அனில் காகோட்கர்
அனில் காகோட்கர் (Anil Kakodkar) என்பவர் பிறப்பு 11 நவம்பர் 1943) ஓர் இந்திய அணு விஞ்ஞானி மற்றும் இயந்திரவியல் பொறியியலாளர் ஆவார். இவர் 1943 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் நாள் பிறந்தார். இந்திய அணுசக்தி துறையின் தலைவராக பணியாற்றிய இவர், இந்திய அரசாங்கத்தின் செயலாளராகவும் இருந்துள்ளார். மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக 1999 ஆண்டு முதல் 2000 ஆண்டுவரை செயலாற்றினார். இவர் 2009 ம் ஆண்டு சனவரி 26 இல் இந்திய அரசின் இரண்டாம் உயரிய விருதான பத்ம விபூசண் விருதைப் பெற்றார். இந்தியாவின் அணு ஆயுத சோதனைகளில் முக்கிய பங்கு வகித்ததைத் தவிர காகோட்கர் அணு ஆற்றலுக்கு தோரியத்தை எரிபொருளாகப் பயன்படுத்தும் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்வதிலும் முக்கியப் பங்காற்றினார். இளமைக் காலம்இந்திய அணுவிஞ்ஞானியான அனில் காகோட்கர் 1943 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் நாள் மத்தியபிரதேசத்தில் உள்ள பர்வானியில் பிறந்தார். இவரது பெற்றோர் கமலா காகோட்கர் மற்றும் புருசோத்தம் காகோட்கர் ஆவர். இவர்கள் இருவரும் காந்தியவாதிகள் ஆவர். படிப்புஇவர் பள்ளிப்படிப்பை பர்வானி மற்றும் மும்பையில் முடித்தார். கல்லூரிப்படிப்பை மும்பை ரூபாரேல் கல்லூரியில் பயின்றார். மேலும் 1963 இல் பொறியியலில் இயந்திரவியல் பிரிவில் பட்டம் பெறுவதற்காக மும்பை வீரமாதா ஜிஜாபாய் தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்தார். அனில் காகோட்கர் 1964 இல் மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் சேர்ந்தார். வேலை மற்றும் சாதனைகள்வேலை மற்றும் சாதனைகள்பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் அணுஉலை பொறியியல் பிரிவில் காகோட்கர் சேர்ந்தார். முற்றிலும் உயர் தொழில்நுட்பத் திட்டமான துருவா அணு உலை வடிவமைப்பிலும் கட்டுமானத்திலும் இவர் முக்கியப்பங்கு வகித்தார். 1974 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட அமைதிக்கான அணுசக்தி சோதனைகளின் முக்கிய குழுவில் இவரும் ஒருவராக இருந்தார். மேலும் இவர் இந்தியாவின் அழுத்தப்பட்ட கனரக நீர் அணு உலை தொழில் நுட்பத்தின் உள்நாட்டு வளர்ச்சி திட்டங்களை வழிநடத்தியுள்ளார். கல்பாக்கத்திலுள்ள இரண்டு அணு உலைகள் மற்றும் ஒரு கட்ட்த்தில் கைவிடப்படுவதாக இருந்த ராவத்பாட்டாவில் உள்ள முதல் அலகு ஆகிய அணு உலைகளைப் புணரமைத்ததில் இவரது பங்கு மகத்தானது. 1996 ஆம் ஆண்டில் அவர் பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராகவும், 2000 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் அணு சக்தி ஆணையத்தை முன்னெடுத்து வருபவராகவும் இந்திய அணுசக்தித் துறையின் செயலாளராகவும் இருந்து வருகிறார். 250 எண்ணிக்கைக்கு மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகளை இவர் வெளியிடுள்ளார். குறிப்பாக மலிவான தோரியம் வளங்களை அணு ஆற்றலுக்கான எரிபொருளாக பயன்படுத்துவதில் இந்தியா தன்னிறைவு அடைமுடியுமென இவர் தீவிரமாக நம்பினார் [2].புளூட்டோனியத்தால் இயங்கும் தோரியம்-யுரேனியம் 233 தனிமங்களை தொடக்கநிலை அணு ஆற்றல் மூலமாகப் பயன்படுத்தும் மேம்பட்ட கன நீர் அணு உலை வடிவமைப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். எளிமையான ஆனால் பாதுகாப்பான தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட தனிப்பட்ட உலை அமைப்பு மூலமாக தோரியத்தில் இருந்து 75 சதவிகித மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும் [3]. டாக்டர் காகோட்கர் பல கமிஷன்கள் மற்றும் பிற அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார். அவற்றில் சில
பெற்ற விருதுகள்தேசிய விருதுகள்
பிற விருதுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia