அனாதைப் பெண் (திரைப்படம்)
அனாதைப் பெண் (Anaadhai Penn) என்பது 1938 ஆம் ஆண்டு ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, டி. ஏ. சுந்தராம்பாள் ஆகியோர் நடித்திருந்தார். அப்போது வளர்ந்துவரும் நடிகராக இருந்த பி. யு. சின்னப்பா எதிர்மறைப் பாத்திரத்தில் நடித்திருந்தார். கொத்தமங்கலம் சுப்பு நகைச்சுவை வேடத்தில் நடித்தார்.[1] இப்படமானது வை. மு. கோதைநாயகியின் அனாதைப் பெண் என்ற புதினத்தின் தழுவலாகும்.[2][3] கதைச்சுருக்கம்பாட்டியைத் தவிர யாருமற்ற அனாதையான இந்திராணியும் (டி. ஏ. சுந்தராம்பாள்) வளைதடிப் பந்தாட்ட வீரரான துரைராஜாவும் (எம். கே.ராதா) காதலிக்கின்றனர். ஒரு கட்டத்தில் அவர்களின் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் அதன் விடியலுமே கதை. துரைராஜா மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றுவிடுகிறார். இதன் பிறகு இந்திராணி பல இன்னல்களுக்கு ஆளாகிறாள். வெளிநாடு சென்ற காதலன் திரும்பினானா இந்திராணியின் துன்பம் நீங்கியதா என்பதே கதை. நடிப்புபின்வரும் பட்டியல் தி இந்து[1] மற்றும் பிலிம் நியூஸ் ஆனந்தனின் தரவுத்தளத்திலிருந்து பிலிம் நியூஸ் ஆனந்தனின் தரவு தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டது.
தயாரிப்புஇப்படத்தின் கதை இதேபெயரில் வை. மு. கோதைநாயகியால் புதினமாக எழுதி வெளியானது. ஜூபிடர் பிக்சர்ஸ் புதினத்தை படமாக்க வை. மு. கோதைநாயகியிடம் கேட்டது. பட நிறுவனத்திடம் இரண்டு கோரிக்கைகளை அவர் வைத்தார். அதில் ஒன்று எம். கே. ராதாவை நாயகனாக நடிக்கவேண்டும் என்பது. அடுத்து படம் தயாரிப்பில் இருக்கும்போது அவ்வப்போது தனக்கு காட்டவேண்டும் என்பது. வை. மு. கோதை நாயகி கதை எழுதியபோது எம். கே. ராதாவை மனதில் கொண்டே அப்பாத்திரத்தை எழுதினாராம். அவரின் கோரிக்கையை தயாரிப்பு நிறுவனம் ஏற்றுக் கொண்டது. எம். கே. ராதா படத்தில் பாத்திரத்திற்கு முழுமையாக பொருந்தினார். படம் வெளியான பிறகு பல இளைஞர்கள் அவரது நடை உடையைப் பின்பற்றத் தொடங்கினர். கொத்தமங்கலம் சுப்பு இப்படத்தில் எஸ். எம். சுப்ரமணியம் என்று அழைக்கப்பட்டார்.[1] பாடல்1930களில் பெரும்பாலான திரைப்படங்களுக்கு தனி இசையமைப்பாளர் கிடையாது. பாடலாசிரியரே இசையோடு எழுதவேண்டும் மேலும் கலைஞர்கள் பாடல்களைப் பாடினர், நிறுவனத்தின் இசைக்குழு பின்னணி இசையை அமைத்தது. இந்த படத்தின் பாடல்களை பாபநாசம் சிவன் எழுதினார்.
வரவேற்புஇப்படம் கல்லாகட்டி வெற்றி பெற்றது. திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டார் கை எழுதிய படம் "நினைவில் உள்ளது: ராதாவின் நடிப்பு மற்றும் அவரின் ஆடை அணியும் விதம் அந்த நாட்களில் இளைஞர்களை ஈர்ப்பதாக மாறியது மேலும் கொத்தமங்கலம் சுப்புவின் நகைச்சுவை இரசிகர்களை கவர்ந்தது." மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia