அன்கோலா
அன்கோலா (Ankola) என்பது இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் வடகன்னட மாவட்டத்தில் ஒரு நகராட்சியும்,வட்டமுமாகும். இந்த இடத்தின் பெயர் கரையோர மலைப்பகுதியில் வளர்க்கப்பட்ட அன்கோலா என்ற வனப் புதரில் இருந்து உருவானது. மேலும், அலக்கி வொக்கலிகர்களின் ஒரு குலக்குறிச் சின்னமாக வணங்கப்படுகிறது. இந்த நகரம் கார்வாரிலிருந்து 33 கி.மீ தொலைவிலும், பட்கலிலிருந்து 57 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. ![]() இது, கோயில்கள், பள்ளிகள், நெல் வயல்கள் மற்றும் மாந்தோப்புகளால் சூழப்பட்ட ஒரு சிறிய நகரமாகும். இது அரபிக் கடலின் கடற்கரையில் அமைந்துள்ளது. மேலும், இயற்கை கடற்கரைகளையும் கொண்டுள்ளது. காரி இஷாத் என்று அழைக்கப்படும் மாம்பழத்தின் சொந்த இடமாகவும், அதன் ஏராளமான முந்திரிகளுக்காகவும் இந்நகரம் பிரபலமானது. [1] நகரத்தில் அமைந்துள்ள சிவு பொம்மு கவுடா நினைவு மருத்துவமனை பக்கவாத நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கும், அருகிலுள்ள தோடூர் எலும்பு முறிவுக்கும் பெயர் பெற்றது. நிலவியல்அங்கோலா 14 ° 39′38 ″ N 74 ° 18′17 ″ E இல் சராசரியாக 17 உயரத்தில் உள்ளது மீட்டர் (55 அடி) அமைந்துள்ளது . கங்கவள்ளி ஆறு (பெட்டி என்றும் அழைக்கப்படுகிறது) நகரத்தின் அருகே பாயும் ஒரு முக்கிய நதியாகும். [2] கோடைக் காலத்தின் வெப்பநிலை 30 ° C க்கும் 35 ° C க்கும் இடையில் இருக்கும். குளிர்கால வெப்பநிலை 20 ° C க்கும் 33 . ° C க்கும் இடையில் குறைகிறது [3] பெலேக்கரி என்பது அருகிலேயே அமைந்துள்ள ஒரு இயற்கை துறைமுகமாகும். இது முக்கியமாக சீனா மற்றும் ஐரோப்பாவிற்கு இரும்பு தாதுவை அனுப்ப பயன்படுகிறது. புள்ளிவிவரங்கள்2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி,[4] மொத்த மக்கள் தொகை 21,079 வீடுகளில் 101,549 என, மொத்தம் 309 கிராமங்கள் மற்றும் 20 பஞ்சாயத்துகளில் பரவியுள்ளது. ஆண்கள் 51,398, பெண்கள் 50,151 ஆகும். பேரூராட்சியின் மக்கள் தொகை 22,249 ஆகும். இதில் 11,034 ஆண்கள், 11,215 பெண்கள். உப்புச் சத்தியாக்கிரகம்1930 ஆம் ஆண்டில், மகாத்மா காந்தியின் உப்பு சத்தியாக்கிரகத்தின் வெற்றிக்குப் பிறகு, கர்நாடகா தானும் சொந்தமாக நடத்த முடிவு செய்தது. ஏப்ரல் 13 அன்று, சுமார் 40,000 பேர் முன்னிலையில் எம்.பி. நட்கர்ணி என்பவர் இங்கு உப்புச் சட்டத்தை மீறினார் . [5] சத்தியாகிரகம் 45 நாட்கள் முழு அளவில் தொடர்ந்தது. கர்நாடகாவின் மங்களூர், குந்தாபுரா, உடுப்பி, புட்டூர், படுபிட்ரே போன்ற கிட்டத்தட்ட 30 மையங்களில் உப்பு சத்தியாகிரகம் நடத்தப்பட்டது. கர்நாடகாவில் தார்வாடு மாவட்டத்தில் உள்ள இரேகேூர் மற்றும் வடகன்னட மாவட்டத்தில் அன்கோலா, சிர்சி மற்றும் சித்தாபுரா ஆகிய நான்கு வட்டங்கள் வரி விலக்கு பிரச்சாரத்தை ஏற்பாடு செய்ய தேர்வு செய்யப்பட்டன. அதிகாரிகளின் அடக்குமுறை நடவடிக்கைகள் இருந்தபோதிலும், பிரச்சாரம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 1930-31 காலப்பகுதியில் உப்புச் சத்தியாகிரகத்தில்பங்கேற்றதற்காக 1500 க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வரலாற்று நிகழ்வுகளால் அன்கோலா "கர்நாடகாவின் பர்தோலி" என்று அழைக்கப்பட்டது. [6] குறிப்புகள்
வெளி இணைப்புகள்![]() விக்கிப்பயணத்தில் Ankola என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது. |
Portal di Ensiklopedia Dunia