அனில் குமார் (பீகார் அரசியல்வாதி)
அனில் குமார் (Anil Kumar) (பிறப்பு 1960) என்பவர் பீகாரைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் திகாரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவர் மற்றும் பீகார் அரசாங்கத்தின் முன்னாள் இணை அமைச்சராகவும் இருந்தார்.[1] ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்விகுமார், பீகாரின் மக்தம்பூரைச் சேர்ந்தவர். இவர் பிரசனந்தன் சர்மாவின் மகன் ஆவார். 1983 ஆம் ஆண்டில் பாட்னா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[2] இவரது சகோதரர் அருண் குமார், ஜகானாபாத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பாரதிய சப்லோக் கட்சியின் தேசியத் தலைவராகவும் உள்ளார். தொழில் வாழ்க்கைஅனில் குமார், ஜித்தன் ராம் மாஞ்சி தலைமையிலான இந்துசுதானி அவாம் மோர்ச்சா கட்சியின் தேசிய துணைத் தலைவராகவும் உள்ளார்.[3] அனில் 2010 பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் திகாரி சட்டமன்றத் தொகுதியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். முன்னதாக, பிப்ரவரி 2005 பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி சார்பாக கோஞ்ச் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.[4][5][6]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia