்படுகிறது. இவர் இயற்றிய வேறுநூல்கள்:
இவரது காலம்:கி.பி.17-ஆம் நூற்றாண்டு என்பர். நூல் அமைப்புமதுரையில் சிவபெருமான் செய்த திருவிளையாடல்கள் பற்றி ஹாலாஸ்ய மகாத்மியம் என்னும் வடமொழி நூலில் சொல்லப்பட்டுள்ளது. வியாசர் இயற்றிய ஸ்கந்த புராணத்தில் இந்த லீலைகள் சொல்லப்பட்டுள்ளன. நந்தி தேவர் சனத்குமார முனிவருக்கு இந்த லீலைகள் பற்றிச் சொன்னார் என்றும், அதை வியாசருக்குச் சனத்குமாரர் சொன்னார் என்றும், வியாசர் அதை ஸ்கந்தபுராணத்தில் எழுதினார் என்றும் வழங்கப்படுகிறது. ஹாலாஸ்ய மகாத்மியத்தைப் பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழி பெயர்த்தார். அதை அப்படியே மொழி பெயர்க்காமல், தமிழுக்கே உரித்தான செய்யுள் நடையில் 3363 செய்யுள்களாக வடித்தார். இதில் முதல் 343 செய்யுள்கள் காப்பு, மதுரை நகர சிறப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது. 344-ஆவது செய்யுள் முதல் தான் பெருமானின் திருவிளையாடல் தொடங்குகிறது. திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன,. மதுரைக்காண்டம் - 18 படலங்கள் கூடற்காண்டம் - 30படலங்கள் திருவாலவாய்க் காண்டம் - 16 படலங்கள் காப்பிய உறுப்புகள்
படலங்கள்முதல் பகுதியான மதுரைக் காண்டம் இந்திரன் பழி தீர்த்த படலம் முதல் வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் வரை 18 படலங்களைக் கொண்டுள்ளது. அடுத்த கூடற் காண்டம் நான்மாடக் கூடலான படலம் முதல் நாரைக்கு முத்தி கொடுத்த படலம் வரையான 30 படலங்களையும், மூன்றாவது பகுதியான திருவாலவாய்க் காண்டம் திருவாலவாயான படலம் முதல் வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம் வரை 16 படலங்களையும் கொண்டுள்ளது. ஆக மொத்தம் 64 படலங்கள் அமைந்துள்ளன. 64 திருவிளையாடல்கள்திருவிளையாடற்புராணத்தில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் தனித்தனிப் படலங்களாக விளக்கப்பட்டுள்ளன.
நூல் சிறப்புஇந்நூல் மதுரையின் தலபுராணமாகவும் போற்றப்படுகிறது. வரலாறுசிவபெருமான் உமாதேவியாருக்கு சங்கர சங்கிதையை அருளிச்செய்தார்.முருகப்பெருமான் அதனை அகத்திய முனிவருக்கு அருளினார். அகத்திய முனிவர் பிற முனிவர்களுக்கு எடுத்துக்கூறினார்.திருவிளையாடற் புராணங்களில் மூர்த்தி, தல, தீர்த்த விசேடமுள்ள திருப்பூவணத்துடன் (மதுரைக்கு அருகில் உள்ள திருப்புவனம்) தொடர்புடைய பகுதிகள் எடுத்துரைக்கப் பெற்றுள்ளன.இத்தலத்திலே சிவபெருமான் புரிந்த 64 திருவிளையாடல்கள் இப்புராணத்தில் விபரிக்கப்பட்டுள்ளன. நான்கு திருவிளையாடல் புராணங்கள்நான்கு திருவிளையாடற் புராணங்கள் உள்ளன. இவற்றுள் புலியூர் நம்பி என்பவரும் பரஞ்சோதி முனிவர் என்பவரும் ஆக்கியவையே குறிப்பிடத்தக்கவை. பரஞ்சோதி முனிவர் எழுதியது சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது.
அடிக்குறிப்பு
|
Portal di Ensiklopedia Dunia