மும்பை பல்கலைக்கழகம்

மும்பை பல்கலைக்கழகம்
மும்பை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ சின்னத்தை சித்தரிக்கும் ஒரு வரைபடம்
மும்பை பல்கலைக்கழத்தின் இலச்சினை
Other name
மும்பை பல்கலைக்கழகம்
முந்தைய பெயர்
பம்பாய் பல்கலைக்கழகம் (1857-1995)
குறிக்கோளுரைŚīlavṛttaphalā Vidyā (சமசுகிருதம்)
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
“கல்வியின் பயன் நற்குணமும் நேர்மையான நடத்தையும்”.
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்18 சூலை 1857; 167 ஆண்டுகள் முன்னர் (1857-07-18)
நிறுவுனர்
தரநிர்ணயம்தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை
வேந்தர்வேந்தர்
துணை வேந்தர்முனைவர் இரவீந்திராஅ டி. குல்கர்னி
மாணவர்கள்7,579[1]
பட்ட மாணவர்கள்1,459[1]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்5,638[1]
அமைவிடம், ,
இந்தியா

18°58′30″N 72°49′33″E / 18.97500°N 72.82583°E / 18.97500; 72.82583
வளாகம்நகர்ப்புறம்
அனைத்து வாளாகங்களும்: 250 ஏக்கர்கள் (1,000,000 m2)[2]
நிறங்கள்     Saffron[3]
இணையதளம்mu.ac.in

மும்பை பல்கலைக்கழகம் (University of Mumbai) இந்திய மாநிலம் மகாராட்டிரத்தின் தலைநகர் மும்பையில் அமைந்துள்ள ஓர் பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும். உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழக அமைப்புகளில் ஒன்றான இதன் வளாகங்கள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் 549,000 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டுள்ளது.[4][5] 2013 ஆம் ஆண்டு நிலவரப்படி, பல்கலைக்கழகத்தில் 711 இணைப்புக் கல்லூரிகள் இருந்தன.[6]

மும்பை மாவட்டம், மும்பை புறநகர் மாவட்டம், பால்கர் மாவட்டம், ராய்கட் மாவட்டம், இரத்தினகிரி மாவட்டம், சிந்துதுர்க் மாவட்டம், தானே மாவட்டம் போன்ற இடங்களிலும் இதன் அதிகார வரம்பு 7 மாவட்டங்களுக்கு விரிவடைகிறது.[7][8] இந்தப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. பல துறைகளில் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளும் அளிக்கப்படுகின்றன.

வரலாறு

இந்தப் பல்கலைக்கழகம் 1857ஆம் ஆண்டு முனைவர் ஜான் வில்சனால் துவங்கப்பட்டது.[9][10] இந்தப் பல்கலைக்கழகத்தின் வடிவம் பிரித்தானியப் பல்கலைக்கழகங்களை ஒத்து இருந்தது.[9]:188 இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகளின் வழியே கல்வி கற்பிக்கப்பட்டது. புனித சேவியர் கல்லூரி 1868ஆம் ஆண்டு இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு முனைவர் ஜான் வில்சன் முதல் துணை வேந்தராக பொறுப்பேற்றார். அவரது மனைவி மார்கெரெட் பேய்ன் வில்சன் பெண்களுக்காக 16 பள்ளிகளைத் துவங்கினார். துவக்கத்தில் எல்பின்ஸ்டன் கல்லூரி மும்பை பல்கலைக்கழகத்தின் இருப்பிடமாக இருந்தது.

1996ஆம் ஆண்டு ஓர் அரசாணை மூலம் பம்பாய் பல்கலைக்கழகம் என்றிருந்த பெயர் மும்பை பல்கலைக்கழகம் என மாற்றப்பட்டது. இதன் முதன்மை வளாகம் சான்டாகுரூசு பகுதியில் உள்ள கலினாவில் அமைந்துள்ளது. இங்கு நிர்வாக மற்றும் கல்வித்துறைகள் இயங்குகின்றன. மற்றுமொரு வளாகம் மும்பையின் கோட்டைப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு நிர்வாகப் பணிகள் மட்டுமே நடைபெறுகின்றன.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "University Student Enrollment Details". www.ugc.ac.in. Archived from the original on 16 October 2020. Retrieved 10 February 2020.
  2. "Campus". Archived from the original on 2 March 2021. Retrieved 26 November 2020.
  3. "Mumbai University – Colours". Archived from the original on 6 December 2020. Retrieved 26 November 2020.
  4. "Mumbai University records 60% rise in students - Latest News & Updates at Daily News & Analysis". 21 March 2011. Archived from the original on 16 January 2016. Retrieved 20 August 2016.
  5. "Mumbai University records 60% rise in students" : DNA – Daily News and Analysis newspaper article, Monday, 21 March 2011.
  6. With 811 colleges, Pune varsity 2nd largest in country பரணிடப்பட்டது 19 அக்டோபர் 2015 at the வந்தவழி இயந்திரம் The Times of India newspaper article : 4 November 2013
  7. "About SJCEM – St. John College of Engineering & Management" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 13 August 2023. Retrieved 2023-08-13.
  8. "University Of Mumbai". Mumbai University - English (in அமெரிக்க ஆங்கிலம்). 2014-03-07. Archived from the original on 13 August 2023. Retrieved 2023-08-13.
  9. 9.0 9.1 Aroon Tikekar (2006). The Cloister's Pale: A Biography of the University of Mumbai (2nd ed.). Mumbai: Popular Prakashan. ISBN 978-81-7991-293-5.
  10. The despatch of 1854, on General education in India. 7. Adam Street, Strand, London. 1854.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya