அன்னக்கிளி (1976 திரைப்படம்)
அன்னக்கிளி (Annakili) 1976 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுஜாதா, படாபட் ஜெயலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். இதுவே இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த முதற் திரைப்படமாகும்.[1][2] இத்திரைப்படத்தின் பாடல்கள் மிகவும் பிரபலமானது.[3][4] இத்திரைப்படம் கிராமப் பின்னணியுடன் எடுக்கப்பட்டிருந்தது.[2][5] இத்திரைப்படத்தில் தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள், மேற்கத்திய இசையுடனும், கருநாடக இசையுடனும் இணைந்திருந்தன.[6] கதைஆசிரியர் தியாகராஜனை (சிவகுமார்) காதலித்த அன்னக்கிளியைச் (சுஜாதா) சுற்றிய திரைப்படமாகும். சூழ்நிலைகள் காரணமாக, தியாகராஜன் வேறொரு பெண்ணை மணக்கிறார். அழகப்பன் (தேங்காய் சீனிவாசன்), ஒரு பெண்ணியவாதி அன்னக்கிளி பற்றி ஒரு தவறான புரிதலைக் கிராம மக்களிடையே உருவாக்குகிறார்; மீதமுள்ள திரைப்படம் அன்னக்கிளி குற்றமற்றவர் என்பதை எவ்வாறு நிரூபிக்கிறார் என்பதைக் காட்டுகிறது. நடிகர்கள்
பாடல்கள்இத்திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்ததன் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.[7] பாடல் வரிகளை எழுதியவர் பஞ்சு அருணாசலம் ஆவார். இத்திரைப்படத்தில் பஞ்சு அருணாசலம் இராசய்யா என்ற பெயர் கொண்டவரை "இளையராஜா" என்று பெயரிட்டார், ஏனெனில் 1970 களில் மேலும் ஓர் இசையமைப்பாளர் ஏ. எம். ராஜா பிரபலமாக இருந்தார். ஒலிப்பதிவுக்காக, இளையராஜா தமிழ் நாட்டுப்புறக் கவிதை, நாட்டுப்புற பாடல் மெல்லிசைகளுக்கு நவீன பிரபலமான திரைப்பட இசைக்கருவிகளின் நுட்பங்களைப் பயன்படுத்தினார். இது மேற்கத்திய மற்றும் தமிழ்ச் சொற்களின் இணைவை உருவாக்கியது. "மச்சான பார்த்தீங்களா" பாடல், இளையராஜா, அவரது இசைக்குழுவினரால் திரைப்பட வெளியீட்டிற்கு முன்பே ஒரு திருமணத்தில் இசையமைக்கப்பட்டு பாடப்பட்டது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia