செந்தாமரை (Senthamarai) என்பவர் இந்திய மேடை நாடக, திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற திரைப்படங்களில் 300க்கும் மேற்பட்ட படங்களில் ஐம்பது ஆண்டுகளாக நடித்துள்ளார். ம. கோ. இராமச்சந்திரன், சிவாஜி கணேசன், இரசினிகாந்து, பாக்யராஜ், தியாகராஜன் ஆகியோருடன் அதிகமாக ராமராஜனுடனும் செந்தாமரை வில்லனாக நடித்திருந்தார். மலையூர் மம்பட்டியான் மூன்று முகம், தம்பிக்கு எந்த ஊரு, தூறல் நின்னு போச்சு, தனிக்காட்டு ராஜா, குரு சிஷ்யன், எங்க ஊரு பாட்டுக்காரன் போன்ற குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இளமை
செந்தாமரை 1935 ஏப்ரல் 13 அன்று காஞ்சிபுரத்தில் பிறந்தார்.[1] இவரது குடும்பத்தில் இவரது தந்தை திருவேங்கடம், தாயார் வேதம்மாள், சகோதரர் கமலக்கண்ணன் ஆகியோர் அடங்குவர்.[2] செந்தாமரையின் ஏழு வயதில் திருவேங்கடம் இறந்தார். செந்தாமரை சிவாஜி கணேசன் மற்றும் எம். ஜி. ராமச்சந்திரனுடன் இணைந்து பல மேடை நாடகங்களில் நடித்தார்.[3][4]
முன்னணி பாத்திரத்தில்
1980களில் இவர் முக்கியமாக வில்லத்தனமான வேடங்களில் நடித்தார். இந்தக் காலத்தின் பல முன்னணி நடிகர்களுக்கு எதிர் நாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். அந்த ஜூன் 16-ஆம் நாள் (1984) திரைப்படத்தில் இவர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்தார்.
குடும்பம்
தற்போது தமிழ் தொடர்களில் நடித்துவரும் கௌசல்யா என்பவரை செந்தாமரை மணந்தார்.[3][5]
இறப்பு
கல்யாண மாலை என்ற நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது மாரடைப்பால் 1992 ஆகத்து 14 அன்று இறந்தார்.[6]
திரைப்படவியல்
1950
1960 கள்
1970 கள்
1980 கள்
1990 கள்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்