அண்ணாமலை (திருவண்ணாமலை)
அண்ணாமலை (IAST: Aṇṇāmalai, "சிவப்பு மலை") என்பது தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் அமைந்துள்ள 2,668 அடி உயரமுள்ள புனிதக் குன்றாகும். இது அருணாச்சலம், அருணகிரி, அருணை, சோனகிரி மற்றும் சோனாச்சலம் போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது தென்னிந்தியாவிலுள்ள ஐந்து முக்கிய சைவ சமய புனித இடங்களில் ஒன்றாகும்.[1] அண்ணாமலையார் கோயில் திருவண்ணாமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள சிவத் தலமாகும்.[2] ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் (நவம்பர்-டிசம்பர்), கார்த்திகை தீபம் இந்த மலையின் உச்சியில் ஏற்றப்படுகின்றது. இரமணர், சேசாத்திரி, விசிறி சாமியார் போன்ற எண்ணற்ற சாமியார்கள் இந்த மலையைச் சுற்றி ஆசிரமங்களை அமைத்து வாழ்ந்துள்ளனர். அவர்களின் சமாதிகள் மலையைச் சுற்றி அமைந்துள்ளன. இது இரமணரின் பக்தர்களுக்கு முக்கியமான இடமாகும் இரமண ஆசிரமம் இம்மலையின் அடிவாரத்தில் உள்ளது. சமய நூல்களில் அருணாசலத்திற்கான குறிப்புகள்கோயிலுடன் தொடர்புடைய புராணத்தின்படி படைக்கும் கடவுளான பிரம்மனுக்கும், காக்கும் கடவுளான விசுணுவுக்கும் இடையில் ஒரு சர்ச்சை ஏற்படுகிறது. இந்த வாதத்தை தீர்ப்பதற்குச் சிவபெருமான் ஒளியாக அருணாசல வடிவில் வெளிப்பட்டதாகக் கூறப்படுகிறது.[3] வேதங்கள் மற்றும் புராணங்களின் கருத்துப்படி, இந்து கடவுளர்களின் முதன்மையானவர்களான பிரம்மாவும் விசுணுவும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். சிவபெருமானின் சக்தியினால் ஐந்து தெய்வீக செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்படும் என்பதை உணரவில்லை. பகவான் சிவன் பிரம்மன், விசுணு, ருத்ரன், மகேசுவரன், சதாசிவன் ஆகியோருக்கு தெய்வீக செயல்களை பஞ்சகிருத்யா கர்மங்கள் செய்யும்படி அறிவுறுத்தினார். அவர்கள் 'பஞ்சகாத்யா' அல்லது ஐந்து கடமைகளை நிறைவேற்ற கடமைப்பட்டவர்கள்.
ஆனால் பிரம்மனும், விஷ்ணுவும் தங்களது உயர்ந்த புனிதமான பணிகளை மறந்து, ஒருவருக்கொருவர் போட்டியிட்டனர். இதற்கு தீர்வுகாண சிவபெருமான் தனது தலையையும், பாதத்தையும் காண்பவரே உங்களுள் பெரியவர் என்று கூறி வானத்திற்கும், பூமிக்குமாய் சோதியாய் எழுந்தார். சிவனும், விஷ்ணுவும் எவ்வளவு முயன்றும் அடிமுடி காணாமல் தோல்வியுற்றனர். இதையடுத்து வெப்பத்தை தாங்கமுடியாத தேரவர்களு சிவபெருமானை அமைதி பெறும்படி வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், ஓர் மலையாய் அடங்கி சிறிய ஜோதியாய் அதன் உச்சியில் தென்பட, அனைவரும் வணங்கினர். அந்த இடமே அக்கினி தலமான இந்த அருணாச்சலம் என்னும் திருவண்ணாமலையாக கருதப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை மாதத்தில் இந்த மலையின்மீது கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. பல்லாயிரக்கணக்கானோர் அன்று திருவண்ணாமலை நகரில் குவிகின்றனர். கிரிவலம்இதனாலே இம்மலை சிவபெருமானின் ஒரு வடிவமாக நம்பப்படுகிறது. எனவே இங்கு கிரிவலம் என்பது மலையை வலம் வருவது மட்டுமல்லாமல், சிவபெருமானையும் வலம் வருவதாக கருதப்படுகிறது. இந்த மலைப்பாதையின் சுற்றளவு 14 கிலோ மீட்டர். பவுர்ணமியில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த மலைப்பாதையில் வலம் வருகிறார்கள். கிரிவலம் வரும்போது சித்தர்கள் ரூபமாகவோ அரூபமாகவோ இங்கு உடன் வலம்வரக் கூடும் என்றும் அவர்களின் காற்று நம்மீது பட்டால் அது நமக்குப் பெரும் நன்மைகளை விளைவிக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.[4] கிரிவலத்தின்போது கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்கங்களைக் காணலாம். ஒவ்வொருவரும் தனி சன்னிதிகளைக் கொண்டுள்ளனர். ஒரு சன்னிதியைத் தரிசித்த பிறகு மேலும் சிறிது கிரிவலம் வந்த பிறகு அடுத்த சன்னிதியைத் தரிசிக்கலாம் எனும் வகையில் இவை அமைந்துள்ளன.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia