எம். கே. ராதா
எம். கே. ராதா என்ற பெயரில் புகழ் பெற்ற, மெட்ராஸ் கந்தசாமி ராதாகிருஷ்ணன் (20 நவம்பர் 1910 - 29 ஆகத்து 1985), இந்தியத் தமிழ் நாடக மற்றும் திரைப்பட நடிகர். ஜெமினி நிறுவனத்தில் நிரந்தர நடிகராகப் பணியாற்றியவர். இவர், அபூர்வ சகோதரர்கள் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து முத்திரை பதித்தார். மொத்தம் 50 திரைப்படங்களில் நடித்தார்.[1] இளமைக் காலம்எம். கே. ராதா சென்னை, மைலாப்பூரில் எம். கந்தசாமி முதலியார் என்பவருக்குப் பிறந்தார். நாடகம்தன் தந்தை கந்தசாமி முதலியாரின் நாடகக் குழுவில் சேர்ந்து, எம். ஜி. ஆருடன் எம். கே. ராதா நடித்து வந்தார். திரைப்படம்1936இல் எஸ். எஸ். வாசன் எழுதிய சதிலீலாவதி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அப்படத்தில் எம். ஜி. ஆர். ஒரு சிறு வேடத்தில் நடித்தார். பின்னர் மாயா மச்சேந்திரா, துளசிதாஸ் ஆகிய படங்களில் ராதா நடித்தார். அதை அடுத்து தவமணிதேவியுடன் வனமோகினி திரைப்படத்தில் நடித்தார். ஜெமினியின் தாசி அபரஞ்சி, கண்ணம்மா என் காதலி முதலான படங்களில் ராதா நடித்தார். 1948இல் ஜெமினியின் சந்திரலேகா படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின்னர் இந்தியில் தயாரிக்கப்பட்ட சந்திரலேகாவிலும் கதாநாயகனாக நடித்தார். ஜெமினியின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் எம். கே. ராதா கதாநாயகனாக, பானுமதியுடன் இணைந்து இரட்டை வேடத்தில் நடித்தார். பின்னர் ஜெமினியின் சம்சாரம் படத்தில் புஷ்பவல்லியுடன் இணைந்து நடித்தார். ஜெமினியின் அவ்வையார் திரைப்படத்தில் பாரி மன்னனாக நடித்தார். பின்னர் நல்லகாலம், போர்ட்டர் கந்தன், கற்புக்கரசி, வணங்காமுடி, பாசவலை, கண்ணின் மணிகள் முதலிய படங்களில் நடித்தார். பிற திரைப்படங்கள்
விருதுகளும் சிறப்புகளும்
குடும்பம்எம்.கே.ராதாவுக்கு ஞானாம்பாள், ரத்தினம் என்ற 2 மனைவிகள். 6 மகன்கள், 2 மகள்கள். மறைவு1985 ஆகத்து 29 அன்று மாரடைப்பால் காலமானார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia